அகமுடைய தேவர், அகமுடைய சேர்வை, அகமுடைய பிள்ளை, அகமுடைய முதலியார், அகமுடைய உடையாரென பல்வேறு வட்டார பட்டபெயர்களால் பல கூறுகளாக சிதறிக்கிடக்கும் உறவுக்குழுக்களை ஒரே கூரையில் ஒன்றிணைக்கும் ஒரு சிறு முயற்சிக்கான தளம் இது!
22.1.13
அகமுடையார்
அகம் + உடையார் = அகமுடையார்
அகமுடையார் என்றால் அகத்திற்கு தேவையான அறிவும் - வீரமும் இயல்பாக உடையவர் என்று பொருள். மேலும் அகம்படியர் என்பதற்கு எதிரிகளை படிய வைக்கும் திறனை அகத்தில் கொண்டவர் என்றும் பொருளும் உண்டு. பொதுவாக அகமுடையார் என்பதன் பொருள் நில உடைமையாளர், நம்பிக்கைக்குரியவர், பரந்த சிந்தனையாளர் என்று பலவாறாக பொருளில் இலக்கியங்கள் ஊடாக அறிந்துகொள்ள முடிகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் முக்குலத்தோர் சமுதாயத்தில் ஒன்றாகவே அகமுடையார் குலம் இனம்காணப்படுகிறது. அகமுடையார் குலத்தில் சேர்வை , தேவர், பிள்ளை, முதலியார் உள்ளிட்ட இந்த நான்கு பட்டங்களே பெரும்பான்மையான காணமுடிகிறது.
அகமுடையார்களில் "சேர்வை" என்றால் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட குழுவினர் எனப்படும். பொதுவாக மன்னராட்சி காலங்களில் ஒவ்வொரு படைப்பிரிவின் தளபதிகளும் சேர்வை என்றே அழைக்கப்பட்டனர். அதுவே, காலப்போக்கில் சேர்வை என்று பட்டமாக மருவி இன்று அடையாளப்படுகிறது. மேலும், சேர்வை என்றால் அக்குழுவின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் என்று பொருள் படும். அரசுக்கு அமைச்சரவை சார்ந்த அனைத்துவிதமான சேவை செய்தவர்களை சேர்வைக்காரர் என்றும் அழைத்தனர். மாமன்னர் மருது பாண்டியர்களின் வழிவந்த அகமுடையார் குலத்தினர், ”ராஜகுல அகமுடையார்” என்று இன்று அடையாளப்படுகின்றனர்.
அகமுடையார்களில் "தேவர்" பட்டம் என்பது தமிழகத்தின் பெரும்பான்மை மாவட்டங்களில் வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் நாகப்பட்டினம் - திருவாரூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வாழும் அகமுடையார்களுக்கு தேவர் பட்டமே. தஞ்சை டெல்டா பகுதிகளில் தேவர் பட்டம் கொண்டுள்ள அகமுடையார் இனத்தினர், ”பதினெட்டு கோட்டை பற்று அகமுடையார்” என்ற குலபிரிவை சார்ந்த்துள்ளனர். தமிழக வரலாற்று ஆவணங்களின் வாயிலாக முற்கால சோழர்கள் அனைவருமே அகமுடையார் குலத்தை சார்ந்தவர்களாகவே இருந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. கல்லணையை கட்டிய கரிகால சோழனும் ”இரும்புத்தலை அகமுடையார்” குல பிரிவை சார்ந்தவரே. இதை தவிர்த்து, ”சித்தர் மரபு அகமுடையார்” மற்றும் ”தஞ்சை ராஜ வம்சத்து அகமுடையார்” என்ற பிரிவும் இன்றளவும் வேதாரண்யம் - முத்துப்பேட்டை போன்ற தஞ்சை கடலோர பகுதிகளில் வாழும் அகமுடையார் இன மக்களுக்கு உண்டு.
