அகமுடைய தேவர், அகமுடைய சேர்வை, அகமுடைய பிள்ளை, அகமுடைய முதலியார், அகமுடைய உடையாரென பல்வேறு வட்டார பட்டபெயர்களால் பல கூறுகளாக சிதறிக்கிடக்கும் உறவுக்குழுக்களை ஒரே கூரையில் ஒன்றிணைக்கும் ஒரு சிறு முயற்சிக்கான தளம் இது!
1801-இல் சிவகங்கைச்சீமை மருது
சேர்வைக்காரர்கள், ஊமைத்துரை ஆகியோரால் பயன்படுத்தப்பட்ட மூன்று
பீரங்கிகளில் ஒன்று. மேலூர், சிங்கம்புணரி, நத்தம் வழியாக வரும் இங்கிலீஷ்
கும்பினிப் படைகளுக்காக இந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்தது. 1700 அடி உய்ரத்தில் இருந்து சுட்டால் குண்டு வெகு தூரம் போகும். வரலாறுக் கதை என்றாலேயே ராஜாராணித் தனத்தை வலிந்து புகுத்தி விடுகிறார்கள். சின்ன மருது கைத்துப்பாக்கியெல்லாம் செருகி வைத்திருந்தார். அவருக்கு
அதைச் சுடப் பழக்கியவர் கும்பினிப் படையின் கர்னல் வெல்ஷ். ஓர் அழகிய
கைத்துப்பாக்கியையும் அன்பளிப்பாகக் கொடுத்திருக்கிறார். சிவகங்கைச் சீமை
ஆசாமிகள் வெறும் வேலையும் வீச்சரிவாளையும் மட்டும் நம்பியிருக்கவில்லை.
மைசூர் திப்பு சுல்த்தானிடமிருந்து வாங்கிய மிலிட்டரி ராக்கெட்டுகளைச்
சிங்கம்புணரிக் காடுகளில் சின்னமருது பயன்படுத்தியிருக்கிறார். உலகிலேயே
முதல் தடவையாக மிலிட்டரி ராக்கெட்டுகள் அங்குதான் பயன்பட்டன.
டாக்டர் ஜெயபாரதி, வரலாற்று ஆய்வாளர்
முக்குலத்தோரில் ஒருவரான அகமுடையார் வகுப்பில்
பிறந்த சேர்வைக்காரன் சென்று ஐக்கியமான சேலம் ஏற்காட்டில் உள்ள அருள்மிகு
சேர்வராயன் கோயில். கோயிலின் சிறப்பு அம்சம் என்றால் கோயில் கருவறைக்கு
செல்ல வேண்டுமென்றால் முதுகை வளைத்து கொண்டு தான் செல்ல முடியும்.
அதுமட்டுமல்லாமல் கோயிலில் சிலையாக வீற்றிருக்கும் சேர்வராயன் சிலைக்கு
உச்சியில் நீர் தானாக விழுந்து அபிஷேகம் செய்யும் அதிசயம்.
சேலம்
மாவட்டத்தில் உள்ள மிக உயர்ந்த மலைத்தொடர் சேர்வராயன் மலைத்தொடர் ஆகும்.
4800 அடி உயரமுள்ள இம்மவைத்தொடருக்கும் முக்குலத்தோரின் ஒரு பிரிவான
அகமுடையருக்கும் அதிக தொடர்புள்ளது.மலைக்கு சேர்வராயன் மலை என்று ஏற்படக்
காரணமானவன் ஒரு சேர்வைகாரனே.புனிதமும் ஐதீகமுமாயிருந்த ஒரு சேர்வைகாரன்
கீழேயிருந்து மலை மேலுள்ள இராமர் கோயிலுக்கு வந்து சேர்ந்தான்.அங்கேயே
தங்கினான்.அவனுடைய தெய்வபக்தி அவனுக்குப் பேரையும், புகழையும் பெற்றுத்
தந்தது.அவன் இறந்தப்பின் அந்த கோயிலை மக்கள் சேர்வராயன் கோயில் என அழைக்கத்
தொடங்கினர்.அக்கோயிலில் சேர்வராயனுக்குச் சிலையும்
வைக்கப்பட்டது.நாளடைவில் சேர்வராயன் கோயில் உள்ள மலைக்கும் சேர்வராயன் மலை
எனப் பெயர் ஏற்பட்டது.