1943ல் தேசத்தந்தை நேதாஜியை சிங்கப்பூரில் சந்தித்து இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்து, பின்னர் பயிற்சியாளராக உயர்ந்தவர். மலேசியாவில் தொழிலாளர் ஒடுக்குமுறைக்கு எதிராக "இளைஞர் தற்கொலைப் படை” ஒன்றை நிறுவி, இளைஞர்களுக்கு கொரில்லா பயிற்சியும் துப்பாக்கிச்சுடும் பயிற்சியும் கொடுத்தவர். எங்கள் ஒருங்கிணைந்த தஞ்சை மண்ணான டெல்டா மாவட்டங்களில் சுதந்திரத்திற்கு பின்னாலும் வேறூருன்றிருந்த தலித் விரோத ஆதிக்க போக்கை அன்றைக்கே எதிர்த்து கம்யூனிசத்தை வளர்த்தெடுத்தவர்.
அந்த மாவீரன் யார் தெரியுமா?
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், வாட்டாக்குடி கிராமத்தில் இராமலிங்கத்தேவர் - தையல் அம்மாளுக்கு, 1920 நவம்பர் 15 அன்று வெங்கடாச்சலம் என்ற இயற்பெயரோடு பிறந்த மாவீரன் வாட்டாக்குடி இரணியன், தனது 30வது வயதிலேயே விவசாயிகளின், தொழிலாளர்களின் உரிமைக்காகப் பாடுபட்டதன் விளைவாக காவல்துறையால் கொல்லப்பட்ட தினம் இன்று. (05.05.1950)
டெல்டா பகுதியில் ஜமீன்தாரி/பண்ணை ஒழிப்பை கொண்டுவந்து அப்பாவி தலித் மக்களை காத்ததால், வாட்டாக்குடி இரணியன் மட்டுமல்ல; ஜாம்பனோடை சிவராமனையும் சேர்த்து இருபெரும் பொதுவுடைமை போராளிகளை ஒரேநாளில் காவல்துறையால் கொல்லப்பட்ட தினம் இன்று மே 5 1950. இம்மாவீரர்கள் சாதியால் (அகமுடையார் - தேவர்) ஆதிக்கவாதிகள்; ஆனால், செயலால் பொதுவுடைமை வாதிகள்!
மாவீரர்களுக்கு வீரவணக்கம்!
No comments:
Post a Comment