1772 ல் ஆங்கிலேயர் மற்றும் ஆற்காடு நவாபின்
கூட்டுப்படைகளால் மன்னர் முத்துவடுகநாதர் கொல்லப்பட்ட பிறகு, சிவகங்கையை
ஆற்காடு நவாப் தன் வசமாக்கினார். சிவகங்கை சீமையின் பெயர் "ஹுசைன் நகராக" மாற்றப்பட்டது. 1772 முதல் 1780 வரையிலான 8 ஆண்டுகள் ஆற்காட்டு நவாபின் மகனான அமரா அல் உமர், ஹுசைன் நகரான சிவகங்கையை ஆட்சி செய்தார். பின்பு 1780 ம் ஆண்டு மாமன்னர்களின் கூட்டுப்புரட்சி படை சிவகங்கையை மீண்டும் கைப்பற்றியது. பின்பு ராணி வேலு நாச்சியார் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் முழு மனதோடு ஆட்சிப்பொறுப்பை மருது பாண்டியர்களிடம் ஒப்படைத்தார். 1780 முதல் 1801 வரை மாமன்னர்கள் சீரும் சிறப்புமாக சிவகங்கையை ஆண்டனர்.
அந்த 21 ஆண்டுகள் சிவகங்கையின் பொற்காலமாகவே கருதப்பட்டு வருகிறது.
வரலாறு மறைக்கப்படுவதும் , திரிக்கப்படுவதும் ஏனோ???
நன்றி மறப்பது நன்றன்று..!!!
வரலாறு மறைக்கப்படுவதும் , திரிக்கப்படுவதும் ஏனோ???
நன்றி மறப்பது நன்றன்று..!!!
No comments:
Post a Comment