அகமுடைய தேவர், அகமுடைய சேர்வை, அகமுடைய பிள்ளை, அகமுடைய முதலியார், அகமுடைய உடையாரென பல்வேறு வட்டார பட்டபெயர்களால் பல கூறுகளாக சிதறிக்கிடக்கும் உறவுக்குழுக்களை ஒரே கூரையில் ஒன்றிணைக்கும் ஒரு சிறு முயற்சிக்கான தளம் இது!

30.1.14

மருதுபாண்டியர் பயன்படுத்திய பீரங்கி






 1801-இல் சிவகங்கைச்சீமை மருது சேர்வைக்காரர்கள், ஊமைத்துரை ஆகியோரால் பயன்படுத்தப்பட்ட மூன்று பீரங்கிகளில் ஒன்று. மேலூர், சிங்கம்புணரி, நத்தம் வழியாக வரும் இங்கிலீஷ் கும்பினிப் படைகளுக்காக இந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்தது. 1700 அடி உய்ரத்தில் இருந்து சுட்டால் குண்டு வெகு தூரம் போகும். வரலாறுக் கதை என்றாலேயே ராஜாராணித் தனத்தை வலிந்து புகுத்தி விடுகிறார்கள்.  சின்ன மருது கைத்துப்பாக்கியெல்லாம் செருகி வைத்திருந்தார். அவருக்கு அதைச் சுடப் பழக்கியவர் கும்பினிப் படையின் கர்னல் வெல்ஷ். ஓர் அழகிய கைத்துப்பாக்கியையும் அன்பளிப்பாகக் கொடுத்திருக்கிறார். சிவகங்கைச் சீமை ஆசாமிகள் வெறும் வேலையும் வீச்சரிவாளையும் மட்டும் நம்பியிருக்கவில்லை. மைசூர் திப்பு சுல்த்தானிடமிருந்து வாங்கிய மிலிட்டரி ராக்கெட்டுகளைச் சிங்கம்புணரிக் காடுகளில் சின்னமருது பயன்படுத்தியிருக்கிறார். உலகிலேயே முதல் தடவையாக மிலிட்டரி ராக்கெட்டுகள் அங்குதான் பயன்பட்டன.

டாக்டர் ஜெயபாரதி, வரலாற்று ஆய்வாளர்


No comments:

Post a Comment