அகமுடைய தேவர், அகமுடைய சேர்வை, அகமுடைய பிள்ளை, அகமுடைய முதலியார், அகமுடைய உடையாரென பல்வேறு வட்டார பட்டபெயர்களால் பல கூறுகளாக சிதறிக்கிடக்கும் உறவுக்குழுக்களை ஒரே கூரையில் ஒன்றிணைக்கும் ஒரு சிறு முயற்சிக்கான தளம் இது!

25.3.14

டெல்டா கம்யூனிஸ்ட்!

“ 1950 ம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் தேதி, உலகம் முழுவதும் கார்ல் மார்க்ஸின் பிறந்த தினத்தைக் கொண்டாடும் போது அந்தப் பகுதி மட்டும் கலவரப்பட்டுக் கிடந்தது.”

தமிழகத்தில் முதன் முதலாய் விவசாயத் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வுக்காகவும் வர்க்கச் சுரண்டலை எதிர்த்தும் சங்கமாகச் சேர்ந்த தஞ்சையில் உதித்திட்ட இரு பெருஞ்சுடர்களான.

‘வாட்டாக்குடி இரணியன்-ஜாம்புவானோடை சிவராமன்’! 1947 இல் இந்திய விடுதலைக்குப் பின் பண்ணையார்கள் காங்கிரசில் சேர, ஆளுங் கட்சியின் ஆதரவோடு பண்ணை அடிமை முறை வளர்த்தெடுக்கப்படுகிறது.

மக்களைக் காக்க வேண்டிய காவல்துறையும் பண்ணையாருக்கு ஏவல் துறையாய் துணை நிற்க, விவசாயிகள் சொல்லொண்ணாத் துயரமோ வரலாறாய் நிற்கிறது.

இந்தச் சூழலில் கம்யூனிஸ்ட் கட்சி தடைகள் பல கடந்து பாட்டாளி மக்களுக்கு ஆதரவாய் ஆக்ரோஷமாய் போராடுகிறது. அந்தப் போராட்டச் சூழலில் உதித்த சூரியர்கள் தான் இரணியனும் சிவராமனும் ; இருவரது பிரவேசமும் உச்சகட்டமாய் 1940ல் துவங்குகிறது.

1950 மே மாதத் துவக்கத்தில் நிறை வடைகிறது . இடைப்பட்ட பத்து ஆண்டுகள் தஞ்சை மாவட்ட கிராமங்களில் குறிப்பாக தென்பரை, ஆம்பலாம்பட்டு முதலிய ஊர்களில் கட்சி கால்கோல் நாட்டப்பட்டு இயக்கமாய் வளர்ந்து, பலருக்கு வெளிச்சத்தையும் சிலருக்கு அச்சத்தையும் தெரிவிக்கிறது.

சாதிய இயக்கங்கள் பெருகி வரும் இந்த நாளில் இந்தப் புதினத்திற்கு இன்னுமொரு சிறப்புண்டு. இரணியனும், சிவராமனும் பிறப்பால் தேவர் சாதியான அகமுடையார் இனத்தவர்கள்.

அவர்கள் ஏற்றுக் கொண்ட பணியோ பாட்டாளி மக்களின் விடியலுக்கான வீரஞ்செறிந்த போர். சொந்தச் சாதியினை எதிர்த்து மிக இளம்வயதில் தன் சுகம் மறுத்து வர்க்கப் போராட்டத்தின் வாசலைத் திறந்து வைத்தனர்.

இருவரும் 1950 மே 3 மற்றும் 5ம் நாள் ஒருவர் பின் ஒருவராய் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டு, விதை நெல்லாய் விதைக் கப்படுகிறார்கள்; அதன் விளைச்சலை இன்று டெல்டா மாவட்டம் முழுக்க பார்க்கிறோம்.

இரணியனுக்கு வடசேரி காட்டில் உணவு உதவிகள் செய்துவந்த அம்பலாபட்டு ஆறுமுகமும் சுட்டு கொல்லப்பட்டார்.

நன்றி:  மு.சிவா தேவர், பதினெட்டு கோட்டை அகமுடையார் நாடுகள்

No comments:

Post a Comment