அகமுடைய தேவர், அகமுடைய சேர்வை, அகமுடைய பிள்ளை, அகமுடைய முதலியார், அகமுடைய உடையாரென பல்வேறு வட்டார பட்டபெயர்களால் பல கூறுகளாக சிதறிக்கிடக்கும் உறவுக்குழுக்களை ஒரே கூரையில் ஒன்றிணைக்கும் ஒரு சிறு முயற்சிக்கான தளம் இது!

20.6.14

பழம் நூல்கள் கூறும் அகமுடையார் வரலாறு

அகம்படிமைப் பதினாறாயிரவர் துதி:-

"மல்குபுகழ் நடராசன் வளர்கோயி லகலாது, பல்கிளைஞ ருடனுரிமைப் பணிசெய்யும் பரிவினராய்க், கல்விகளின் மிகுமெல்லைக் கருத்தினராய் நிருத்தனருட், செல்வமலி யகம்படிமைத் திறலினர்தம் பதம்போற்றி...."

- என்று அகமுடையார் சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.

இப்பாடலின் கருத்து:-

மிகுந்தும் சொல்லும் சிவகீர்த்தியையுடைய நடேச மூர்த்தியின் சிவதர்மம் வளரும் திருக்கோயிலை நீங்காமல் பல கிளைஞருடனே தங்களுக்கு. அமைந்த ஊழியங்களைப் பரிவுடனே செய்யும் பக்திமான்களும், கல்விகளினாலே மிகுந்த நிலையான கருத்தை உடையவர்களும், தம்பிரானாருடைய அருளாகிய சம்பத்து மிகுந்த ஞானவீரத்தை உடையவர்களுமாகிய திருவகம்படியரான பதினாறாயிரவர் திருவடிகள் போற்றி!

ஆதாரம்: பொது ஆண்டு 1313ல் உமாபதி சிவாச்சாரியார் எழுதிய "கோயிற்புராணம்" நூலில் இருந்து...