அகமுடையார்களில் பொதுவாக "பிள்ளை" பட்டம் என்பது நிலக்கிழார்களையே குறிக்கிறது. ”கள்ளர் மறவர் கணத்ததோர் அகமுடையார் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆகினாரே” என்ற பாடல் வாயிலாக, போர்த்தொழிற்கு அடுத்த கட்ட நகர்வான வேளாண்மை தொழிலில் ஈடுபட ஆரம்பித்து, அதிலேயே நில நீட்சிகளோடு வாழ்ந்தவர்களின் வழித்தோன்றல்கள் ”பிள்ளை” என்ற பட்டத்தோடு அறியப்பட்டனர்.
அகமுடையார்களில் "முதலியார்" என்ற பட்டம் உடையவர்கள் வட தமிழகத்தில் பெரும்பான்மையாக செருமி வாழ்கின்றனர். முதலியார் என்பதும் போர்ப்படை தளபதிகளையே குறிக்கின்றது. முதலி என்பது ஒரு படையை தலைமைத்தாங்குகின்ற முதன்மையான தளபதி என்று பொருள் தருகிறது. செங்குந்தர் சாதியினருக்கும் முதலியார் பட்டமிருப்பதால் ஒருசிலருக்கு குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. வடதமிழகத்தில் வாழும் அகமுடையார்கள் அனைவருக்கும் பட்டம் என்பது முதலியார் என்று இருந்த போதிலும், அவர்கள் தங்களை அகமுடையார் களாகவே அடையாளப்படுத்தி கொள்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.
அகமுடையார் குல பிரிவுகள்
ராஜகுலம்
கோட்டைப்பற்று (பதினெட்டு கோட்டைப்பற்று)
இரும்புத்தலை
ஐவளிநாடு
நாட்டுமங்களம்
ராஜபோஜ
ராஜவாசல்
கலியன்
சனி
மலைநாடு
துளுவன் ( துளுவேளாளர் )
அகமுடையார் குல பட்டங்கள்
அகமுடைய தேவர்
அகமுடைய சேர்வை
அகமுடைய பிள்ளை
அகமுடைய தேசிகர்
அகமுடைய முதலியார்
அகமுடைய வேளாளர் (துளுவ வேளாளர்)
அகமுடைய உடையார்
அகமுடைய அதிகாரி
அகமுடைய மணியக்காரர்
அகமுடைய பல்லவராயர்
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கோயம்புத்தூர்,திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், திருநெல்வேலி, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் தேவர் என்ற பட்ட பெயருடனும், இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் சேர்வை என்ற பட்டத்தோடும், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம்,கடலூர், சென்னை, பெரம்பலூர், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் முதலியார், துளுவ வேளாளர், உடையார் என்ற பட்டங்களோடும் அகமுடையார் இனத்தினர் அறியபடுகின்றனர்.
மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திர,கேரளா உள்ளிட்ட தென்னிந்தியா முழுவதும் பலவேறு பட்டப்பெயர்களுடன் வசித்து வருகின்றனர். இதைதவிர்த்து, இலங்கை, மலேசியா, பர்மா, சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பெரும்பாலான அகமுடையார் குலத்தினர் பல தலைமுறைகளாக பூர்வீகமாக வசித்து வருகின்றனர். தமிழகத்தின் அனைத்து பகுதியிகளிலும் அகமுடையார் இனத்தினர் பரந்து விரிந்து வாழ்ந்து வருகின்றனர்.தென் தமிழகத்தில் அகமுடையார்களை முக்குலத்தோர் பிரிவுகளில் ஒன்றாகவும் கருதி வருகின்றனர்.
வட தமிழகத்தை பொருத்தவரையிலும் அகமுடையார் இனத்தினர் தனித்தே அடையாளப்பட்டு வருகின்றனர்.பெரும்பாலும் அகமுடையார் இனத்தினரின் பட்டங்களையும், பட்ட பெயர்களையும் வைத்து பலவாறு தமிழகம் முழுவதும் சிதறிக் கிடக்கின்றனர்.தென் தமிழகத்தில் அகமுடையார்களை சேர்வை என்றும் மேலும் முதலியார்,பிள்ளை என்ற பட்டங்களுடன் வட தமிழகத்திலும், தேவர்,பிள்ளை,அதிகாரி,நாயக்கர், தேசிகர் போன்ற பல பட்ட பெயர்களுடன் மத்திய தமிழகத்திலும் அறியபடுகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment