அகமுடைய தேவர், அகமுடைய சேர்வை, அகமுடைய பிள்ளை, அகமுடைய முதலியார், அகமுடைய உடையாரென பல்வேறு வட்டார பட்டபெயர்களால் பல கூறுகளாக சிதறிக்கிடக்கும் உறவுக்குழுக்களை ஒரே கூரையில் ஒன்றிணைக்கும் ஒரு சிறு முயற்சிக்கான தளம் இது!

26.12.13

திரை இயலறிந்த கொற்றவர் பெரிய மருதுபாண்டியர்

குதிரைகள் பாடகம், கோடகம், இவுளி, வன்னி, குதிரை, பரி, கந்துகம், புரவி என எட்டு வகைப்படும். இவற்றில் இவுளி வகை குதிரைகள் போர்க்காலத்தின்போது வாள், ஈட்டி, கத்தி ஆகியவை வெட்டித்தாக்கினாலும் அவற்றை எதிர்த்துப் போரிடும். பின்வாங்காமல் எதிர்த்து நிற்கும்."இந்த ஜாதிக் குதிரையைத்தான் சிவகங்கை சமஸ்தானப் பாளையாதிபதி பெரிய மருதுபாண்டியர் வைத்திருந்தார். அதேப்போல் குதிரையைத் தேர்வு செய்வதிலும் பெரிய மருதுபாண்டியர் திறமையானவர்.

ஒருமுறை குதிரை வியாபாரி ஒருவன் பெரிய மருதுபாண்டியரிடம் தன்னிடம் இருக்கக்கூடிய அரபுக்குதிரைக்கு இணையான குதிரை எங்குமில்லை என்று தனக்கேயுரிய வாய்ச்சாலத்துடன் விவரித்தான்.

பெரிய மருதுபாண்டியர் சற்றேறக்குறைய தள்ளி நின்றுக்கொண்டு 'எங்கே நான் நிற்குமிடத்திற்கு உன் குதிரையை வரச்சொல் 'என்றார்.

'ஓ! தாராளமாக 'என்றவன் குதிரையைத் தட்டிவிட்டான்.

என்ன வேடிக்கை!

குதிரை அசைய மறுத்து அங்கேயே நின்றது.

பொறுமையிழந்த வியாபாரி குதிரை மீது சவுக்கைச் சொடுக்கினான்.

அப்போதும் அது நகர்வதாகயில்லை.

எப்படி நகரும்?

பெரிய மருதுபாண்டியர் வியாபாரி டம் உரையாடிக் கொண்டிருந்தபோதே, குதிரையை தட்டிக்கொடுக்கும் பாவனையில் குதிரையின் முக்கியமான ஒரு நரம்பைத் தொட்டுவிட்டார்.

அவர் தொடு வர்மக்கலையில் வல்லவர் என்பதை வியாபாரி அறிந்திருக்க முடியாது. குதிரையை அதிக விலைக்கு விற்க ஆசைப்பட்டே அவ்வாறு கூறினான் வியாபாரி. பின்னர் நியாயமான விலைக்கொடுத்து அதை வாங்கும்படி தம் அலுவலரிடம் பணித்தார் பெரிய மருதுபாண்டியர்.

நன்றி :- அகம் பாசறை

13.12.13

முதற் நேதாஜி சிலை!


இந்தியாவின் முதல் நேதாஜி சிலையை சிவகங்கையில் அமைத்தவர் திரு.சுந்தர்ராஜன் சேர்வை. 1944 யில் இந்திய தேசிய இராணுவம் மணிப்பூரில் இம்பால் வழியாக இந்தியாவில் நுழைந்ததன் வெற்றியைக் குறிப்பதற்காக அச்சிலை நிறுவப்பட்டது. 1946யில் நேதாஜி பிறந்தநாள் அன்றே சிலையை திறந்து வைத்தார் சுந்தர்ராஜன் சேர்வை.

நன்றி : நேதாஜி மாத இதழ்

4.12.13

அகமுடையார் குலத்தில் உதித்த பாம்பன் சுவாமிகள்

பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்:

பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் ( English : Pamban Gurudasa Swamigal ) , (பி.1850-52அ,இ.மே 30,1929) தமிழ்நாட்டில் இராமேசுவரம் தீவில் அமைந்துள்ள பாம்பன் என்ற ஊரில் பிறந்த வடமொழி, தென்மொழி இரண்டிலும் புலமைபெற்று ஆறுமுகனை வழிபட்டு வந்த ஓர் தமிழ்த்துறவி ஆவார். திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் வழியில் சித்திரக் கவிகள் எழுதியுள்ளார். தனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும் சைவ நெறியாகிய குகப்ரம்ம நெறிக்கும் தனது பாடல்களாலும், சாத்திரங்களாலும் தொண்டாற்றினார். முருகனின் வழிபாடாக இவர் இயற்றிய பாடல்கள் 6666. இவை ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவரியற்றிய சண்முக கவசம் புகழ்பெற்றது. பாம்பன் சுவாமிகள் மே 30, 1929 அன்று சமாதி அடைந்தார். அவரது சமாதி கோவில் சென்னை, திருவான்மியூரில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

பழந்தமிழ்க் குடியான #அகம்படியர் குடியில் சாத்தப்பப் பிள்ளை என்பாருக்கும் செங்கமலம் என்பாருக்கும் மகனாக தோராயமாக 1850 ஆம் ஆண்டு இராமேசுவரத்தை அடுத்த பாம்பனில் பிறந்தார். இவரது இயற்பெயர் அப்பாவு என்பதாகும். 1866 ஆம் ஆண்டு உள்ளூர் கிருத்துவப் பள்ளியில் பயின்றார். முனியாண்டிப் பிள்ளை என்பாரிடம் தமிழ் கற்றார். சிறுவயதில் இவருக்கு கந்தர் சட்டிக் கவசம் மிகவும் ஈர்த்த நூலாகும். இதுவே இவர் பின்னாளில் சண்முக கவசம் இயற்ற தூண்டுதலாக இருந்தது. சேது மாதவ அய்யர் என்பாரிடம் வடமொழியும் கற்கலானார்.

இவருக்கு அகவை 25ஐ எட்டிய பொழுது மதுரை சின்னக் கண்ணு பிள்ளை மகளாகிய காளிமுத்தம்மாளை 1878ஆம் ஆண்டு வைகாசித்திங்களில் இராமநாதபுரத்தில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு முருகையபிள்ளை, சிவஞானாம்பாள், குமரகுருதாச பிள்ளை என மூன்று மகவுகள் பிறந்தனர்.

1894ஆம் ஆண்டு இராமநாதபுரத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிரப்பன்வலசை என்ற ஊரில் நிட்டையில் இறங்கினார். 35 நாட்கள் அருந்தவம் புரிந்த நிலையில் இவருக்கு முருகப் பெருமானே உபதேசம் நல்கியதாக இவரது சீடர்கள் நம்புகின்றனர். இவரது கனவுகளில் முருகன் வழிநடத்துவதாகவும் அவர்கள் நம்புகின்றனர். இவ்வாறான வழிகாட்டலில் அவர் சென்னை சென்றார். அங்கிருந்து பல தலங்களுக்கு சமயப்பயணங்கள் மேற்கொண்டார். அப்போது அவருடன் பழகிய திரு. வி. க இவ்வாறு கூறுவார்:

"குமரகுரு திருவல்லிக்கேணியில் தங்கியிருந்தபோது நாடோறும் மாலை வேளையில் கடற்கரை செல்வர். அவருடன் யானும் போவேன். அடிகள் வடமொழி உபநிடதக் கருத்துக்களைத் தமிழில் விளக்குவர். சாத்திர நுட்பங்களை எளிதில் வெளியிடுவர்" திரு.வி.க.வாழ்க்கை குறிப்பு பக்கம் 127.

1923ஆம் ஆண்டு திசம்பர் 27 அன்று சென்னை தம்பு செட்டி வீதியில் சென்று கொண்டிருந்த சுவாமிகள் மீது, குதிரை வண்டிச் சக்கரம் இடது கணைக்கால் மீது ஏறியதால் கால் எலும்பு முறிந்து சுவாமிகள் பொதுமருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தொடர்ந்த சண்முகக் கவசம் பாடிவந்தமையால் மயில் வாகனத்தில் வந்த முருகன் அருளால் கால் எலும்பு சேர்ந்ததாக அந்நாள் மயூர சேவன விழா என ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் சிறப்பாக நடைபெறுகிறது.

மே 30 , 1929 அன்று காலை 7.15 மணிக்குச் சுவாமிகள் சமாதியடைந்தார்கள். சுவாமிகள் திருமேனி அலங்கரிக்கப்பட்ட புஷ்பவிமானத்தில் ஊர்வலாமாக எடுத்து வரப்பட்டு மே 31 , 1929 திருவான்மியூரில் சமாதி அமைக்கப்பட்டது.
சுவாமிகள் இயற்றிய பாடல்கள்
Search Wikisource விக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:
சண்முக கவசம்

சண்முக கவசம்
பஞ்சாமிருத வண்ணம்
குமரகுருதாச சுவாமிகள் பாடல் - 1266
ஸ்ரீமத் குமார சுவாமியம் (குமார நாயகன் திருவிளையாடல்) - 1192
திருவலங்கற்றிரட்டு(பல சந்தப் பரிமளம்) - 1135
திருப்பா (திட்ப உரை) - 1101
காசியாத்திரை(வடநாட்டு யாத்திரை அனுபவம்) - 608
சிறு நூற்றிரட்டு (சண்முக கவசம் முதலிய பத்து) - 258
சீவயாதனா வியாசம் (சீவகாருண்யம் - புலால் மறுப்பு) - 235
பரிபூரணானந்த போதம் (சிவசூரியப் பிரகாசம் உரை) - 230
செக்கர் வேள் செம்மாப்பு - 198
செக்கர் வேள் இறுமாப்பு - 64
தகராலய ரகசியம் (சதானந்த சாகர உரை)- 117
குமரவேள் பதிற்றுப் பத்தந்தாதி - 100
சேந்தன் செந்தமிழ் (வடமொழி கலவாத் தனித் தமிழ்)- 50
குமாரஸ்தவம் 44
தென்னாட்டுத் திருத்தலதரிசனம் (கட்டளைக் கலித்துறை) 35
பத்துப் பிரபந்தம் (சித்திரக் கவிகள்) 30
ஆனந்தக்களிப்பு 30
சமாதான சங்கீதம் 1
சண்முக சகச்சிர நாமார்ச்சனை 2
ஆகப் பாடல்கள் 6666

15.11.13

சீரமைக்கப்படுமா மருதுகோவில்?


மருது பாண்டியர் படத்தை பயன்படுத்தி பலரை மகிழ்விக்கும் கட்சிகள் கவனத்திற்கு:-

நரிக்குடியில் உள்ள முக்குளத்தில் மருதுபாண்டியர்கள் மற்றும் அவர் மனைவிமார்கள் கோவில் இடியும் நிலையில் சிதைந்து உள்ளது. இதை சீரமைக்க முன்வர தயராகுங்கள். திருப்பணிகள் பல செய்த எம்மன்னன் கோவிலுக்கே இந்ந நிலையா ? நாடு போற்றும் மருதுபாண்டியரின் ஆலயத்தை திருப்பணி செய்ய வாரீர்.

13.11.13

மருது என்ற மாவீரம்

மாமன்னர் மருது பாண்டியர்களுடைய வீரமும், நாட்டை காலனியாக வைத்திருந்து ஆதிக்கம் செலுத்திய, வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அவர்களது போராட்டமும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழனுடைய பங்களிப்புகளாக, ஒட்டுமொத்த தமிழகமும் நினைவுபடுத்தி பார்க்க வேண்டிய நிகழ்வு.

