குதிரைகள் பாடகம், கோடகம், இவுளி, வன்னி, குதிரை, பரி, கந்துகம், புரவி என எட்டு வகைப்படும். இவற்றில் இவுளி வகை குதிரைகள் போர்க்காலத்தின்போது வாள், ஈட்டி, கத்தி ஆகியவை வெட்டித்தாக்கினாலும் அவற்றை எதிர்த்துப் போரிடும்.
பின்வாங்காமல் எதிர்த்து நிற்கும்."இந்த ஜாதிக் குதிரையைத்தான் சிவகங்கை
சமஸ்தானப் பாளையாதிபதி பெரிய மருதுபாண்டியர் வைத்திருந்தார். அதேப்போல் குதிரையைத் தேர்வு செய்வதிலும் பெரிய மருதுபாண்டியர் திறமையானவர்.
ஒருமுறை குதிரை வியாபாரி ஒருவன் பெரிய மருதுபாண்டியரிடம் தன்னிடம் இருக்கக்கூடிய அரபுக்குதிரைக்கு இணையான குதிரை எங்குமில்லை என்று தனக்கேயுரிய வாய்ச்சாலத்துடன் விவரித்தான்.
பெரிய மருதுபாண்டியர் சற்றேறக்குறைய தள்ளி நின்றுக்கொண்டு 'எங்கே நான் நிற்குமிடத்திற்கு உன் குதிரையை வரச்சொல் 'என்றார்.
'ஓ! தாராளமாக 'என்றவன் குதிரையைத் தட்டிவிட்டான்.
என்ன வேடிக்கை!
குதிரை அசைய மறுத்து அங்கேயே நின்றது.
பொறுமையிழந்த வியாபாரி குதிரை மீது சவுக்கைச் சொடுக்கினான்.
அப்போதும் அது நகர்வதாகயில்லை.
எப்படி நகரும்?
பெரிய மருதுபாண்டியர் வியாபாரி டம் உரையாடிக் கொண்டிருந்தபோதே, குதிரையை தட்டிக்கொடுக்கும் பாவனையில் குதிரையின் முக்கியமான ஒரு நரம்பைத் தொட்டுவிட்டார்.
அவர் தொடு வர்மக்கலையில் வல்லவர் என்பதை வியாபாரி அறிந்திருக்க முடியாது. குதிரையை அதிக விலைக்கு விற்க ஆசைப்பட்டே அவ்வாறு கூறினான் வியாபாரி. பின்னர் நியாயமான விலைக்கொடுத்து அதை வாங்கும்படி தம் அலுவலரிடம் பணித்தார் பெரிய மருதுபாண்டியர்.
நன்றி :- அகம் பாசறை