அகமுடைய தேவர், அகமுடைய சேர்வை, அகமுடைய பிள்ளை, அகமுடைய முதலியார், அகமுடைய உடையாரென பல்வேறு வட்டார பட்டபெயர்களால் பல கூறுகளாக சிதறிக்கிடக்கும் உறவுக்குழுக்களை ஒரே கூரையில் ஒன்றிணைக்கும் ஒரு சிறு முயற்சிக்கான தளம் இது!

10.12.14

முக்குலத்தோர் சங்கமாக உருமாறிய அகமுடையார் சங்கம்!

அகமுடையார் சங்கமானது முக்குலத்தோர் சங்கமான வரலாறு!

1926 ல் திருத்துறைப்பூண்டியில் முதல் அகமுடையார் சங்க மாநில மாநாடு நடைப்பெற்றது. இந்த மாநாடு உருவாக,  கரந்தை திரு. உமாமகேசுவர பிள்ளை, பட்டுக்கோட்டை திரு. நாடிமுத்து பிள்ளை, திருத்துறைப்பூண்டி திரு. ராஜகோபால் பிள்ளை, நாகப்பட்டினம்-அந்தணப்பேட்டை திரு. திருஞானசம்பந்த பிள்ளை ஆகிய நால்வரும் முக்கிய பங்கு வகித்தனர்.

பிறகு, அகமுடையார் சங்க மாநில மாநாடு 1929ல் பட்டுக்கோட்டையிலும், 1931ல் மதுரையிலும், 1932ல் இராமநாதபுரத்திலும் நடந்தது.

அனைத்து மாநாட்டிலும் அந்தெந்த பகுதியை சார்ந்த பொதுவானதொரு சிறப்பு விருந்தினரை அழைப்பது வழக்கமாக்கி கொண்டிருந்ததால், இந்த நான்காவது மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக சேதுபதி மன்னர் வகையினரான, நீதிக்கட்சி அமைச்சரான திரு. சண்முகராஜ நாகநாத சேதுபதி கலந்து கொண்டார். அப்போது மாநாட்டில் சேதுபதி வைத்த கோரிக்கையை ஏற்று பின்னால் திரு. சிவனாண்டி சேர்வையின் முன்னெடுப்பால் அகமுடையார் மாநில சங்கமானது, முக்குலத்தோர் சங்கமாக பெயர் மாற்றம் பெற்றது.

டிசம்பர் மாதம் 1933 ல் நடைபெற்ற சென்னை மாநாட்டில், மாநில அகமுடையார் சங்கமானது, முக்குலத்தோர் சங்கமென முழுமையாக உருமாற்றம் பெற்றது. அந்த மாநாட்டின் பெயரானது மூவேந்தர் குல மாநாடு என பெயர் சூட்டப்பட்டிருந்தது.

இன்றைக்கு பவளவிழா கண்டு இயங்கி வரும் தமிழ்நாடு முக்குலத்தோர் சங்கத்திற்கான விதையானது, 1926 ல் உருவாக்கப்பட்ட மாநில அகமுடையார் சங்கத்திடமிருந்து கிடைத்தது என்பது தான் மறுக்க முடியாத, மறக்கடிக்கப்பட்ட வரலாறு. இந்த விருட்சத்தின் பலனான நிழலானது, விதைக்கும் - வேர்க்கும்  கிடைக்கவே இல்லை என்பதுதான் வருத்தமான விசயம்.

27.10.14

அக்டோபர் 24க்கு பின்னாலுள்ள குழப்பங்கள்!

தமிழ் தேசியம் காத்த மாமன்னர் மருதுபாண்டியரின் 213வது நினைவேந்தல் நாளை அனுசரித்து கொண்டிருக்கும் அனைவரும் காளையார்கோவில் நினைவிடத்திற்கும், திருப்பத்தூர் நினைவிடத்திற்கும் உள்ள தொடர்பை விளக்க வேண்டும்.

01. காளையார்கோவிலில் யாருடைய உடல் உள்ளது?

02. மாமன்னர் மருதுபாண்டியர்களை தூக்கிலிட்ட பிறகு தலைகள் துண்டிக்கப்பட்டனவா?

03. காளையார்கோவிலில் உடலே இல்லையா?

04. காளையார்கோவிலில் வெறும் தலை மட்டும் தான் உள்ளதா?

05. காளையார்கோவிலில் ஆசாரியின் உடல் என சிலர் சொல்வதின் உண்மை என்ன?

06. திருப்பத்தூரில் புதைக்கப்பட்ட உடல்கள் யாருடையது?

07. திருப்பத்தூரில் புதைக்கப்பட்ட உடல்களில் தலைகள் இருந்ததா?

08. அக்டோபர் 24க்கும் அக்டோபர் 27க்கும் உள்ள தொடர்பு என்ன?

09. மாமன்னர் மருதுபாண்டியர்களை தூக்கிலிடப்பட்ட நாளான அக்டோபர் 24ம் தேதியை தானே நாம் அனுசரிக்க வேண்டும்?

10. அக்டோபர் 27ம் தேதியை அனுசரிப்பதன் உள் அரசியல் என்ன?

இந்த பத்து கேள்விகளுக்கும் சரியான விடை தெரியாமல் மாமன்னர் மருதுபாண்டியர் நினைவேந்தலுக்கு ஆண்டுதோறும் விழா எடுத்து மட்டும் என்ன பயன்?

6.9.14

ஓணம் பண்டிகைக்கும் அகமுடையாருக்கும் உள்ள தொடர்பு!


தமிழகத்தின் மிகப் பழமையான போர்க்குடிகளில் அகமுடையார்களும் அடங்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை. மறத்தன்மை என்பது மிகவும் உயர்வான ஒன்றாக வரலாற்றில் போற்றப்பட்டுள்ளது. இந்தியப் புராணங்களில் முக்கியமான ஓர் அசுர குல வேந்தன் மகாபலி ஆவான். சோபுரம் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு மகாபலி மன்னன் ஆண்டதாகக் கருதப்படுகிறான். தக்காண பீடபூமி பகுதியில் இவ்வூர் இருந்ததாகக் கருதப்படுகிறது. இங்கிருந்து துளு மொழி வழங்கிய கர்நாடகக் கடற்கரைப் பகுதி வரை ஆண்டதாகவும், வாமன அவதாரம் எடுத்து, விஷ்ணு இம்மன்னனை பாதாள உலகிற்கு அனுப்பியதாகவும் புராணங்கள் குறிப்பிடுகின்றன. இன்றும் கேரளத்தில் தங்கள் குல முதல்வனாகிய மகாபலி பாதாள உலகத்துக்கு அனுப்பப்பட்ட நாளாகிய ஆவணி மாத திருவோண நட்சத்திர நாளை விழாவாகக் கொண்டாடுகின்றனர். அன்றைக்கு ஒருநாள் மட்டும் மகாபலி தமது நாட்டைப் பார்வையிட்டுவிட்டு மீண்டும் பாதாள உலகம் சென்றுவிடுவதாக கருதப்படுகிறது. இந்த ஓண நாளை 'வாமன ஜெயந்தி' என்று இந்து மதப் புராணங்கள் குறிப்பிடுகின்றன.

தமிழ்நாட்டிலும் கி.பி. 6ஆம் நூற்றாண்டிலிருந்து 15-16ஆம் நூற்றாண்டு வரை வெவ்வேறு பகுதிகளில் 'மகாபலி வாணாதிராயர்கள்' என்ற சிற்றரச வம்சத்தவர் ஆண்டுள்ளனர். இவர்கள் தம்மை வெட்டுமாவலி அகம்படியர் என்று கூறிக்கொண்டுள்ளனர் (ஆதாரம்: கணக்கன் கூட்டத்தார் பட்டயம், பக்கம் 233-243, கொங்கு நாட்டுச் சமுதாய ஆவணங்கள், பதிப்பாசிரியர்: செ. இராசு, தமிழ் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், 1991). இந்திய வரலாற்றில் மகாபலி சக்கரவர்த்தி மறைக்கமுடியாத ஒரு வரலாற்றுப் பாத்திரமாவார். பாரத நாடு என்ற பெயரையே 'மகாபலி தேசம்' என்றுதான் சொல்ல வேண்டும் என்ற கோரிக்கைகூட ஒரு காலகட்டத்தில் எழுந்ததுண்டு. மகாபலியிடமிருந்து, வாமன அவதாரமெடுத்து விஷ்ணு நாட்டைப் பற்றிக் கொண்டார் என்ற கதையின் பின்னணி சுவையானது. மகாபலி 99 அஸ்வமேத யாகங்கள் செய்து முடித்து விட்டான். 100ஆவது அஸ்வமேதம் செய்து முடித்துவிட்டால் இந்திர பதவியை அடைந்து விடுவான். எனவே, மகாபலியின் இந்த முயற்சிக்கு இடையூறு விளைவிக்கத் திட்டமிட்ட இந்திரன் விஷ்ணுவைத் தூண்டிவிட்டு நினைத்ததைச் சாதித்துக் கொண்டான் என்பதே புராணம். இந்திர பதவியை மயிரிழையில் தப்ப விட்டுவிட்டாலும்கூட மகாபலி வம்சத்தவர்கள் பலீந்திரன் வம்சத்தவர்கள் என்றே தங்களைக் குறிப்பிட்டுக்கொள்கிறார்கள்.

இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட வரலாற்றுக் காலத்தில் இந்தியாவை ஆண்ட மன்னர்கள் (அயோத்தியை ஆண்ட ராமன் வம்சத்தவரும், குருக்ஷத்திரத்தை ஆண்ட பாண்டவ கெளரவ வம்சத்தவர் உள்ளிட்ட மன்னர்களும்) சூரிய, சந்திர குலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். தமிழ்நாட்டைப் பொருத்தவரை சோழர்கள் சூரிய குலத்தவர்கள். பாண்டியர்கள் சந்திர குலத்தவர்கள். சேரர்களும் சந்திர குலத்தின் கிளைக் குலத்தவரே. சேரர்களில் உதியன் சேரலாதன் மகாபாரதப் போரில் இறந்த சந்திர குல வீரர்களைத் தனது முன்னோராகக் கருதினான் என்று சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம். இவர்களைத் தவிர வரலாற்றில் பரமார மன்னர்கள் போன்றவர்களும், செளகான் போன்ற ராஜபுத்திர குலத்தைச் சேர்ந்தவர்களும் அக்கினி குல க்ஷத்திரியர்களாகத் தங்களைக் குறிப்பிட்டுக் கொள்கின்றனர்.

ஐப்பசி திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம். சங்ககால ஏடுகளில் விஷ்ணுவின் பிறந்தநாளகவும் வாமணன் அவதரித்ததும் அன்று தான் எனவும் குறிப்புகள் உள்ளன. பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மதுரைகாஞ்சியில் பாண்டிய மக்கள் பத்து நாட்களாக எவ்வாறு கொண்டாடினார்கள் என மாங்குடி மருதனார் விவரிக்கிறார்.

“கணம் கொள் அவுணர் கடந்த பொலம் தார்
மாயோன் மேய ஓண நன் நாள்
கோணம் தின்ற வடு வாழ் முகத்த
சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை
மறம் கொள் சேரி மாறுபொரு செருவின்
மாறாது உற்ற வடு படு நெற்றி
சுரும்பார் கண்ணி பெரும் புகல் மறவர்
கடு களிறு ஓட்டலின் காணூநர் இட்ட
நெடுகரை காழகம் நிலம் பரல் உறுப்ப
கடுங்கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர…"

- மதுரைக் காஞ்சி (அடிகள் 590 முதல் 599 வரை)

“எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு வோணத் திருவிழவில்
அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை
பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்று பாடுதமே”

- பெரியாழ்வார் திருமொழி 6

“மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய்”

- திருஞானசம்பந்தர், தேவாரம் 503, திருமறை 2

இன்று அத்திருவிழா தென் தமிழகத்திலும் கோவில்களோடும் நின்றுவிட்டது. பாண்டியன் ஆட்சி செய்த கேரளத்தில் ஓணம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதைக் கேரளாவின் "அறுவடைத் திருநாள்" என்றும் அழைப்பர். மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்கள் ஓணமாகக் கொண்டாடப்படுகிறது. ஓணம் ஓராயிரம் ஆண்டுகளாகக் கேரளாவில் கொண்டாடப்பட்டு வரும் ஒரு முக்கியமான பண்டிகையென (கி.பி 861 தேதியிட்டுக் கிடைத்த தாமிரத்தகட்டில்) ஓணம் பண்டிகைபற்றிப் பொறிக்கப்பட்டுள்ளது.

ஓணம் திருநாள் கொண்டாடப்படும் 10 நாட்களும் மக்கள் அதிகாலையிலெ எழுந்து குளித்து வழிபாட்டில் ஈடுபடுவர்.கசவு என்று சொல்லக்கூடிய சுத்தமான வெண்ணிற ஆடை உடுத்துவர். வீட்டுப் பெண்கள் வீட்டின் முன்பு 10 நாட்களும் தொடர்ந்து பூக்களினால் ஆண கோலங்கள் இட்டு ஆடிப்பாடி மகிழ்வர். நடைபெறும் திருவிழாவில், ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனி பெயர் கொடுத்துக் கொண்டாடுகிறார்கள்.

ஓணம் பண்டிகையின் முதல் நாள் அத்தம் , இரண்டாம் நாள் சித்திரா, மூன்றாம் நாள் சுவாதி என்றும் அழைக்கப்படும். அன்று மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள் அளித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர். நான்காம் நாளான விசாகத்தில், ஒன்பது சுவைகளில் உணவு தயார் செய்யப்படுகிறது. குறைந்த பட்சம் 64 வகையான உணவு வகை இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும். இவ்வுணவினை ஓண சாத்யா என அழைப்பர். ஐந்தாம் நாள் அனுஷம் (அனிளம்) எனப்படும். அன்று, கேரளாவின் பாரம்பரியமான படகுப்போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் பங்கு பெறுவோர் வஞ்சிப்பாட்டு என்ற பாடலைப் பாடிக்கொண்டு படகைச் செலுத்துவது இதன் சிறப்பம்சம். ஆறாம் நாள் திருக்கேட்டை(திரிக்கேட்டா) , ஏழாம் நாள்மூலம். எட்டாம் நாள் பூராடம். ஒன்பதாம் நாள் உத்திராடம் என்று அழைக்கப்படும். பத்தாம் நாள் திருவோணம் என்ற கொண்டாட்டத்துடன் ஓணத் திருவிழா முடிவடைகிறது.

மகாபலி என்ற மன்னர் கேரளத்தை சிறப்போடு ஆண்டு வந்தார். தானம், தருமங்கள் செய்வதில் சிறந்து விளங்கிய இந்த மன்னன் ஒருமுறை வேள்வி செய்யும்போது திருமால் வாமணனாக (குள்ள உருவில்) உருவெடுத்து வந்து மூன்றடி மண் கேட்டார். மகாபலியும் தந்தான். ஒரு அடியால் இந்தப் பூமியையும் மறு அடியால் விண்ணையும் அளந்த திருமாலுக்கு மூன்றாவது அடிக்காகத் தனது தலையையேக் கொடுத்தான் பலி மகாராஜா. அவனுக்கு முக்தி அளிக்க வேண்டி அவன்தலையில் கால் வைத்து அவனைப் பாதாள உலகிற்கு தள்ளினார் திருமால். தான் நாட்டுமக்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதால் வருடம் ஒருமுறை பாதளத்திலிருந்து தனது நாட்டுக்கு வந்து மக்களைக் கண்டு மகிழும் வரம் வேண்டினான் மன்னன். அதன்படி, ஒவ்வொரு திருவோணதிருநாள் அன்று மகாபலி பாதாள உலகிலிருந்து பூலோகதிற்கு வருவதோடு, தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாகக் கேரள மக்கள் நம்புகிறார்கள் இதனை நினைவு கூர்ந்து, மகாபலியை மீண்டும் வரவேற்கும் வகையில் இந்தத் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

ஓணம் பண்டிகையின் சிறப்பம்சம், மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாகக் கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலில் போடப்படும் "அத்தப்பூ" என்ற பூக்கோலம் ஆகும். கேரளாவில் ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதமாகும் அதனால் இக்காலத்தில் வரும் ஓணத்திருநாளையும் மக்கள் பூக்களின் திருவிழாவாகக் கொண்டாடுவர் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஆண்பிள்ளைகள் அத்தப்பூ என்ற பூவைப் பறித்துக் கொண்டு வருவர். பூக்கோலத்தில் அதைத்தான் முதலில் வைக்க வேண்டும் என்பது ஐதீகம்.

தமிழ்க் கல்வெட்டுகளில் வர்ம சிகிச்சை முறை, ‘அங்க வைத்தியம்' அல்லது ‘அங்க வைஜ்யம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்றைய நடைமுறைப்படி அங்க வைத்யக் கல்வியும் பயிற்சியும் அரச குலத்தார்க்கும் அதிகார வர்க்கத்துக்கும் மட்டுமே உரியவையாகப் பராமரிக்கப்பட்டு இரகசியம் காக்கப்பட்டு வந்திருக்க வேண்டு மென்று நாம் புரிந்துகொள்ள முடிகிறது. அகம்படியர் மரபினரும், சத்திரிய - பிராம்மண வர்ணக் கலப்பில் தோன்றிய உயர்குடி மருத்துவர்களுமே அங்க வைத்யர்களாக இருந்திருக்க வேண்டும்.

தமிழகத்தில் ’வெட்டுமாவலி அகம்படியர்’ சமூகத்தவர் தமது பூர்வபந்தங்களைத் தொடர்ந்து வந்ததால் ‘குடி படை'களாக நீடித்தனர். ஆனால், கேரள மாநிலத்தில் சாமந்தச் சிற்றரசர்களின் மரபைப் பின்பற்றி நம்பிதிருப்பாதம் (நம்பூதிரிபாத்) பிராம்மணர்களுடன் சம்பந்த உறவு கொண்டு முதன்மையான அதிகார வர்க்கமாக உருவெடுத்த அகம்படிய நாயர் சமூகத்தவர், தன்வந்திரியை மூலவராகக் கருதும் ஆயுர்வேத மருத்துவத் துறையின் ஒரு பிரிவாக வர்ம சிகிச்சை முறையை மாற்றினர்.

இப்படியான அகமுடையார்களுக்கு சம்பந்தப்பட்ட திருவோணத்திருநாளை வெறும் கேரள பண்டிகையாக மட்டும் சிறுமைப்படுத்தி வைத்திருப்பது வேறுயாருமல்ல, அகமுடையார் சமூகத்தினரும் தான் என்பதை இனியாவது புரிந்து கொள்வோம். வரலாற்றை தெரிந்து கொள்வோம்.

அனைவருக்கும் திருவோணத்திருநாள் வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

நன்றி & ஆதார தரவுகள்: தமிழினி இதழ், திண்ணை, தமிழ் விக்கிபீடியா, கணக்கன் கூட்டத்தார் பட்டயம், கொங்கு நாட்டுச் சமுதாய ஆவணங்கள்.

28.8.14

சேரலப் பேரரசு:


'சேர்வை' என்ற பட்டத்தின் முன் வடிவம் 'சேரல்' என்பதே! சேரல மன்னர்கள் தங்கள் பெயருக்கு முன்னும் பின்னும்
*சேரலாதன்
*இளஞ்சேரல்
*பெருஞ்சேரல்
*நெடுஞ்சேரல்
என்று பட்டத்தை மாறி மாறி இட்டு வழங்கி வந்திருப்பதை
காண முடிகின்றது.

சேரல நாடு - "சேரலம்" இன்றோ அது திரிந்த நிலையில் கேரளம்! கேரளா!

மன்னர் சூடிய 'சேரல்' பட்டம் பின்னாளில்
சேரல்காரர்!
சேரலக்காரர்!
சேர்லக்காரர்!
சேர்வக்காரர்!
பின்பு 'சேர்வை' எனவாகி நிற்கின்றது!

சேரலத் தமிழ் 'மலையளம்' என தனி வடிவ மொழியாக
உருவெடுத்ததால் சேரல வம்சம் சேர்வையாக மட்டும்
தமிழ் நாட்டில் நின்று போனது!

-Sasi Bala-

20.8.14

மருதுபாண்டியர்களின் உடல்!

மருதுபாண்டியர்களின் உடல் இங்கு (திருப்பத்தூர் ஸ்வாடிஷ் மருத்துவமனை அருகில்) தான் அடக்கம் செய்யப்பட்டது என்பதற்கு இது தான் காலத்தால் அழியாத வரலாற்று சுவடு.

காளையார்கோவிலில் தான் அடக்கம் செய்தார்கள் என்பதற்கு அதிகாரப்பூர்வ அடையாளங்கள் எதுவுமே அங்கே இல்லையே.

அரசியல் சூழ்ச்சிகளை உடைத்து திருப்பத்தூரில் அக்டோபர் 24ல் நடைபெறும் அரசு விழா மற்றும் குருபூஜை விழாக்களில் கலந்து கொள்வோம்.

நாட்டுக்காக உயிரையே தியாகம் செய்த நம் முப்பாட்டன்கள் மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு மரியாதை செய்வோம்.

3.7.14

அகம் - ஆய்வு!

அறிவுசார் அகமுடையார் சான்றோரே!

இறை உருவாக்கிய அமிழ்தினும் இனிய தமிழ் ஒன்றில்தான் "உயிர்" எழுத்துக்கள். ஒவ்வொன்றும் வெற்று எழுத்தாய் இல்லாமல் பொருள் குறித்த சொல்லாக விளங்குகின்றன. சொல் ஒவ்வொன்றும் வெறும் குறியீடாய் இல்லாமல் சொல்லே பொருளாக விளங்குவது தமிழ் மொழி மட்டிலும்தான் என்பதை நாமறிவோம்.

அகம்படியர் (அகமுடையார்) என்னும் சொல்லில், அ என்பது என் அல்லது எட்டு(8) என்னும் எண்ணைத் தமிழ் மொழி மரபுப்படி குறிப்பதாகும். எட்டு வகைக் குணம் உடையவனே இறைவன்; திக்குகள் எட்டு, எண் அல்லது எனப்படும் சொல் எண்ணி (சிந்தித்து) ஆராய்ச்சி சொல்கிறது. எட்டு எனும் சொல் "அடைய முடியும் " (எட்டு) எனும் பொருள் உடையது.

க-க் + அ. சேர்ந்தது "க" "க்" என்பது தொடர் நிலையைக் குறிக்கும். "க" என்பது தமிழ் மொழி என் மரபுப்படி ஒன்று அல்லது முதன்மை நிலையைக் குறிக்கும்.

ம் என்பது மெளன நிலையினை அல்லது முற்றுப் பெற்ற பூரண நிலையைக் குறிக்கும்.

அகம் எனும் சொல் இகவாழ்வின் அனைத்துயும் தழுவி நிற்பதால் ஆக என் குணங்களை உடைய இறை முதன் முதலில் உருவாக்கிய எட்டுத் திசைகளிலும் மனித இனம் அல்லது மனித கனத்தைப் பல்கிப் பரவச் செய்தான். பூதகணம் போன்ற வேறு கணங்களைப் போல் தோன்றி வளர்ந்து மறைந்து போகும் கணமாய்ப் படைக்காமல் கண சமுதாயமாய் படைத்த இறைவனே தலைமையேற்று வழிகாட்டி, வெறும் சடப் பொருளான வாசி எனப்படும் மூச்சுக் காற்றினை முறையான பயிற்சி மூலம் சிவனுள்ள குண்டலினி சக்தி பெறச் செய்து இறைமை அல்லது "கடவுள் " நிலை எய்தச் பூரண நிலை எய்தி செய்தான் என்பதையும் உணர்ந்து கொள்ளலாம். விளக்கமாக்க கூறின் மனித கணத்தின் படைப்பு தெளிவான நோக்கம் உடையதாகும்.

அதே போன்று தோன்றி வளர்ந்து மறைந்து போகும் உடல் படைத்த மனித கணம் அல்லது சமுதாயம், அரசியல், பொருளாதார ரீதியாக நிறை நல்வாழ்வு பெற்றாலும் அது ஆன்மீகப் பூரண நிலை அடைய அல்லது இறை நிலை அடைய வேண்டும். அதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் சக்தியுள்ள சிவனாக, சிவனுள்ள சக்தியாக மாற முடியும். சிவசக்தியின் மண்ணுலக வெளிப்பாடே மனிதன். மண் உலகில் சிவ சக்தியின் மைந்தர்கள் ஆகிய நாம் நமது தொன்மையான புற உலகின் ஆன்மீகப் பூரண நிலையை அடைய எக்காலமும் முயன்று கொண்டே இருக்க வேண்டும். அதற்குப் படியாய் படிதல் உடையவராய் படிப்புடையவராய் இருக்க வேண்டும்.

20.6.14

பழம் நூல்கள் கூறும் அகமுடையார் வரலாறு

அகம்படிமைப் பதினாறாயிரவர் துதி:-

"மல்குபுகழ் நடராசன் வளர்கோயி லகலாது, பல்கிளைஞ ருடனுரிமைப் பணிசெய்யும் பரிவினராய்க், கல்விகளின் மிகுமெல்லைக் கருத்தினராய் நிருத்தனருட், செல்வமலி யகம்படிமைத் திறலினர்தம் பதம்போற்றி...."

- என்று அகமுடையார் சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.

இப்பாடலின் கருத்து:-

மிகுந்தும் சொல்லும் சிவகீர்த்தியையுடைய நடேச மூர்த்தியின் சிவதர்மம் வளரும் திருக்கோயிலை நீங்காமல் பல கிளைஞருடனே தங்களுக்கு. அமைந்த ஊழியங்களைப் பரிவுடனே செய்யும் பக்திமான்களும், கல்விகளினாலே மிகுந்த நிலையான கருத்தை உடையவர்களும், தம்பிரானாருடைய அருளாகிய சம்பத்து மிகுந்த ஞானவீரத்தை உடையவர்களுமாகிய திருவகம்படியரான பதினாறாயிரவர் திருவடிகள் போற்றி!

ஆதாரம்: பொது ஆண்டு 1313ல் உமாபதி சிவாச்சாரியார் எழுதிய "கோயிற்புராணம்" நூலில் இருந்து...

6.5.14

மறைக்கப்பட்ட அகமுடையானின் வீர வரலாறு!


மே..5…1950

தஞ்சை மாவட்டம்,பட்டுக்கோட்டை வட்டம், வாட்டாக்குடி கிராமத்தில் இராமலிங்கத்தேவர்-தையல் அம்மாளுக்கு 1920, நவம்பர் 15 அன்று பிறந்தவர் மாவீரன் வாட்டாக்குடி இரணியன். இவரது இயற்பெயர் வெங்கடாச்சலம்.

தனது 13 வது வயதில் உறவினர்களுடன் சிங்கப்பூர் சென்று கட்டிட வேலையிலும் தோட்டங்களிலும் வேலைபார்த்தார். அங்கெல்லாம் ஆங்கிலேயர்கள், சீனர்கள்,மலேசியர்களின் தோட்டங்களில் தமிழர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டது கண்டு அவருக்கு பொதுவுடைமைச் சிந்தனையாளர்களுடன் உறவு ஏற்பட்டது.

பொதுவுடைமைச் சிந்தனையாளர்கள் மலேயா கணபதி,வீரசேனன் ஆகியோருடன் இரணியனுக்கு தொடர்பு கிடைத்தது.நூல் வாசிப்புப் பழக்கம் உருவானது.பொதுவுடைமை மீதான பிடிப்பு அதிகமானது.இரகசிய அரசியல் கூட்டங்களில் பங்கேற்கும் வாய்ப்புக்கிட்டியது. சிங்கப்பூரில் பொதுவுடைமை மற்றும் பகுத்தறிவு சிந்தனையை வளர்த்துக் கொண்டதால் நாத்திக சிந்தனையாளன் “இரணியன்” பெயரை தனது பெயராக மாற்றிக்கொண்டார்.

1943ல் சிங்கப்பூர் வந்த வங்கத்துச்சிங்கம் நேதாஜியைச் சந்திக்கும் வாய்ப்புப் பெற்றார்.”இரத்தம் தாருங்கள்;விடுதலை பெற்றுத்தருகிறேன்” என்று சிங்கப்பூர் தமிழர்கள் மத்தியில் நேதாஜி வீரமுழக்கமிட்டதில் ஈர்ப்படைந்த இரணியன் நேதாஜி அமைத்த “இந்திய தேசிய இராணுவ”த்தில் சேர்ந்து பயிற்சியாளராக உயர்ந்தார்.

சுமார் பன்னிரெண்டாயிரம் தொழிலாளர்களைக் கொண்ட சிங்கப்பூர் துறைமுகத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவரானார்.1946ல் தொழிற்சங்கத்தின் முடிவுக்கு ஏற்ப தொழிலாளர்களின் நலனுக்காக போராட்டம் நடத்தினார்.மலேசிய முதலாளிகளும் ஆங்கிலேயர்களும் போராட்டத்தை ரவுடிகளைக் கொண்டு நசுக்க நினைத்ததை எதிர்கொள்ள “இளைஞர் தற்கொலைப் படை”ஒன்றை நிறுவினார். இளைஞர்களுக்கு கொரில்லா பயிற்சியும் துப்பாக்கிச்சுடும் பயிற்சியும் கொடுத்தார்.

1948ல் மலேசியா பொதுவுடைமைக் கட்சியைத் தடை செய்தது. பொதுவுடைமை இயக்கத்தலைவர்கள் தலைமறைவானார்கள்.தனது 28 வது வயதில் இரணியன் தனது சொந்த ஊரான வாட்டாக்குடிக்குத் திரும்பினார்.1947ல் விடுதலையடைந்த இந்தியாவில் நேதாஜிக்கு எதிர் சிந்தனை கொண்டவர்களின் காங்கிரசு ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்ததும் பணக்கார சக்திகள் தொழில் முதலாளிகளாகவும் நிலப்பிரபுக்களாகவும் மாறியிருப்பதையும் கண்டு இதற்காகவா இந்திய விடுதலைக்காக நேதாஜி பாடுபட்டார் என்ற கலக்கம் அவருக்குள் உருவானது.

இந்தியாவிலும் பொதுவுடைமைக்கட்சி தடைசெய்யப்பட்டிருந்த நேரம்.அவரது ஊரான வாட்டாக்குடியில் நிலப்பிரபுக்களின் கொடுமை விவசாயத் தொழிலாளர்களுக்கு எதிராக அதிகரித்திருந்தது. ”சாணிப்பாலும் சவுக்கடி”யும் விவசாயத்தொழிலாளர்களுக்கு இயல்பான தண்டனையாக இருந்தது.ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் விவசாயத் தொழிலாளர்களின் உரிமைக்காகவும் நண்பர்களுடன் சேர்ந்து ”விவசாய சங்கம்” ஒன்றை உருவாக்கினார்.

நிலப்பிரபுக்களுடன் மோதி விவசாயத் தொழிலாளர்களின் கூலியை உயர்த்தினார்.இதை பொறுக்க முடியாத நிலப்பிரபுக்கள் காவல்துறையின் உதவியுடன் இவர்மீது பல வழக்குகளைப் பதிவு செய்து கைது செய்ய முயன்றனர்.மீண்டும் தலைமறைவு வாழ்க்கை தொடர்கதையானது.நிலப்பிரபுக்களும் முதலாளித்துவ சிந்தனையாளர்களும் காவல்துறையினர் உதவியுடன் இரணியனுடன் தொடர்புடையவர்களைக் கொலை செய்யத் தொடங்கினர்.

1950 மே மாதம் 3 ஆம் நாள் இரணியனுடன் இணைந்து செயல்பட்ட சாம்பனோடை சிவராமனை காவல்துறை சுட்டுக்கொன்றது. வடசேரிக் காட்டில் மறைந்திருந்த இரணியனை காவல்துறை நெருங்கியது.காலில் ஏற்பட்ட காயத்தால் அவரால் ஓடமுடியவில்லை.இரணியனையும் அவருடன் இருந்த ஆம்லாப்பட்டு ஆறுமுகம் என்பவரையும் வடசேரி சம்பந்தம் என்பவர் காவல்துறைக்குக் காட்டிக்கொடுத்தார்.

1950 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் நாள் இரணியனையும் ஆம்லாப்பட்டு ஆறுமுகத்தையும் காவல்துறையினர் பிடித்தனர்.ஆறுமுகத்தின் மீது வழக்கு ஏதுமில்லை என்பதால் அவரை விடுவித்து தப்பிக்க காவல்துறையினர் சொன்ன போதும் இரணியனை விட்டுச் செல்ல மறுத்துவிட்ட ஆம்லாப்பட்டு ஆறுமுகத்தையும் இரணியனையும் காவல்துறை சுட்டுக்கொன்றது.

வாட்டாக்குடி இரணியன்,ஆம்லாப்பட்டு ஆறுமுகம்,சாம்பனோடை சிவராமன் ஆகியோரின் உடல்கள் பட்டுக்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு கூராய்வு செய்யப்பட்டன.பின்னர் பட்டுக்கோட்டை சுடுகாட்டில் அவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டன. தனது 30 வது வயதில் விவசாயிகளின்… தொழிலாளர்களின் உரிமைக்காகப் பாடுபட்ட இரணியன் காவல்துறையால் கொல்லப்பட்ட தினம் இன்று… மே 5…

சமுதாயத்தின் அடித்தட்டு மக்களுக்காக பாடுபட்டு உயிர்நீத்த வாட்டுக்குடி இரணியன்,சாம்பவனோடை சிவராமன் ஆகிய இருவரும் “அகமுடையார்”சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுடன் இருந்து உயிர் நீத்த ஆம்லாப்பட்டு ஆறுமுகம் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்.

தமிழ்ச்சாதியான இவர்களின் மறைக்கப்பட்ட வாழ்க்கை வரலாறு வருங்கால இளைஞர்களுக்கு சமர்ப்பணம்!

நன்றி: திரு. அரப்பா தமிழன்

5.5.14

டெல்டா தேவரின போராளிகள்!


1943ல் தேசத்தந்தை நேதாஜியை சிங்கப்பூரில் சந்தித்து இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்து, பின்னர் பயிற்சியாளராக உயர்ந்தவர். மலேசியாவில் தொழிலாளர் ஒடுக்குமுறைக்கு எதிராக "இளைஞர் தற்கொலைப் படை” ஒன்றை நிறுவி, இளைஞர்களுக்கு கொரில்லா பயிற்சியும் துப்பாக்கிச்சுடும் பயிற்சியும் கொடுத்தவர். எங்கள் ஒருங்கிணைந்த தஞ்சை மண்ணான டெல்டா மாவட்டங்களில் சுதந்திரத்திற்கு பின்னாலும் வேறூருன்றிருந்த தலித் விரோத ஆதிக்க போக்கை அன்றைக்கே எதிர்த்து கம்யூனிசத்தை வளர்த்தெடுத்தவர்.
 

அந்த மாவீரன் யார் தெரியுமா?

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், வாட்டாக்குடி கிராமத்தில் இராமலிங்கத்தேவர் - தையல் அம்மாளுக்கு, 1920 நவம்பர் 15 அன்று வெங்கடாச்சலம் என்ற இயற்பெயரோடு பிறந்த மாவீரன் வாட்டாக்குடி இரணியன், தனது 30வது வயதிலேயே விவசாயிகளின், தொழிலாளர்களின் உரிமைக்காகப் பாடுபட்டதன் விளைவாக காவல்துறையால் கொல்லப்பட்ட தினம் இன்று. (05.05.1950)

டெல்டா பகுதியில் ஜமீன்தாரி/பண்ணை ஒழிப்பை கொண்டுவந்து அப்பாவி தலித் மக்களை காத்ததால், வாட்டாக்குடி இரணியன் மட்டுமல்ல; ஜாம்பனோடை சிவராமனையும் சேர்த்து இருபெரும் பொதுவுடைமை போராளிகளை ஒரேநாளில் காவல்துறையால் கொல்லப்பட்ட தினம் இன்று மே 5 1950. இம்மாவீரர்கள் சாதியால் (அகமுடையார் - தேவர்) ஆதிக்கவாதிகள்; ஆனால், செயலால் பொதுவுடைமை வாதிகள்!

மாவீரர்களுக்கு வீரவணக்கம்!



25.3.14

டெல்டா கம்யூனிஸ்ட்!

“ 1950 ம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் தேதி, உலகம் முழுவதும் கார்ல் மார்க்ஸின் பிறந்த தினத்தைக் கொண்டாடும் போது அந்தப் பகுதி மட்டும் கலவரப்பட்டுக் கிடந்தது.”

தமிழகத்தில் முதன் முதலாய் விவசாயத் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வுக்காகவும் வர்க்கச் சுரண்டலை எதிர்த்தும் சங்கமாகச் சேர்ந்த தஞ்சையில் உதித்திட்ட இரு பெருஞ்சுடர்களான.

‘வாட்டாக்குடி இரணியன்-ஜாம்புவானோடை சிவராமன்’! 1947 இல் இந்திய விடுதலைக்குப் பின் பண்ணையார்கள் காங்கிரசில் சேர, ஆளுங் கட்சியின் ஆதரவோடு பண்ணை அடிமை முறை வளர்த்தெடுக்கப்படுகிறது.

மக்களைக் காக்க வேண்டிய காவல்துறையும் பண்ணையாருக்கு ஏவல் துறையாய் துணை நிற்க, விவசாயிகள் சொல்லொண்ணாத் துயரமோ வரலாறாய் நிற்கிறது.

இந்தச் சூழலில் கம்யூனிஸ்ட் கட்சி தடைகள் பல கடந்து பாட்டாளி மக்களுக்கு ஆதரவாய் ஆக்ரோஷமாய் போராடுகிறது. அந்தப் போராட்டச் சூழலில் உதித்த சூரியர்கள் தான் இரணியனும் சிவராமனும் ; இருவரது பிரவேசமும் உச்சகட்டமாய் 1940ல் துவங்குகிறது.

1950 மே மாதத் துவக்கத்தில் நிறை வடைகிறது . இடைப்பட்ட பத்து ஆண்டுகள் தஞ்சை மாவட்ட கிராமங்களில் குறிப்பாக தென்பரை, ஆம்பலாம்பட்டு முதலிய ஊர்களில் கட்சி கால்கோல் நாட்டப்பட்டு இயக்கமாய் வளர்ந்து, பலருக்கு வெளிச்சத்தையும் சிலருக்கு அச்சத்தையும் தெரிவிக்கிறது.

சாதிய இயக்கங்கள் பெருகி வரும் இந்த நாளில் இந்தப் புதினத்திற்கு இன்னுமொரு சிறப்புண்டு. இரணியனும், சிவராமனும் பிறப்பால் தேவர் சாதியான அகமுடையார் இனத்தவர்கள்.

அவர்கள் ஏற்றுக் கொண்ட பணியோ பாட்டாளி மக்களின் விடியலுக்கான வீரஞ்செறிந்த போர். சொந்தச் சாதியினை எதிர்த்து மிக இளம்வயதில் தன் சுகம் மறுத்து வர்க்கப் போராட்டத்தின் வாசலைத் திறந்து வைத்தனர்.

இருவரும் 1950 மே 3 மற்றும் 5ம் நாள் ஒருவர் பின் ஒருவராய் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டு, விதை நெல்லாய் விதைக் கப்படுகிறார்கள்; அதன் விளைச்சலை இன்று டெல்டா மாவட்டம் முழுக்க பார்க்கிறோம்.

இரணியனுக்கு வடசேரி காட்டில் உணவு உதவிகள் செய்துவந்த அம்பலாபட்டு ஆறுமுகமும் சுட்டு கொல்லப்பட்டார்.

நன்றி:  மு.சிவா தேவர், பதினெட்டு கோட்டை அகமுடையார் நாடுகள்

வேளாளர்.காம் கட்டுரைக்கு மறுப்பு கட்டுரை!

( http://velaler.com/index.php/health/154-velala-catagories/diet-a-fitness/570-velala-isthiscorrect இந்த வேளாளர்.காம் இணையத்தில் வெளிவந்துள்ள முக்குலத்தோர், வெள்ளாளர்களா? என்ற கட்டுரைக்கு வந்துள்ள சிவா பிள்ளை (S.J சிவா, வேளாளர் வரலாற்று மீட்பு களம், மதுரை.)என்பவரின் பின்னோட்டத்திற்கு மறுப்பு பதில் கொடுத்துள்ளதன் மீள்பதிவு இது.)


வணக்கம் சிவா பிள்ளை,
உங்களது பின்னூட்டத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக கூட என் பதில் பின்னூட்டம் இருக்கலாம். விசயத்திற்கு வருகிறேன்.

/முதலில் கள்ளர், மறவர், கணத்தோர் அகமுடையர், மெல்ல மெல்ல பிள்ளை என்றனர் தற்போது இதனை நவீனப்படுத்தி வெள்ளாளர் வேளாளர் என்கின்றனர்./

இந்த சொலவடையை முதலில் உருவாக்கியது யார்? அதை எப்படி நீங்கள் பொத்தாம் பொதுவாக உங்களது கற்பனையின் யூகத்தில் ஏதெதோ சொல்கின்றீர்? கள்ளர் மறவர் கனத்ததோர் அகமுடையார் மெல்ல மெல்ல வெள்ளாளர் என்றும், கள்ளர் மறவர் கணக்காயர் அகமுடையார் மெல்ல வெள்ளாளர் என்றும், தமிழில் எழுத தெரிந்த அனைவரும் அவர்கள்தான் வரலாற்று ஆசிரியர் போல உளறி வைத்து கொண்டிருக்கின்றனர். முதலில் இந்த சொலவடைக்கான ஆதாரம் எங்கிருக்கின்றது? எந்த இலக்கிய / வரலாற்று நூலில் குறிப்பிட்டுள்ளது? அதை முதலில் தெளிவாக்கிவிட்ட பின்னர், மெல்ல மெல்ல பிள்ளை என்பதை பற்றி பேசினால் நன்றாக இருக்கும்.

/முதலில் பிள்ளை என்பதனை சாதி என நினைத்திருக்கலாம். மேலும் இது இலக்கியங்களில் கூறப்பட்டு்ள்ளனவா, வள்ளுவர் கூறியதா, கம்பர் கூறியதா,
தொல்காப்பியர் கூறியதா, அம்மக்களில் சிலர் மாத்திரம் இவ்வாறு
கூறிவருகின்றனர்/

பிள்ளை என்பதை யாரும் சாதியாக நினைக்கவேயில்லை. அதை நீங்களாகவே ஓர் அனுமானத்தின் அடிப்படையில் சொல்லிவிட்டு தோராயமாக யாராவது சொல்லிருக்க கூடும் என சொல்லி உங்களது கருத்து மேட்டிமைத்தனத்தை இங்கே காட்டிருக்கின்றீர்களே தவிர வேற ஒன்றும் புதிதாக சொல்லவில்லை. யாரோ சிலர் சொல்வதை எப்படி பெரும்பான்மையான ஒட்டுமொத்தமானவர்களையும் குற்றவாளிபோல ஏளனம் பேசுவது சரியல்ல.

/இதாவது உயர்குடியான மரபாளர் (மிகவும் தொன்மையானவர்கள் ) ஆன வேளாளர் பேரினத்தை இழிவுப்படுத்தி தங்களை உயர்த்திக் கொள்ள தாங்களே தமிழகத்தின் முதல் மக்கள் என யாவரும் நினைக்க வேண்டும் என இவ்வாறு முறையற்ற அபாண்ட புழுகை புழுகிவருகின்றனர்,/

உயர்குடி மரபு என்பதை பற்றி பலரும் பலவாறாக சொல்லிவிட்டார்கள். வேண்டுமென்றால் கூகிள் புக்ஸ் இணையத்தின் ஊடாக அகமுடையார் என்ற சொற்பதத்தை ஆங்கிலத்தில் தேடிப்பாருங்கள் உயர்குடி மரபு அகமுடையார் என்பதை புரிந்துகொள்ள முடியும். தென்னிந்திய சாதிபடிநிலை பற்றிய ஆங்கில அறிஞர்களின் இருவேறு நூல்கள் இணையத்தில் கிடக்கின்றன. தேடிப்பார்ர்த்து விட்டு உயர்குடி மரபு போன்றவற்றை பேசினால் நலம். வேளாளர் என்பதில் உழுதுண்டு வேளாளர், உழுவித்த வேளாளர் என இரு பெரும்பிரிவுகள் இருக்கின்றன. இந்த இருபிரிவுகளில் ஒன்று உயர்குடியாகவும். மற்றொன்று தாழ்குடியாகவும் கணக்கிடபட்டு வந்தது. ஆனால் இன்றைய வேளாளர்கள் என சொல்லிக்கொள்ளும் சாதியமைப்பினர் உயர்குடி/ தாழ்குடி என்ற இரண்டையும் ஒரே படிநிலையின் அடிப்படையில் வேளாளர்கள் என சொல்லிக்கொண்டு குழப்புகின்றனர்.

மேலும், சாதீய படிநிலைகளில் வலக்கை, இடங்கை முறைகளே மேல் கீழ் என்ற சாதி அடிப்படை கட்டுமானமாக அன்றைக்கு இருந்தது. ஆனால் இன்று அந்த அடிப்படை கொஞ்சம் மாறுதல் அடைந்திருக்கின்றது. நீங்கள் கூறியுள்ளது போல தொன்மையானவர்கள் என்ற பட்டியலை எடுத்து பார்த்தால் வரலாற்று ஆய்வின்படி கண்டிப்பாக அது வெள்ளாளர்கள் மட்டுமே கிடையாது என்பதுதான் பதிலாக இருக்கின்றது. இந்த எதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் வெள்ளாளர்களை தவிர ஏனைய அனைவரும் வந்தேறிகள் அல்லது இழிகுடி என்பது போன்ற பேச்சுக்கள் பொது கருத்தியலுக்கு ஒத்துவராது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் நடத்தப்பட்ட வரலாற்று ஆய்வில் தேனியை சார்ந்த விருமாண்டி என்ற நபர்தான் உலகின் தொன்மையான மனிதரென ஐநா ஆய்வு நடுவம் இணைந்து நடத்திய வரலாற்று தேடலில் கண்டறியப்பட்டது. அப்படி பார்த்தால் அந்த விருமாண்டி என்ற நபர் சார்ந்திருக்கும் சாதியான பிரான்மலை கள்ளரே தொன்மையானவர்கள். அதையும் பொருட்படுத்தவில்லையெனில் மலைவாழ் மக்கள் உள்ளிட்ட பட்டியல் சாதியினர்களும் தொன்மையானவர்கள் என்பதை நாம் ஏற்றுகொள்ள வேண்டும்.

/அகமுடையார் என்றால் என்ன?
அகமுடையார் என்பது அரண்மனை பணிக்காரன் என்பதே இதன் பொருள் . இதனை பலர் பெற்றிருக்கிறார்கள்./

அகமுடையார் என்றால் என்ன என்பதை பற்றி ஒருவரியில் யாராலுமே விளக்கம் கொடுக்க முடியாது. ஏனெனில் அதற்கான உள்ளார்ந்த அர்த்ததை குத்துமதிப்பாக உளறிவைக்க முடியுமே தவிர உண்மையான பொருளோடு அதை அனுக முடியாது என்பதே உண்மை.

அகமுடையார் என்று இன்றைய சூழலில் உருமாற்றம் அடைந்திருந்தாலும், அகமுடையாரின் ஆதிப்பெயர் அகம்படியர் என்பதேயாகும். அகம்படியர் என்பதை அகம்+படியர் என பிரித்து பொருள் கொள்ளமுடியும். அதாவது அகம் என்றால் உள்ளே என்று பொருள். படியர் என்பதின் வேர்சொல் படி; இந்த படிக்கு பலவாறாக அர்த்தம் கொள்ள முடியும். படி - படித்தல், வாசற்படி, பணியவைத்தல் என பல அர்த்தங்களை உடையது.

இந்த அர்த்தங்களை மட்டும் வைத்துக்கொண்டு அரண்மனை பணிக்காரன் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் எல்லா பெயர்காரணத்தையும் வைத்துகொண்டு மட்டும் அள்வீடு செய்வது என்று சொன்னால், பிள்ளை என்றால் யாருக்கு பிள்ளை? யாருடைய பிள்ளை? என்பதை போன்ற பிதற்றல்தனமான கேள்விகளே எழக்கூடும். எனவே அகமுடையார் என்பதை சரியான முறையில் அனுகுவதே சிறந்தது.

மன்னராட்சியில் அரண்மனை மட்டுமில்லாத கோவில்களே முதன்மையான இடத்தை பிடித்தன. ஏனெனில் மன்னனே இறைவனுக்கு ஒப்பானவன். அவ்விறைவனின் பாதுகாவலனாக தகுதியான நபரை நியமிப்பதுதான் முறையாக கொள்ளப்பட்டது. மேலும், கோவிலிலுள்ள பெரும் செல்வத்தையும் கலைநயமான சிலைகளையும் இன்னபிற மதிப்பில்லாவற்றையும் காப்பாற்ற வீரம் மட்டுமே போதுமென்ற போதிலும், கோவிலை பாதுகாக்க ஆன்மீக நாட்டமும், சுயஒழுக்கமும், நெஞ்சுரம் கொண்ட வீரத்துடன் கூடிய இறையன்பும், நேர்மையும் நிரம்பிய நபர்கள் தேவைப்படும்போது அதற்கு சரியான நபர்களாக இருந்தது அகம்படியர்கள் மட்டுமே. அதனால் தான் கோவிலின் உள்புறக்காவலும், அரண்மனை கோட்டைக்காவலும் அகம்படியர் வசம் இருந்தது. கடவுளுக்கு அடுத்தபடியாக மக்களால் போற்றக்கூடிய அரசனும் அவனது குடும்பமும் இருக்கையில் அவர்களை காப்பாற்றக்கூடிய தகுதி அகம்படியருக்கே இருந்தது. அதனாலேயே அகம்படியர்கள் கோட்டைகாவலையும் கையில் எடுத்து கொண்டனர்.

போர்காலங்களில் அந்நாட்டின் கோவிலையும் பொன்னையும் பொருளையும், மன்னனின் இருப்பிடத்தையும் வாரிசையும் காக்க வேண்டிய பொறுப்பு முழுக்க முழுக்க அகம்படியர் வசமே இருந்தது. அப்படிப்பட்ட அகம்படியர்கள் மன்னனுக்கும், மன்னனின் குடும்பத்திற்கும் மிகவும் நெருங்கிய உறவுகளாவும், இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உருவாகின. நேர்மையான செயல்பாடு மற்றும் நம்பிக்கைக்கு உரியவர்களால் இருந்ததாலேயே, அரண்மனையையும், கோவிலையும் காப்பாற்றக்கூடிய வீரம் செறிந்தவர்களாக அகம்படியர் இருந்தனர்.

வெள்ளாளர் ஆதீனம் மட்டுமில்லாது இன்றைக்கும் கோவை உள்பட பல இடங்களில் கோவில் அறத்தொண்டு புரியும் பலர் அகமுடையாரும் உண்டு என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட வரலாறு உடையவர்களை குறைத்து மதிப்பிட்டு எழுதுவது அழகல்ல.

/சேர்வை, சேர்வைகாரன் என்றால் கடைநிலை ஊழியர் என்று பொருள் இப்பட்டம் வன்னியர், வலையர், கேனார், உட்பட முக்குலத்தோரில் சிலரும் பெற்றிருக்கிறார்கள் இப்பட்டம் பெற்றவர்களும் அகமுடையார் ஆவர்,/

சேர்வைக்காரன் என்பதையும் சேவைக்காரன் என்பதையும் ஒன்றுபோல சொல்லி குழப்பிக்கொள்வது நகைப்புக்குரியது. சேர்வை என்பதன் பொருளே தளபதி என்பது மட்டும்தான். போர்மறவர்களை ஒன்றுசேர்த்து செயல்படுவதாலேயே சேர்வைக்காரன் அல்லது சேர்வை என்ற பட்டம் வழங்கப்பட்டது. சேர்வை என்ற பட்டம் தாங்கிய பலர் தென் தமிழ்நாட்டில் அனைத்து பாளையங்களிலும் போர்ப்படை தளபதிகளாக இருந்துள்ளனர். வீரம்செறிந்த தளபதிகளுக்கு தந்துள்ள பட்டத்தை கடைநிலை ஊழியர் என்று அவர்களின் வீரத்தை இழிவுபடுத்தும் விதமாக சொல்லிருக்கும் விதம் கண்டனத்துக்குரியது.

/எனவே முக்குலத்தினரில் ஒரு பிரிவினரான அகமுடைய சேர்வைகளுக்கும் நமக்கும் (முதலியார்,பிள்ளைமார்) எந்த வித சம்பந்தமும் கிடையாது எனவே நம்சமூகத்தினர் அல்லாத மருதிருவர் படத்தை நம்மவர்கள் (முதலியார்,பிள்ளைமார்) யாரும் பயன்படுத்தி முற்பட்ட உயர்குடியான தாங்கள் தங்களை தாங்களே தாழ்த்தி கொள்ளாதீர்கள்/

அகமுடைய தேவரோ அகமுடைய பிள்ளையோ நேரடியாக மண உறவு உண்டு என்பதை போல இன்றைக்கு அகமுடைய சேர்வை பட்டம் கொண்டுள்ளோருக்கும் இடையேயும் மண உறவு உண்டு. வட்டார பட்ட பெயர்களால் வேறுபட்டருந்தாலும் இம்மூவரும் ஒன்றே. ஆனால், செங்குந்த முதலியாரோடு உறவு கொண்டாடும் வடக்கத்திய முதலியார்களோடு பிள்ளை பட்டம் தாங்கிய துளுவ வெள்ளாளர்கள் இணைவதே முரண் என கணக்கில் கொள்ளப்படும். ஏனெனில் அரசாங்க பதிவேட்டில், (துளு அல்லது துளுவ வெள்ளாள்ர் உள்பட அகமுடையார்) என்றே குறிப்பிடப்படுகின்றது.

மேலும் முற்பட்ட உயர்குடி போன்ற வார்த்தை பிரயோகங்கள் வெறும் அரசியல் லாபத்திற்கு உதவுமே அன்றி வேறதற்கும் உதவாது, அகம்படியர் குடியனர் பட்ட பெயர்களால் சிதறி இருந்தாலும் அனைவரும் உயர்குடியினரே என்பதில் மாற்று கருத்தில்லை. அதை புரிந்து கொள்ளாமல் தலித் வகுப்பை சார்ந்த பள்ளர்களை (தேவேந்திர குல வேளாளர் என பெயர் மாற்றம் செய்து) தங்களது கூட்டணியில் இணைத்து கேவலமான அரசியல் செய்து கொண்டு உயர்குடி என்ற வெற்று பீற்றல்கள் ஒன்றுக்கும் உதவாது என்பதை காலம் உணார்த்தும்.

நன்றி!

- இரா.ச.இமலாதித்தன், நாகப்பட்டினம்

20.3.14

பழுவேட்டரையர் பற்றி திரு. ராஜாராம் கோமகன்

பழுவேட்டரையர் அகமுடையார் குலம் என்பது அனைவரும் அறிந்ததே! பழுவேட்டரையர்கள் பற்றி திரு. ராஜாராம் கோமகன் எழுதியுள்ள சிறுகட்டுரை உங்களது பார்வைக்கு..

கல்கி இல்லையேன்றால் எத்தனை பேருக்கு ராசராசனை தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை? பாலகுமாரன் இல்லை என்றால் எத்தனை பேருக்கு பஞ்சவன்மாதேவியை தெரிந்திருக்கும் என்றும் தெரியவில்லை?

தற்போது வரலாற்று பெருங்கதையின் மூலம் வெகுமக்களுக்கு அறிமுகமாகியிருக்கும் ஆடல்நங்கையாகிய சோழமன்னனின் அணுக்கி...,
பஞ்சவன்மாதேவி... ராசராசனின் காதல்கிழத்தி. சேரர்களாகிய பழுவேட்டரையரின் மகளான அருமொழிநங்கையை பராந்தகச்சோழன் மனைவியாக்கியதால் பழுவேட்டரையரோடு தொடங்கிய உறவின்முறை ராசராசனையும் தொட்டதனால் பஞ்சவன்மாதேவி.. வீரப்பரம்பரை பழுவேட்டரையரின் வித்து.பேரரசனான ராசேந்திரனின் ஈன்றுபுறம் தராத தாய்.

வரலாற்று தாகங்களோடு பழையறை வருவோர் தேடும் இடம் இந்த பள்ளிப்படை.ராசேந்திரசோழன் வீரன்மட்டுமல்ல பண்டிதனும் கூட (பண்டிதசோழன்) என்பதை அவன் தன் வளர்ப்பு தாய்க்கு கட்டிய இந்த பள்ளிப்படையே சான்று. அதிஸ்டானத்திலுள்ள கல்வெட்டு நிவந்தங்களையும் அதற்கு பொறுப்பாக லகுலீசபண்டிதரையும் நியமித்ததையும் கூறுவதோடு,கலாப்பூர்வமாக இப்பெண்மணி பழுவேட்டரையர் வழி என்பதற்கு முகமண்டத்தின் வாயிலில் பழுவேட்டரையர் பாணி துவாரபாலகர்களை நிறுவி, நந்தி மண்டபத்தின் இருபுறத்தூணில் ஒன்றை சோழர்பாணியிலும் மற்றோன்றை பழுவேட்டரையர் பாணியில் அமைத்திருக்கும் விதம் கல்லால் எழுதிய வரலாறு.

இவள் சோழாப்பேரரசின் தூண் என்பதை இதைவிட எப்படி கூற முடியும்.அவன் பண்டிதசோழன் என்பதற்கு இது ஒன்றே போதும்! இவன் மாமன்னனாக முடியேற்ற(1014-2014) ஆயிரமாண்டில் நாம்...!!

14.3.14

வெட்டுமாவலி அகம்படியர்

தமிழ்க் கல்வெட்டுகளில் வர்ம சிகிச்சை முறை, ‘அங்க வைத்தியம்' அல்லது ‘அங்க வைஜ்யம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்றைய நடைமுறைப்படி அங்க வைத்யக் கல்வியும் பயிற்சியும் அரச குலத்தார்க்கும் அதிகார வர்க்கத்துக்கும் மட்டுமே உரியவையாகப் பராமரிக்கப்பட்டு இரகசியம் காக்கப்பட்டு வந்திருக்க வேண்டு மென்று நாம் புரிந்துகொள்ள முடிகிறது. அகம்படியர் மரபினரும், சத்திரிய - பிராம்மண வர்ணக் கலப்பில் தோன்றிய உயர்குடி மருத்துவர்களுமே அங்க வைத்யர்களாக இருந்திருக்க வேண்டும்.

தமிழகத்தில் ’வெட்டுமாவலி அகம்படியர்’ சமூகத்தவர் கள்ளர் - மறவர் சமூகத்தவருடனான தமது பூர்வபந்தங்களைத் தொடர்ந்து வந்ததால் ‘குடி படை'களாக (போர்க்காலங்களில் மட்டும் போரில் ஈடுபடும் குடியானவர்கள்) நீடித்தனர். ஆனால், கேரள மாநிலத்தில் சாமந்தச் சிற்றரசர்களின் மரபைப் பின்பற்றி நம்பிதிருப்பாதம் (நம்பூதிரிபாத்) பிராம்மணர்களுடன் சம்பந்த உறவு கொண்டு முதன்மையான அதிகார வர்க்கமாக உருவெடுத்த அகம்படிய நாயர் சமூகத்தவர், தன்வந்திரியை மூலவராகக் கருதும் ஆயுர்வேத மருத்துவத் துறையின் ஒரு பிரிவாக வர்ம சிகிச்சை முறையை மாற்றினர்.

(தமிழினி, மே 2008 இதழில் வெளிவந்த கட்டுரையின் மேம்படுத்தப்பட்ட வடிவம்)

13.3.14

தீரன் சின்னமலை கும்மி பாடல்




கட்டுத் தடிக்காரர் முன்னடக்க-உடன்
#கருப்பசேர்வையும் பின்னடக்க
வட்டப் பொட்டுக்காரச் சின்னமலை
யதோ வார சவுரியம் பாடுங்கடி

பட்டத்துக் கத்தி பளபளெனச் செல்லும்
பாளையத்துக் காரர்கள் முன்னடக்க
வெட்டுந்துரை மகன் சின்ன மலை
வரும் வேடிக்கை தன்னையும் பாருங்கடி

பூனைக் குலமென வெள்ளைப்படையோடப்
பூரித்து வீரப் புலி போலச்
சேனைக் கதிபதி சின்னமலை
வரும் தீரத்தை வந்துமே பாருங்கடி

கச்சைகட்டுந் தடிக்காரர்களே- வெள்ளைக்
காரர்களையெங்கு கண்டாலும்
காலையொடித்துத் துரத்துங்கள் என்றுமே
கட்டளையிட்டானம் சின்னமலை

கும்மியடிப்பெண்ணே, பெண்ணே கும்மியடி
கொங்கைகள் குலுங்கிட கும்மியடி
எங்கும் புகழ்மிக்க சின்ன மலையதோ
வார ஒய்யாரம் பாருங்கடி…..


*இப்பாடலில் இரண்டாம் வரியிலேயே கருப்ப சேர்வையின் பெயர் வரும்.

அகமுடையார் குல பழுவேட்டரையர்

கருவிலிருந்து மட்டும் காளை பிறப்பததில்லை, கல்லிலும் பிறப்பதுண்டு. காளைக்கும், கலைக்கும் சொந்தக்காரர்கள் பழுவேட்டரையர். 1100 வருடங்கள் பழமையானது!

திருச்சியிலிருந்து அரியலூர் செல்லும் சாலையில் உள்ளது வழுவூர். இந்த ஊரை தலைநகராக கொண்டு ஆண்ட அகமுடையார் குல பழுவேட்டரையர்களின் (பொன்னியின் செல்வன் நாவலில் வரும் அதே பழுவேட்டரையர்களின்) கலைவண்ணத்தில் உருவான வழுவூர் சிவன் கோவிலுள்ள ’நந்திதேவர்’ உருவமும் ஓர் உதாரணம் தான்.

நன்றி: சசிதரண், வரலாற்று ஆர்வலர்.

6.3.14

கொங்கு மண்டல அகமுடையார்

சேர நாட்டில் இருந்து வெளியேறிய மக்கள் வாளை ஆற்றின் வடபகுதி கொங்கு நாடு என பெயர் பெறுகிறது. மக்கள் கொங்கு மண்டலத்தை அடைந்தனர் அங்கு இருந்த பூர்வகுடி வெள்ளாளர்களுடன் இணைந்து அவர்கள் சார்ந்த விவசாயதை அகமுடையார் மேற்கொண்டனர்.இவர்கள் சேர நாட்டின் வீர கேரளன் என்பவனின் வழிவந்தவர்கள் மலை நாட்டு அகமுடையார்.

கொங்கு பகுதயில் அகமுடையார் வசிக்கும் பகுதிகள்:-
மருதூர்,குறிச்சி, உத்தமபாளையம், பள்ளபாளையம், வெள்ளலூர், ராமநாதபுரம், இருகூர்,பட்டணம்புதூர், சூலூர் அரிசிபாளையம், மங்களம், திருப்பூர் ,தாராபுரம், தளவைபாளையம், ஈரோடு, பொள்ளாச்சி, செட்டிபாளையம், கிணத்துகடவு முதலிய பகுதிகளில் குடியேறிய அகமுடையார் இன்றும் இந்த பகுதிகளில் இந்த பகுதிகளில் அதிகமாக வாழ்கின்றனர்...

நன்றி: மு.சிவா தேவர்

19.2.14

தியாகத்தேர்


மருதுபாண்டியர் புகழ் பாடும் போது தியாகத்தேர் குறித்து பதிவு செய்வது மிகவும் அவசியமானது. காளையார்கோயில் உள்ள பழைய கோபுரத்திற்குத் தென்புறம் புதிதாகத் பெரிய கோபுரம் கட்டிமுடித்து குடமுழுக்கு விழா செய்ய புதிய தேர் ஒன்றை செய்ய மாளக்கண்டானைச் சேர்ந்த குப்பமுத்து ஆசாரி என்னும் மரச்சிற்பக்கலைஞராவார்.தேர் செய்யும் பணியை அவரிடம் ஒப்படைத்தனர்.காளையார்கோயிலிலேயே தங்கி வேலையைத் தொடர்ந்தார்.தேர் செய்ய தொடங்கும் முன் முதலில் பிள்ளையார் உருவைச் செய்வதுதான் சிற்பிளின் வழக்கம். அப்படி செதுக்கும்போது ஒச்சம் (குறைபாடு) ஏற்பட்டுவிட்டது.அப்படி நேர்ந்தால் தேருக்குரிய மன்னருக்கு ஆபத்து என்பது சிற்பிகளிடையே ஒரு நம்பிக்கை. ஆனால் எதையும் வெளிக்காட்டாமல் தேரிலக்கண முறைப்படி, கண்டவர் வியக்கும் வண்ணம் நடமாடும் அழகுதேவதையாக சிற்பி தேரை உருவாக்கிவிட்டார் குப்பமுத்து ஆசாரி.

வெள்ளோட்டத்திற்குக் தயாரானது தேர்.தேரை வடம்பிடிக்க மக்கள் திரண்டனர்.மருதுபாண்டியர்களும் வந்துவிட்டனர். பெரிய மருதுபாண்டியர் வெள்ளை வீசி , தேர் ஓடத் தயாரானது.அருகில் தயங்கியபடி நின்ற குப்பமுத்து ஆசாரியிடம் என்ன என்று வினவினார்? பெரிய மருதுபாண்டியர்.
தேர் செய்யும்போது ஒச்சம் ஏற்பட்டுவிட்டது அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்றார்.என்ன பரிகாரம் என்றார் பெரிய மருதுபாண்டியர்.தேர் நிலைக்கு வரும்படி மட்டும் முத்திரை மோதிரமணிந்து செங்கோல் தாங்கி நான் அரசனாக இருக்க வேண்டும். இதை அரண்மனை அனுமதித்தால் தேரோட்டம் விக்கனமின்றி நடந்தேறும் என்றார்.

சிற்பி சிம்மாசனத்திற்கு ஆசைப்பட்டு சிற்பி அவ்வாறு கூறவில்லை என்றெண்ணிய பெரிய மருதுபாண்டியர் உடனே முத்திரை மோதிரத்தை அவர் விரிசல் அணிவித்து செங்கோலைக் கையில் கொடுத்துவிட்டு "இன்றுமுதல் நீர்தான் சிவகங்கைச் சீமைக்கு அரசர்" என்று அறிவித்தார்.
மக்கள் அனைவரும் ஆத்திரப்பட்டனர்.பெரிய மருதுபாண்டியர் கையைக் காட்டியதும் மக்கள் ஆத்திரம் அடங்கியது.

மன்னராக அறிவிக்கப்பட்ட குப்பமுத்து ஆசாரி தேரில் எறி வடந்தொடலாம் என்றதும் பெரிய மருதுபாண்டியர் வடந்தொடுக்க, சின்ன மருதுபாண்டியர் வெள்ளை வீச தேர் புறப்பட்டது.பாட்டாளியைப் பாராளும் வேந்தராக்கிவிட்டார் பெரிய மருதுபாண்டியர். எதிர்பார்த்ததை விட வேகமாக நகர்ந்தது தேர்.முழுத்தேராகையால் சுற்றி வரும்போது 'ஆனைமடு' எனும் திருக்குளத்தின் நீர் குமிழியிட்டதாம்.

அந்த ஆனைமடு தேரோட்டத்தை கண்டு கும்மாளமிட்டது போலிருந்ததாம் .கண் இமைக்கும் நேரத்தில் செங்கோலுடன் மன்னராகத் தேரில் வந்து கொண்டிருந்த சிற்பி திடீரென தேரின் முன்விழ சக்கரத்தில் சிக்கினார் .அவரால் செய்யப்பட்ட தேர் அவர் உயிருக்கு உலை வைத்தது.ஆனால் அது அவர் விரும்பி ஏற்றுக்கொண்டது.

உயிர் பிரியும் தருவாயில் பதிவிரதை வந்த மன்னரிடம் "அரசே ! தேர் செய்யும்போது ஒச்சம் ஏற்பட்டுவிட்டது.அது நாட்டின் அரசனுக்கு ஆபத்து என்ற எங்களுக்கிடையே உள்ள நம்பிக்கையின்படி அச்சமடைந்தேன்.அதற்கு பரிகாரமாகத்தான் தேரோட்டம் துவங்கும்முன் மன்னர் பொறுப்பை என்னிடம் ஒப்படைக்கக் கேட்டேன்.மற்றவர்கள் என்ன நினைத்தாலும் சரி எல்லோரும் இந்நாட்டின் உயிர் என மதிக்கும் தங்களுக்கு இனி ஆபத்து வராது அரசே! "என்று திணறித் திணறிப் பேசி உயிரைவிட்டார் குப்பமுத்து ஆசாரி. அதனால் அந்த தேரை தியாகத்தேர் என்று இன்று வரை போற்றுகின்றனர்.

இவ்வாறு மன்னர் உயிர் காக்கத் தன்னையே பலிகொடுத்த சிற்பியின் குடும்பத்தினருக்கு மருதுபாண்டியர்கள் மாளக்கண்டான், வெற்றியூர், சிறுவயல் முதலிய ஊர்களில் நிலங்களை மானியமாகவிட்டனர். வாழ்க மருதுபாண்டியர் புகழ்.வளர்க முக்குலத்தோர் புகழ்.

14.2.14

தமிழ்புலி மருதரசர்

ஒருமுறை புலிக்குட்டிப்புலவர் எனும் ஒரு புலவர் மருதுபாண்டியர் அரண்மனை நோக்கி வந்தார்.புதிதாக பணியிலிருந்த வாயிற்காப்போன் "அரசரிடம், யார் வந்திருப்பதாகச் சொல்ல? என்று கேட்டான்.
புலவர் அதட்டலாகவும் ஏளனமாவும் "அரசனிடம் புலி வந்திருக்கிறதென்று சொல் "என்று சொல்லி அனுப்பினாராம். வாயிற்காப்போனும் அவ்வாறே அரசனிடம் தெரிவித்தான்.பெரிய மருதுபாண்டியர் இதற்கெல்லாம் அசறுபவரா? அவரும் 'இங்கு வேல் இருக்கிறதென்று சொல்லி, வரச்சொல் என்றாராம்.முத்து வேலுக்கவிராயர் தம் அவையில் இருப்பதைக் குறிப்பால் உணர்த்தினார் பெரிய மருதுபாண்டியர். மன்னர் புலியை அடக்குவதில் மட்டும் வல்லவரல்லர் தமிழிலும் புலி எனப் புரிந்து கொண்ட புலவர் தம் செருக்கடங்கினார்.

நன்றி: மு.இரா.கலைச் செல்வன்

4.2.14

முதல் அகமுடையார் யார் தெரியுமா?



இறைவனான சிவபெருமானுக்கு அகப்பணி செய்து கையிலாயத்தின் நிர்வாகத்தை மற்றும் காவலை ஏற்று நடத்திவரும் மற்றும் பெருமதிப்பிற்குரிய ஈஸ்வர பட்டம் பெற்றவருமான திரு நந்தீஸ்வரர் என்ற நந்தி தேவர் தான் அது.


திருவோணம் - அகமுடையார் பண்டிகை!

(கேரளாவில் கொண்டாடப்படும் திருவோணம் பண்டிகைக்கு காரணமான மாவலி சக்கரவர்த்தி, அகமுடையார் குலத்தில் உதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.)

மாவலி மாவேந்தன்:
----------------------------

மாவலி யென்பானொரு மாபெருஞ் சேரவேந்தன், மானமிகுந் தமிழ மறவனன்றோ.
பாவலரும் பின்னரே பகையொடு சேர்ந்தவனைப்
பழித்துவரும் மடமைத் திறமும் நன்றோ

நாவலந் தீவிலெங்கும் நாயகச்செங் கோலோச்சி
நன்மை பலவுஞ் செய்த காவலனே
யாவரும் எதிர்க்கினும் யானைத்திரளைக் கொல்லும்
யாளிபோல் வெல்லும் பெருமாவலனே

தேவருக் கென்றும்பல தீமைசெய்து வந்ததால்
திருமாலின் அடியினால் தீர்ந்தான் என்பார்
தேவுரையே மாற்றிலும் திருப்பற்று வாய்மை வண்மை
திடமாயவன் கொண்டதைத் தேர்ந்து முன்பார்

மாவலி மரபிலே வந்த சீர்த்தியைக் கிள்ளி
வளவனுந் தேவியாக மணந்திருந்தான்
மாவலி மருகராம் வாணகோ வரையரும்
வளவன்கீழ்ச் சிற்றரசாய் இணைந்திருந்தார்

ஆரியத்தை யெதிர்த்த அருந்தமிழ் வேந்தரெல்லாம்
அசுரரென்றே பண்டைநாள் அழிக்கப்பட்டார்
சீரிய அறிவியல் செழித்துவரு மிந்நாளும்
செந்தமிழ்த் தலைவரே பழிக்கப்பட்டார்

திருவோண நாளிலின்றும் குடிகளின் நலங்காணத்
திரும்பிவரும் மாவலி என்று சொல்வார்
அருளோடும் அவன்அந்நாள் அரசுபுரிந்த வுண்மை
அறிவிக்கும் இதுவொன்றே கண்டு கொள்வீர்

- 'மொழிஞாயிறு' ஞா. தேவநேயப் பாவாணர்

3.2.14

மன்னார்குடி கோட்டைகளை கைப்பற்றிய அகமுடையார்


சேர நாடு சிதைந்துபோது நாட்டில் ஏற்பட்ட குழப்பம் மக்கள் விரக்தியில் நாட்டை விட்டு வெளியேறி விரும்பிய பகுதியை அடைந்தனர் அப்படி காஞ்சிபுரம் (வேங்கடம் ) வாழ்ந்த அகமுடையாரில் ஒரு பகுதியினர் தெற்கே நகர்ந்தனர் அவர்கள் அடைந்த இடம் தஞ்சை வந்து கோட்டைகளை கைப்பற்றினர்

அதன் முதல் தளம் தம்பிகோட்டை, மற்றொரு குழுவினர் கோவில்வெண்ணி க்கு அருகில் இரும்பு தலை கைப்பற்றினர் ; இவர்களுக்கு இரும்புதலை அகமுடையார் என்று பெயர் பெற்றனர்..

மன்னார்குடி தெற்கே உள்ள அகமுடையார் கோட்டைகள் :
1. பரவாக்கோட்டை
2. உள்ளிக்கோட்டை
3. திருமக்கோட்டை
4. கூப்பாச்சிகோட்டை
5. அலங்க்கோட்டை
6. ஆவிக்கோட்டை
7. சுந்ததரக்கோட்டை
8. தளிக்கோட்டை
9. கண்டிதம் பேட்டை
10. இலக்கணாம் பேட்டை
11. வல்லன்குடிகாடு
12. படப்பகாடு
13. மேலதிருப்பாலகுடி
14. கீழதிருப்பாலகுடி
15. சீதாராம்( வடக்கு,தெற்கு )
16. வடசேரி
17. மேலவாசல்
18. கருவபிள்ளை நத்தம்

இந்த் பகுதிகளில் அடர்த்தியாகவுள்ள அகமுடையார் சமுதாயம் இவர்களை அன்றி குடியான சாதி வேறு யாரும் இல்லை

நாலாம் சாதியான அம்பலக்கார்,பறையர் ,பள்ளர் போன்ற சாதியை சேர்ந்தவர்கள் இடம்கொடுத்து விவசயகூலிகளாக இங்கு குடியமர்த்தப்பட்டு வாழ்கின்றனர்

2.2.14

அகமுடையார் நாடுகள்

இரும்பு தலை அகமுடையார் :

இரும்பு தலை அகமுடையார்கள் சிக்கப்பட்டு கிராமத்தை மையமாக கொண்டு ஆதலூர், பெரிய கோட்டை, முன்னாவல் கோட்டை, கருப்ப முதலி கோட்டை , கோவில்வெண்ணி, நீடாமங்கலம், கடம்பூர், ஓரத்தூர் கோட்டையூர், கோனாப்பட்டு, செட்டிசத்திரம், பூவானுர், ராயபுரம், சித்தமல்லி, லாயம், கீழப்பூவாளூர், காளச்சேரி போன்ற கிராமங்களுக்கு பரவினர். இரும்பு தலை அகமுடையார் மற்றும் பதினெட்டு கோட்டை அகமுடையார் என இரு பெரும் பிரிவுகளாக இருந்தனர்..

அகமுடையார் நாடுகள் :
பதினெட்டு கோட்டைப்பற்று நாடு
புண்ணியரசு நாடு (பட்டுக்கோட்டை)
பதினோறு நாடு (பேராவூரணி)
ஐந்து நாடு
இரும்புத்தலை நாடு
அஞ்சுவண்ண பட்டுகோட்டை நாடு
ஆண்டான்குடிநாடு
ஆலங்குடி நாடு
கோனூர் நாடு
அய்யலூர் நாடு
குளமங்கல நாடு

மராட்டிய மன்னன் காலத்தில் இவர்களுக்கு பிள்ளை என்ற பட்டம் சூட்டபட்டுள்ளது, இதன் காரணமாக பட்டுகோட்டை முசுன்குந்த நாட்டு வெள்ளாளர் அவர்களை பிள்ளை என்று அழைப்தில்லை மாறாக வேளார் என்று தான் பெருக்கு பின்னால் போட்டுகொள்கின்றனர்.

யார்?



1772 ல் முத்துவடுகநாதர் இறந்த பின்பு வேலு நாச்சியாரின் உயிரையும் , மானத்தையும் கடைசி வரை காத்தது யார் ?

சிவகங்கை சீமையில் இருந்து டோலி மூலம் திண்டுக்கல் வரை வேலு நாச்சியாரை பாதுகாப்பாக கொண்டு சேர்த்து , மைசூர் மன்னர் ஹைதர் அலியிடம் அறிமுகப்படுத்தி அடைக்கலம் தந்தது யார்..?

சிவகங்கை சீமையை மீட்டெடுக்க ரகசியமாக புரட்சி படை திரட்டியது யார்..?


வேலு நாச்சியார்க்கு 1772 முதல் 1780 வரை திண்டுக்கல்லிலும் , விருபாட்சியிலும் போர் பயிற்சி தந்தது யார்..?

சிவகங்கை சீமையை மீட்க போதிய பணம் இல்லாத காரணத்தால் , திருவிதாங்கூர் மன்னர் நடத்திய போட்டியில் வேங்கை புலியை வென்று , அதன் மூலம் கிடைத்த பணத்தை ஆற்காடு நவாபிடம் கொடுத்து சிவகங்கை சீமையை மீட்டது யார்..?

வெள்ளையரால் தோற்கடிக்கப்படாத ஒரே ராணி வேலு நாச்சியார் என்ற பெருமைக்கு காரணம் யார்..?

அவரை அறிவாலும் , வீரத்தாலும் வழி நடத்தியது யார்..?

தன் நாட்டையும், அரச பதவியையும் வேலு நாச்சியார் ஒப்படைக்கும் அளவிற்கு அறிவு,வீரம்,நிர்வாகம்,போர் திறன்,ஆளுமை அனைத்திலும் சிறந்து விளங்கி உயர்ந்திருந்தது யார்..?

இன்று வரை சிவகங்கை என்னும் சமஸ்தானம் இருப்பதற்கு காரணம் யார்..?

இவர்கள் இல்லையென்றால் 1772ம் ஆண்டோடு சிவகங்கையும்,அதன் அரச வம்சமும் முடிவுக்கு வந்திருக்கும்.

நன்றி மறப்பது நன்றன்று.

1.2.14

பதினொரு நட்டார்கள்

வாழ்க மருது புகழ் வளர்க

ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆள நினைப்பதில் என்ன தவறு குலம் காத்தவனே கொள்கை பிடிப்போடு புறபடுவோம் படை நடத்து பார் ஆள்வோம் பதினொரு நாட்டு சிங்கங்களே

கோட்டை காத்தவர்கள் குலம் வாழ கொள்கை பிடிப்போடு குடி காத்தவர்கள் பதினொரு நட்டார்கள் வீர அகமுடையர் மக்கள் இவர்கள் உடல் உறுதி மலையோடும் மோது ஆற்றல் கொண்ட பதினொரு நட்டார்கள் ; நாடு காப்பதில் எல்லை சாமி போல வாழ்ந்த வீர அகப்படை சென்ற இடம் எல்லாம் வெற்றி வீர நடை நாடு குடி காத்த நல்லவர்கள் , வீரம்,மானம், காவல் இம் மூன்றையும் மூச்சாக கொண்டனர் பதினொரு நாட்டு அகமுடையார்..

பதினொரு நட்டார்கள் : {அகமுடையார் காவல் நாடுகள்}

1. ஆவணம்
2. நெடுவாசல்
3. வேம்பங்குடி
4. களத்தூர்
5. தென்னங்குடி
6. வீரியனங்கோட்டை
7. குருவிக்கரம்பை
8. நாடியம்
9. துறையூர்
10. முடப்புளிக்காடு
11. ஆண்டார்கோட்டை

நன்றி மறப்பது நன்றன்று

1772 ல் ஆங்கிலேயர் மற்றும் ஆற்காடு நவாபின் கூட்டுப்படைகளால் மன்னர் முத்துவடுகநாதர் கொல்லப்பட்ட பிறகு, சிவகங்கையை ஆற்காடு நவாப் தன் வசமாக்கினார். சிவகங்கை சீமையின் பெயர் "ஹுசைன் நகராக" மாற்றப்பட்டது.  1772 முதல் 1780 வரையிலான 8 ஆண்டுகள் ஆற்காட்டு நவாபின் மகனான அமரா அல் உமர், ஹுசைன் நகரான சிவகங்கையை ஆட்சி செய்தார். பின்பு 1780 ம் ஆண்டு மாமன்னர்களின் கூட்டுப்புரட்சி படை சிவகங்கையை மீண்டும் கைப்பற்றியது. பின்பு ராணி வேலு நாச்சியார் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் முழு மனதோடு ஆட்சிப்பொறுப்பை மருது பாண்டியர்களிடம் ஒப்படைத்தார்.  1780 முதல் 1801 வரை மாமன்னர்கள் சீரும் சிறப்புமாக சிவகங்கையை ஆண்டனர். அந்த 21 ஆண்டுகள் சிவகங்கையின் பொற்காலமாகவே கருதப்பட்டு வருகிறது.

வரலாறு மறைக்கப்படுவதும் , திரிக்கப்படுவதும் ஏனோ???

நன்றி மறப்பது நன்றன்று..!!!


30.1.14

மருதுபாண்டியர் பயன்படுத்திய பீரங்கி






 1801-இல் சிவகங்கைச்சீமை மருது சேர்வைக்காரர்கள், ஊமைத்துரை ஆகியோரால் பயன்படுத்தப்பட்ட மூன்று பீரங்கிகளில் ஒன்று. மேலூர், சிங்கம்புணரி, நத்தம் வழியாக வரும் இங்கிலீஷ் கும்பினிப் படைகளுக்காக இந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்தது. 1700 அடி உய்ரத்தில் இருந்து சுட்டால் குண்டு வெகு தூரம் போகும். வரலாறுக் கதை என்றாலேயே ராஜாராணித் தனத்தை வலிந்து புகுத்தி விடுகிறார்கள்.  சின்ன மருது கைத்துப்பாக்கியெல்லாம் செருகி வைத்திருந்தார். அவருக்கு அதைச் சுடப் பழக்கியவர் கும்பினிப் படையின் கர்னல் வெல்ஷ். ஓர் அழகிய கைத்துப்பாக்கியையும் அன்பளிப்பாகக் கொடுத்திருக்கிறார். சிவகங்கைச் சீமை ஆசாமிகள் வெறும் வேலையும் வீச்சரிவாளையும் மட்டும் நம்பியிருக்கவில்லை. மைசூர் திப்பு சுல்த்தானிடமிருந்து வாங்கிய மிலிட்டரி ராக்கெட்டுகளைச் சிங்கம்புணரிக் காடுகளில் சின்னமருது பயன்படுத்தியிருக்கிறார். உலகிலேயே முதல் தடவையாக மிலிட்டரி ராக்கெட்டுகள் அங்குதான் பயன்பட்டன.

டாக்டர் ஜெயபாரதி, வரலாற்று ஆய்வாளர்


23.1.14

சேர்வராயன் மலை

முக்குலத்தோரில் ஒருவரான அகமுடையார் வகுப்பில் பிறந்த சேர்வைக்காரன் சென்று ஐக்கியமான சேலம் ஏற்காட்டில் உள்ள அருள்மிகு சேர்வராயன் கோயில். கோயிலின் சிறப்பு அம்சம் என்றால் கோயில் கருவறைக்கு செல்ல வேண்டுமென்றால் முதுகை வளைத்து கொண்டு தான் செல்ல முடியும். அதுமட்டுமல்லாமல் கோயிலில் சிலையாக வீற்றிருக்கும் சேர்வராயன் சிலைக்கு உச்சியில் நீர் தானாக விழுந்து அபிஷேகம் செய்யும் அதிசயம்.
சேலம் மாவட்டத்தில் உள்ள மிக உயர்ந்த மலைத்தொடர் சேர்வராயன் மலைத்தொடர் ஆகும். 4800 அடி உயரமுள்ள இம்மவைத்தொடருக்கும் முக்குலத்தோரின் ஒரு பிரிவான அகமுடையருக்கும் அதிக தொடர்புள்ளது.மலைக்கு சேர்வராயன் மலை என்று ஏற்படக் காரணமானவன் ஒரு சேர்வைகாரனே.புனிதமும் ஐதீகமுமாயிருந்த ஒரு சேர்வைகாரன் கீழேயிருந்து மலை மேலுள்ள இராமர் கோயிலுக்கு வந்து சேர்ந்தான்.அங்கேயே தங்கினான்.அவனுடைய தெய்வபக்தி அவனுக்குப் பேரையும், புகழையும் பெற்றுத் தந்தது.அவன் இறந்தப்பின் அந்த கோயிலை மக்கள் சேர்வராயன் கோயில் என அழைக்கத் தொடங்கினர்.அக்கோயிலில் சேர்வராயனுக்குச் சிலையும் வைக்கப்பட்டது.நாளடைவில் சேர்வராயன் கோயில் உள்ள மலைக்கும் சேர்வராயன் மலை எனப் பெயர் ஏற்பட்டது.