இன்று உலகமயமாக்களின் காலத்தில் அந்நிய நாட்டு ஊடுருவல்கள் சமூக, பொருளாதார, ராணுவ, பண்பாட்டு ரீதியான, சந்தை ரீதியான உறவுகளில் உள்ளே நுழையும் சூழலில், கடந்த காலங்களில் தமிழன் அஞ்சாமல் அந்நியரை எதிர்த்துப் போராடிய வரலாறுகளை நாம் நினைவுபடுத்தி பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது.

1748 ஆம் ஆண்டில் டிசம்பர் 15ஆம் தேதி உடையார்சேர்வை என்ற மூக்கையா பழனியப்பனுக்கும், ஆனந்தாயி என்ற பொன்னாத்தாளுக்கும் மகனாக இன்றைய விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டைக்கு அருகே உள்ள நரிக்குடியில் பெரிய மருது பிறந்தார். 5 ஆண்டுகள் கழித்து 1753-ல் சின்ன மருது பிறந்தார்.

சிவகங்கையில் விஜயரகுநாத சேதுபதி அரசராக இருந்தபோது, தகுதிவாய்ந்த இளவல்களை தேடியபோது, மருது சகோதரர்களை அனுப்பி வைத்தார்கள். 1761 ஆம் ஆண்டில் அவர்களை முத்து வடுகநாதரும், வேலு நாச்சியாரும் சிவகங்கை அழைத்து வந்தனர். வேட்டையாட சென்ற மன்னருக்கு உதவி செய்ய சென்ற மருது சகோதரர்கள், வேங்கையை எதிர்கொண்டு வீழ்த்தியதாகவும் வரலாறு உண்டு.

அரசி வேலு நாச்சியாருக்கு போர் பயிற்சியை கொடுத்தவர் சின்ன மருது என்றும் சொல்வார்கள். விஜயரகுநாத சேதுபதி மன்னன் சேது நாட்டை வென்றான். நாட்டை ஆளவந்த ஆங்கிலேயர்களின் தளபதி ஜோசப் சுமித் தஞ்சை மீது போர் தொடுத்தான். தஞ்சை மன்னன் ஆற்காடு நவாப்பிற்கு கப்பம் கட்ட ஒப்புக்கொண்டான்.

ஆங்கிலேய படையுடன் புதுக்கோட்டை தொண்டைமான் படை உதவி செய்து ராமநாதபுரத்தை முற்றுகையிட்டது. அதன் பிறகு சிவகங்கை சீமையை கைப்பற்ற நவாப் சூழ்ச்சி செய்தான். முத்து வடுகநாதர் போரில் மரணமடைந்தார். வேலு நாச்சியாரை காப்பாற்ற மருது சகோதரர்கள் படை திரட்டுகிறார்கள்.

திண்டுக்கல் அருகே உள்ள விருப்பாட்சியில், ஹைதர் அலியை சந்திக்கிறார்கள். அவரது பாதுகாப்பில் வேலு நாச்சியாரை தங்கவைக்கிறார்கள். 1772 முதல் 1780 வரை தலைமறைவு வாழ்க்கை நடத்தி, மருது சகோதரர்கள் படை திரட்டுகிறார்கள்.

ஆற்காடு நவாப்பிற்கும், ஆங்கிலேயர்களுக்கும் எதிராக படை திரட்டும் மாமன்னர் மருது பாண்டியர்கள் கட்டபொம்மன் தலைமையில், இணைப்பை ஏற்படுத்துகிறார்கள். ஹைதர் அலியின் உதவி அவர்களுக்கு கிடைக்கிறது. ஊமத்துரையும், சின்ன மருதுவும் நெருக்கமான நண்பர்களாகிறார்கள். சிவகங்கை காட்டுப் பகுதி கிராமங்களில், அடிப்படை மக்களுடன் இரண்டறக் கலந்து வாழத் தெரிந்த மாமன்னர் மருது பாண்டியர்கள், சுதந்திரப் படையைத் திரட்ட முடிகிறது.

1772க்குப் பிறகு காட்டில் மறைந்து வாழ்ந்த மாமன்னர் மருது சகோதரர்கள் தமது கிளர்ச்சியை 1779ல் தொடங்கி ஆற்காடு நவாப், தொண்டைமான் மற்றும் கும்பினியர்களின் படைகளை வெற்றி கொண்டு 1780ல் சிவகங்கைச் சீமையை மீட்டு வேலு நாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினர்.

இந்தப் போரில் பெரிய மருது மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனம் சேர்வை பூவந்தி வாயிலிலும், வேலு நாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு போரிட்டனர். அரசியாரின் போர் வியூகத்தையும், வீரத்தையும் வெளிப்படுத்தியது. மேற்கில் திண்டுக்கல்லிருந்து தக்க சமயத்தில் வந்த ஹைதர் அலியின் படையும் வெற்றிக்கு உதவியது.

26.10.13

மருது பாண்டியர் மறைக்கப்பட்ட உண்மைகள்

பி.ஏ. கிருஷ்ணன்
“நான் இந்தப் பக்கங்களில் கூறியிருக்கும் நிகழ்வுகள் பன்னிரெண்டு, பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னால், ராணுவ அதிகாரி ஒருவரால் என்னிடம் கூறப்பட்டவை. அவர் நிகழ்வுகளை நேரில் பார்த்தவர்.

என்னிடம் அவர் சொன்னது இது: ‘உன்னால் இந்த உண்மைக் கதையை உலகத்திற்குச் சொல்ல முடியும். என்னால் முடியாது.’ ”

இது கோர்லே என்னும் ஆங்கிலேயர் எழுதிய புத்தகத்தின் தொடக்கம். இந்தப் புத்தகம் 1813இல் எழுதப்பட்டது. மருது பாண்டியரின் கதையைச் சொல்வது. (எனக்குத் தெரிந்த அளவில்) வரலாற்று ஆசிரியர்களின் பார்வையில் இன்றுவரைக்கும் படாதது. பதிப்பாளர் அகப்படாததால் (அல்லது பதிப்பிக்க மறுத்ததால்) அவராலேயே பதிப்பிக்கப்பட்டது.
புத்தகத்தின் பெயர்: Mahradu- An Indian Story of the Beginning of the Nineteenth Century – With Some Observations on the Present State of the British Empire and Chiefly of its Finance.. லண்டனில் பதிப்பிக்கப்பட்ட இந்தப் புத்தகத்தின் விலை நான்கு ஷில்லிங்குகள்.

புத்தகம் எழுதப்பட்டிருக்கும் விதம் படிப்பவர்களையும் படிக்கத் தான் வேண்டுமா என்று யோசிக்கவைக்கும். நமது கழக எழுத்தாளர்களையே வியக்கவைக்கும் அளவிற்கு, ஒவ்வொரு வாக்கியமும் ஒரு பக்கத்திற்கு மேல். முதற்பகுதி மருது பாண்டியரைப் பற்றி. பின்பகுதி பிரித்தானியப் பேரரசின் வரவு செலவு விவகாரங்களைப் பற்றி.

உண்மையைச் சொல்ல வேண்டும், இதுவரை சொல்லாததைச் சொல்ல வேண்டும் என்னும் ஆசிரியரின் ஆர்வம் புத்தகத்தின் முதற்பகுதியில் வெளிப்படுகிறது. அவர் சொல்லும் உண்மை அதிரவைக்கும் உண்மை. இதுவரை வெளிவராத உண்மை. ஒரு அழித்தொழிப்பைப் பற்றிய உண்மை.
 
பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழகத்தைப் பற்றிப் பேசும் அனைவரும் மருது சகோதரர்களை வென்றது பற்றியும் அவர்கள் தூக்கிலிடப்பட்டது பற்றியும் குறிப்பிடத் தவறுவதில்லை. கர்னல் வெல்ஷ் தனது “இராணுவ நினைவுகள்” நூலில் மருது சகோதரர்களுடன் நடந்த போரைப் பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறார். கட்டபொம்மன் வெள்ளையரை எதிர்த்துப் போர் புரிந்ததற்குக் காரணம் இருந்தது. ஆனால் மருது போர் புரிந்ததற்குக் காரணம் ஏதும் இல்லை என்று சொல்லும் அவர், மருதுவின் வீரர்கள் பாஞ்சாலங்குறிச்சி வீரர்களைப் போலப் போர் புரியவில்லை என்கிறார்.

Indeed twenty thousand Panjalumcoorcheers would have been invincible in his country.

“இருபதாயிரம் பாஞ்சாலங் குறிச்சிக்காரர்கள் இவரது நாட்டில் இருந்திருந்தால், அவர்கள் வெல்ல முடியாதவர்களாக இருந்திருப்பார்கள்.”

தனக்கும் மருது சகோதரர்களுக்கும் உள்ள தோழமையைப் பற்றி வெல்ஷ் இவ்வாறு கூறுகிறார்.

“(இருவரில்) மூத்தவரின் பெயர் வெள்ளை மருது. இவருக்கும் அரசாளுவதற்கும் தொடர்பே கிடையாது. இவர் பெரிய வேட்டைக்காரர். வாழ்வு முழுவதையும் சுற்றித் திரிந்தே கழித்தவர். ஒப்பற்ற உடல் வலிமை கொண்ட இவர் ஆர்க்காட்டு ரூபாயைத் தனது விரல்களால் வளைக்கக்கூடியவர். ஐரோப்பியர்களால் மிகவும் மதிக்கப்பட்டவர். புலி வேட்டையில் முதலில் நின்று புலியைக் கொல்வது இவர்தான். இவரது தம்பி சின்ன மருது சிறுவயதிலிருந்து அரசாண்டவர். அவரது தலையசைப்பையே சட்டமாக மதித்தனர் அவரது மக்கள். அவரது அரண்மனையில் ஒரு காவலாளிகூடக் கிடையாது. யாரும் உள்ளே செல்லலாம், வெளியே வரலாம்.”

தனக்கு வேல் பிடிக்கவும் களரிக் கம்பு வீசவும் கற்றுக்கொடுத்தது சின்ன மருதுதான் என்று கூறும் வெல்ஷ், ஒரு மிருகத்தைப் போல அவர் வேட்டையாடப்பட்டதையும் தொடையில் காயப்பட்டு, காலொடிந்து சிறைப்பட்டதையும் சாதாரணக் குற்றவாளியைப் போலத் தூக்கிலிடப்பட்டதையும் மனவருத்தத்தோடு கூறுகிறார். வெல்ஷின் கூற்றுப்படி, சின்ன மருதுவின் கடைசி மகனைத் தவிர அவரது குடும்பத்தவர் அனைவரும் வெள்ளையரால் தூக்கிலிடப்பட்டனர். கடைசி மகன் துரைசாமிக்கு அப்போது வயது பதினைந்து. பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்டார்.

“தூத்துக்குடியில் இருந்த இராணுவ அணிக்கு நான் தலைமை தாங்க அனுப்பப்பட்டேன். கலகத்தில் ஈடுபட்டதால் நாடுகடத்தல் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அங்குதான் இருந்தார்கள். அங்குதான் எனக்கு என் பழைய நண்பர் சின்ன மருதுவின் மகன் துரைசாமியின் விலங்குகளைத் தளர்த்தும் வாய்ப்பு - எனது நெஞ்சை உருகவைக்கும் வாய்ப்பு - கிடைத்தது. அவரது காவல் என்னிடம் கொடுக்கப்பட்டிருந்ததால், என்னால் அவரைத் தப்பவைக்க முடியவில்லை.”

உரிய மரியாதையுடன் அவரை நடத்த ஆணையிட்ட வெல்ஷ், பதினேழு வருடங்கள் கழித்து அவரைத் திரும்பப் பினாங்கில் மிகவும் தாழ்ந்த நிலையில் சந்தித்ததையும் தனது நினைவுகளில் குறிப்பிடுகிறார்.
மருதுவின் குடும்பத்தினர் தூக்கிலிடப்பட்டதாகக் கூறும் வெல்ஷ் சிறுவர்கள் தூக்கிலிடப்பட்டதாகக் குறிப்பிடவில்லை.

ஊழலில் பிறந்து ஊழலிலேயே வளர்ந்ததாகக் கிழக்கிந்தியக் கம்பெனி அரசைக் குற்றஞ்சாட்டும் கோர்லே இவ்வாறு கூறுகிறார்;
“இது (இந்த அரசு) திறமையின் சாயலைக்கூட வெறுப்பது; ஏனென்றால் திறமை ஊழலின் எதிரி என்று அதற்குத் தெரியும். இந்த அரசு தாங்கிப் பிடிப்பது அதிகாரத்தை - வரைமுறையற்ற, கீழ்த்தரமான அதிகாரத்தை -ஏனென்றால் அதிகாரத்தால் மட்டுமே தன்னால் நிலைத்து நிற்க முடியும் என்று அதற்குத் தெரியும்.”

கோர்லே தனது புத்தகத்தில் மருதுவின் புகழ்பெற்ற திருவரங்கம் அறிக்கையை முழுவதுமாக வெளியிட்டிருக்கிறார். இந்த அறிக்கையைப் பற்றி நான் எனது ‘புலிநகக் கொன்றை’யில் குறிப்பிட்டிருக்கிறேன். விடுதலை வேண்டி அடிமனத்தின் ஆழத்திலிருந்து குரல் கொடுக்கும் இந்த அறிக்கை கோர்லேயையும் மிகவும் பாதித்திருக்கிறது. இந்த அறிக்கையைக் கி பி முதல் நூற்றாண்டில் ஜூலியஸ் அக்ரிகோலாவின் தலைமையில் நிகழ்ந்த ரோமானியப் படையெடுப்பிற்கு எதிராகக் கால்ககஸ் (Calgacus/Galgacus) என்ற கலடோனியத் (வட ஸ்காட்லாந்து) தளபதி நிகழ்த்திய பேருரைக்குக் கோர்லே ஒப்பிடுகிறார்.

“மனித இயல்பு எங்கேயும் ஒன்றுதான். எங்கெங்கெல்லாம் இறைவனால் தன்மானம் சிறிதளவாவது அளிக்கப்பட்டிருக்கிறதோ அங்குள்ளவர்களின் உணர்வுகள் ஒன்றாக இருக்கும் - அவை காலங்களையும் எல்லைகளையும் கடந்தவை. மருதுவின் அறிக்கையின் நோக்கம் அவரை நசுக்குபவர்களைக் கொடுங்கோலர்களாகவும் கூலிப்படைகளாகவும் உண்மையான வீரர்களின் அடிப்படைத் தன்மைகளான பரந்த மனமும் உயர்ந்த உள்ளமும் அற்றவர்களாகவும் சித்தரிப்பதுதான். கால்ககஸின் நோக்கமும் அதுவே.”

மருதுவின் அறிக்கை ஆங்கிலேயர்மீது அவர்கள் இந்தியாவில் ஆட்சி செலுத்தும் முறைமீது மக்களின் ஆழ்மனங்களில் இருப்பதை வெளிப்படையாகக் கூறுகிறது என்று குறிப்பிடும் ஆசிரியர், இந்த அறிக்கை ஆங்கிலேயரின் மிகக் கீழ்த்தரமான பழிவாங்கும் எண்ணத்தை உசுப்பிவிட்டது என்கிறார். அவர் எழுதியதை ஆங்கிலத்திலேயே தருகிறேன்:

Instantly, on receipt of this paper, sedition! Rebellion! was the cry; and the willing mandate was speedily prepared, which consigned the unhappy Mahradu and every male branch of his family to dishonourable grave.

ஆசிரியரின் கூற்றுப்படி எல்லா ஆண்களும் கல்லறைக்குச் சென்றனர் - சிறுவர்களும்கூட.

கோர்லே கூறுகிறார்:

“பாளையக்காரர்மீது போர் அறிவிக்கப்பட்டது. அவரது பாளையத்திற்குத் தீவைத்து அழிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவரையும் அவரது குடும்பத்தில் இருந்த ஆண் மக்கள் அனைவரையும் கைதுசெய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது. பிடிபட்ட அனைவரையும் ராணுவக் குழு ஒன்றின் மேற் பார்வையில் விசாரணை ஏதும் இன்றித் தூக்கிலிட ஆணை தரப்பட்டது, நான் கூறுவது வாசகர்களுக்குச் சந்தேகத்தைத் தரலாம். ஆனால் இந்த ஆணைகள் சிறிதுகூட மாற்றமின்றி, காலதாமதமின்றி நிறைவேற்றப்பட்டன.”

மருதுவும் அவரைச் சார்ந்தவர்களும் ஓர் அங்குலம் பரப்பளவைக்கூட விட்டுக்கொடுக்காமல் சண்டையிட்டனர்.

1801ஆம் ஆண்டு மத்தியில் விதியால் வெல்லப்பட்ட மருதுவும் அவரது குடும்பத்தினரும் சிறைபிடிக்கப்பட்டனர். இரண்டு அல்லது மூன்று பேர்களாக இராணுவ மன்றத்தின்முன் கொணரப்பட்டு உடனே தூக்கிலிடப்பட்டனர். இந்தத் தண்டனையை நிறைவேற்றிய இராணுவக் கேப்டன் தனது நிலைமையை நன்றாக உணர்ந்திருந்தார். தான் செய்வது இதுதான் என்று எழுத்து மூலம் மேலிடத்திற்குத் தெரிவித்து எழுத்து மூலம் அனுமதி பெற்ற பிறகே அவர் தனது கடமையைச் செய்தார் என்று கோர்லே சொல்கிறார்.

“எல்லோராலும் மதிக்கப்பட்ட தலைவனுடன், அவனுடைய வயதான அண்ணனும் அழைத்துவரப்பட்டார். “Dummy” என்று அழைக்கப்பட்ட அவர் பிறவியிலேயே ஊமை. (ஆசிரியர் ஊமைத்துரையைக் குறிப்பிடுகிறார். ஊமைத்துரை மருதுவின் உறவினர் அல்ல என்பது ஆசிரியருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை).* இவர்களுடன் மருதுவின் மகன்களும் பேரன்களும் - பத்துப் பன்னிரெண்டு வயதுச் சிறுவர்கள் - தூக்கிலிடப்பட்டனர்.

மருது ராணுவ மன்றத்திடம் தனக்குத் தயை ஏதும் காட்ட வேண்டாம் என்று சொன்னார். ‘நான் என் நாட்டைக் காப்பதற்காகச் சண்டையிட்டுத் தோற்கடிக்கப்பட்டேன். என்னுடைய உயிரைப் பறிக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். நான் அது பற்றி ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இந்தச் சிறுவர்கள்? இவர்கள் என்ன தவறுசெய்தனர்? இவர்கள் உங்களுக்கு எதிராக ஆயுதம் எடுத்தார்களா? இவர்களைப் பாருங்கள், இவர்களால் ஆயுதம் எடுக்க முடியுமா?’

மருதுவின் இந்தக் கோரிக்கை, மூழ்கும் மாலுமி கடலிடம் முறையிட்டதைப் போலத்தான்!”

எனக்கு “கேட்டனையாயின் வேட்டது செய்ம்மே” என்று முடியும் புறநானூற்று வரிகள் நினைவிற்குவருகின்றன. கோவூர்க்கிழார் மலையமான் மக்களை யானை இடறுவதிலிருந்து காப்பதற்காகப் பாடிய பாடலின் வரிகள். ஆங்கிலேயர்கள் கிள்ளிவளவன் அல்லர். வேட்டதையே செய்தனர்.

கோர்லே கூறுகிறார்:

நான் இந்த நிகழ்வுகளை நேரடியாகப் பார்க்கவில்லை. ஆனால் இவை ஆயிரக்கணக்கான கம்பெனி துருப்புகளின் முன்னிலையில் நிகழ்ந்தவை. அரசரின் 74, 77, 94 ரெஜிமெண்டுகளின் முன்னால் நிகழ்ந்தவை. நான் இந்த நிகழ்வுகளை உங்கள் முன் கொண்டுவந்ததற்காக எந்தப் பாராட்டையும் கேட்கவில்லை. நீதியின் துணைவராக இருக்கும் - இருந்த - இந்த நாட்டின் கைகளில் இவற்றை ஒப்படைக்க வேண்டிய கடமை எனக்குக் கொடுக்கப்பட்டது. அதை நான் நிறைவேற்றிவிட்டேன்.”

இந்தப் புத்தகத்திற்கு வரவேற்பு எப்படி இருந்தது?

கோர்லேயின் புத்தகத்திலேயே ஒரு வரி இருக்கிறது. “Everything again favours the French Emperor”. 1813ஆம் ஆண்டில் நெப்போலியன் ஐரோப்பா முழுவதையும் ஆண்டுகொண்டிருந்தார். ஆங்கில மக்களின் பார்வை முழுவதும் ஐரோப்பா மீதிருந்தது. நெப்போலியனுக்கு எதிராக அமைத்த கூட்டணி 1813ஆம் ஆண்டு ட்ரெஸ்டனில் நடந்த போரில் படுதோல்வி அடைந்தது. கூட்டணி 40,000 பேரை இழந்தது. 1805ஆம் ஆண்டிலிருந்து 1815 வரை நடந்த போர்களில் லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலைமையில் பத்து, பதினைந்து சிவகங்கைச் சீமைச் சிறுவர்களைப் பற்றி நினைக்க ஆங்கில அரசிற்கோ வாசகர்களுக்கோ நேரம் இருந்திருக்க வாய்ப்பு இல்லை.

ஆனாலும் இந்தப் புத்தகத்திற்கு ஒரு மதிப்புரை வந்தது. லே ஹண்ட் (Leigh Hunt) என்னும் மிகப் புகழ் பெற்ற கட்டுரையாளர் இந்தப் புத்தகத்திற்குத் தன்னுடைய The Examiner என்னும் பத்திரிகையில் மதிப்புரை எழுதினார். ஹண்ட் தன்மானம் மிக்க பத்திரிகையாளர். கீட்ஸ், ஷெல்லி போன்ற கவிஞர்களின் நண்பர். மன்னர் மூன்றாம் ஜார்ஜின் மகன் (பின்னால் நான்காம் ஜார்ஜாகப் பதவி ஏற்றவர்) பற்றி எழுதிய கட்டுரை ஒன்றிற்காக (1813இல் எழுதிய கட்டுரை!) இரண்டு வருடம் சிறை சென்றவர்.

இந்த மதிப்புரையில் (மதிப்புரையின் சில முக்கியமான வரிகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருக்கின்றன) அவர் கூறுவது இது: For if the story is true -which we cannot but doubt until better evidence be adduced -it is one of the most disgraceful and diabolical proceedings that have occurred in the present age.

இது உண்மைக் கதையாக இருந்தால் - உண்மையா என்பது தக்க சான்றுகள் வரும்வரை சந்தேகத்திற்கு உரியது - இது இக்காலத்தின் நடந்த மிக அவமானகரமான, பயங்கரமான நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும்.

இந்த அழித்தொழிப்பு நிகழ்ந்ததற்கு வேறு சான்றுகள் இருக்கின்றனவா? நான் அறிந்த அளவில் இதைப் பற்றி எந்த வரலாற்று ஆசிரியரும் குறிப்பிட்டதில்லை என்று எண்ணுகிறேன். நான் அறிந்தது அதிகம் இல்லை. நான் வரலாற்று வல்லுநன் அல்ல.

இவரது கூற்று வெல்ஷ் எழுதியதற்கு மாறாக இருக்கிறது. மருது குடும்பத்தினர் அனைவரையும் அழித்தொழிக்க முடிவு எடுத்திருந்தால், துரைசாமி மட்டும் எவ்வாறு நாடு கடத்தப்பட்டார்? ஒருவேளை அவர் யார் என்பது அடையாளம் கண்டுகொள்ளப்படாததால் அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம். வெல்ஷ்கூட மேற்கூறியபடி துரைசாமியைத் தூத்துக்குடியில் மற்ற கைதிகளுக்கு மத்தியில் தான் பார்த்ததாகக் குறிப்பிடுகிறார். அவர் இளவரசர் என்பதே மற்றவர்களுக்குத் தெரியவில்லை.

கோர்லேயின் புத்தகத்தில் தகவற் பிழைகள் பல இருக்கின்றன. ஆனால் அதனால் மட்டும் அவர் கூறுவதில் உண்மை இல்லை என்று சொல்லிவிட முடியாது. மேலும் கேட்டதையே புத்தகமாக எழுதுவதாக அவரே குறிப்பிடுகிறார். அவருக்கு இந்தப் புத்தகத்தால் ஆதாயம் ஏதும் கிடைத்திருக்க வாய்ப்பு இல்லை. மாறாகத் தன்னுடைய பணத்தைச் செலவழித்துப் புத்தகத்தைப் பதிப்பித்திருக்கிறார். எனவே அவருக்குப் பொய் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. நீதி கிடைக்க வேண்டும் என்ற உந்துதலால் எழுதப்பட்ட புத்தகம் அது என்பது அதைப் படித்தாலே தெரியும்
அழித்தொழிப்பு நடந்திருக்கக்கூடும் என்பதற்கு மறைமுகச் சான்று ஒன்று இருக்கிறது.

1841ஆம் ஆண்டு பிரித்தானிய பார்லிமெண்டின் மேலவை (The House of Lords) பிரிட்டிஷ் காலனிகளில் நடைமுறையில் இருக்கும் (இருந்த) அடிமை முறையைப் பற்றி ஓர் அறிக்கை கொண்டுவந்தது. அந்த அறிக்கையில் 1806ஆம் ஆண்டு Southern Court of Appeal திருச்சிராப் பள்ளி கொடுத்த இரண்டு தீர்ப்புகளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது

சிவகங்கை ஜமீன்தார் இரண்டு விதவைகளுக்கு எதிராகத் தொடுத்த வழக்குகளை விசாரித்து முறையீட்டு மன்றம் வழங்கிய தீர்ப்புகள் அவை. சிவகங்கை ஜமீன்தார் உடையத் தேவர் என்று எண்ணுகிறேன். இவர் ஆங்கிலேயருடன் சேர்ந்துகொண்டு மருது சகோதரர்களுக்கு எதிராக இயங்கியதைப் பற்றி வெல்ஷ் தெளிவாகக் குறிப்பிடுகிறார். ஜமீன்தார் பட்டம் விசுவாசத்திற்கு அளிக்கப்பட்ட பரிசு என்பதையும் அவர் சொல்கிறார். அவரது பட்ட மளிப்பு விழாவில், படைத் தளபதி கர்னல் அக்னியூவின் கால்களைக் கட்டிக்கொண்டு கண்ணீர்விட்டு நன்றி தெரிவித்ததையும் வெல்ஷ் குறிப்பிடத் தவறவில்லை.

இந்த விதவைகள் யார்?

முதல் விதவையின் பெயர் மீனம்மாள், சிவஞானம் என்பவரின் மனைவி; மருது சேர்வைக்காரரின் மருமகள். இரண்டாம் விதவையின் பெயர் வீராயி ஆத்தாள். மருது சேர்வைக்காரரின் மனைவி. இவர்கள் இருவருக்கும் சாதகமாக ஜில்லா கோர்ட்டில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்துத் தொடங்கப்பட்ட வழக்குகள் இவை.

1801இல் மீனம்மாள் தன்னுடைய நகைகளைத் தன் வேலைக்காரர் அழகு என்பவரிடம் கொடுத்துவைத்திருந்தார். அவரிடமிருந்து நகைகளைச் சிவகங்கை ஜமீன்தார் பறித்துக்கொண்டார். வீராயி ஆத்தாளின் கதை வேறு. அவர் ஒளித்துவைத்திருந்த நகைகளை ஜமீன்தார் கண்டுபிடித்துத் தனதாக்கிக்கொண்டார். நகைகளின் மொத்த மதிப்பு சுமார் 6,600 நட்சத்திரப் பகோடாக்கள் (1 நட்சத்திரப் பகோடா = சுமார் 4 கம்பெனி ரூபாய்கள் - இன்றைய விலையில் நகைகளின் பெருமானம் பல கோடி ரூபாய்கள் இருக்கும்). ஜமீன்தார் இந்த நகைகளைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று ஜில்லா நீதிமன்றத்தில் தீர்ப்பாகியிருந்தது. இந்தத் தீர்ப்புகளைத் தள்ளுபடி செய்து, முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்புகளின் சுருக்கம் இது:

அரசு அறிக்கை 6 ஜூன் 1801இன்படி மருது சேர்வைக்காரரும் அவரது குடும்பமும் நெல்குடி (சிவகங்கை ஜமீன்தார்) வம்சத்திற்கு அடிமைகள். அடிமைக்குச் சொத்து கிடையாது. அப்படி அடிமை ஏதாவது சொத்துச் சேர்க்க நேர்ந்தால் அந்தச் சொத்து அடிமையின் சொந்தக்காரரைச் சென்றடையும். மீனம்மாளும் வீராயி ஆத்தாளும் அடிமைகளாகப் பிறக்கவில்லை. இருப்பினும் “ஸ்மிருதி சந்திரிகை”யின்படி அடிமைகளின் மனைவிகளும் அடிமைகளாகக் கருதப்படுவர். (1864க்கு முன்னால் நீதிமன்றங்களில் பண்டிதர்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். இந்து தர்ம சாத்திரங்கள் என்ன கூறுகின்றன என்பதை நீதிபதிகளுக்கு அவர்கள் தான் அறிவுறுத்தினர்.) அதனால் மீனம்மாளும் வீராயி ஆத்தாளும் அடிமைகள். அவர்களுக்கு நகைகள் போன்ற சொத்துகளை வைத்துக்கொள்ளும் உரிமை கிடையாது. அவர்களது நகைகள் சிவகங்கை ஜமீன்தாருக்குச் சொந்தம்.

இந்தத் தீர்ப்புகள் பல கோணங்களிலிருந்து ஆராயப்பட வேண்டியவை என்பதில் ஐயம் இல்லை. ஆனால் நமக்கு இவற்றிலிருந்து ஒரு சான்று கிடைக்கிறது. இரண்டு விதவைகளுக்கும் ஆண் வாரிசுகள் ஏதும் இல்லை என்பது தீர்ப்பிலிருந்து தெரிகிறது. ஆண் வாரிசுகள் இருந்திருந்தால் அவர்களைப் பற்றிப் பேசப்பட்டிருக்கும். மருதுவின் குலம் அழித்தொழிக்கப்பட்டது என்பதற்கு இந்தச் சான்று முக்கியமான ஒன்று என நான் எண்ணுகிறேன்.

தேடினால் பல சான்றுகள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
மருதுவிற்கு நீதி கேட்க இருநூறு வருடங்களுக்கு முன்னால் ஓர் ஆங்கிலேயர் முன்வந்திருக்கிறார். தமிழர்கள் அனைவரும் அவருக்கு நன்றிசெலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.

பிற்குறிப்பு: இந்தப் புத்தகங்களை எனக்குத் தேடித் தந்தது கூகிள். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பாட்லியன் நூலகமே நமது ஒரு சொடுக்கிற்குக் காத்திருக்கிறது.

மற்றொரு குறிப்பு: Gourlay என்னும் பெயர் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த பெயர். எனவே அவரை ஆங்கிலேயர் எனச் சொல்வதைவிட ஸ்காட்லாந்தியர் எனச் சொல்வதே சரியாக இருக்கும். இவர்களுக்கும் இங்கிலாந்தியருக்கும் எப்போதுமே உரசல்கள் இருந்திருக்கின்றன. Gourlay என்னும் பெயரை காவ்ர்லே என உச்சரிக்க வேண்டும் எனச் சிலர் சொல்கிறார்கள். நமக்கு கோர்லே என்பது சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். ஆசிரியர் கோர்லே பற்றி விவரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. Biographical Dictionary of Living Authors of Great Britain என்னும் புத்தகம் - 1816இல் வந்தது - இவரது பெயரைக் குறிப்பிடுகிறது. ஆனால் இந்தப் புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிடவில்லை.

* பெரிய மருதுவைப் பற்றியும் கோர்லே குறிப்பிடவில்லை,

கட்டுரையை எழுத உதவிய நூற்கள்:
1. Mahradu – An Indian Story of the Beginning of the Nineteenth Century - 1813 London
2. Military Reminiscences - James Welsh 1830 London
3. The Examiner 1813 Collection – Leigh Hunt
4. The Sessional Papers on Slavery Printed by the Order of the House of Lords - 1841, London

காப்புரிமை நன்றி: காலச்சுவடு

24.10.13

மறக்கமுடியுமா மருதுபாண்டியரை?



உலகிலேயே பூமரங் எனப்படும் வளரி என்ற ஆயுதத்தை மிக நேர்த்தியாக பயன்படுத்த தெரிந்த ஓர் தமிழர் மாமன்னர் மருது பாண்டியர். மதுரை தெப்ப குளத்தின் ஒரு கரையில் இருந்து வீசினால், மறுகரை வரையில் சென்று மீண்டும் கண்ணிமைக்கும் நேரத்தில் மருதுவின் கைகளுக்கே வந்து சேரும். இதை நம்ம ஆளுங்க சொல்லல; வெள்ளைக்காரன் ஒருவரின் நூல் குறிப்பில் இது உள்ளது. "வீரம் என்ற குணம் தான் எதிரியும் மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும்" என்று முத்துராமலிங்க தேவர் மருதுபாண்டியர்களை மனதில் வைத்தே சொல்லி இருக்க கூடும்!

வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து திருச்சிராப்பள்ளியில் ஜம்புதீவு பிரகடணத்தை அமல் படுத்தி அனைத்து தரப்பட்ட தமிழ் மக்களையும் ஒன்றிணைத்த மாமன்னர் மருது பாண்டியர்களின் வாய்மையும் - வீரமும் போற்றுதலுக்குரியது.
எங்கெல்லாம் அந்த (ஐரோப்பிய) இழிபிறவிகளை பார்க்க நேரிடுகிறதோ அங்கேயே அவர்களை அழித்தொழியுங்கள். ஐரோப்பியரால் இன்னும் ரத்தம் கலப்படமாகாமல் இருக்கும் அனைவரும் ஒன்றுபட முனைவீர். - இது மருதுபாண்டியரின் பிரகடணத்தின் ஒரு பகுதி.

முத்துவடுகநாத தேவரோடு காட்டில் வேட்டையாடி கொண்டிருந்த போது, அவர் மீது பாய்ந்த புலியை தனியாளாக நின்று கூரிய நகங்களும், பற்களும் கொண்ட புலியோடு யுத்தமிட்டு அதை அடக்கி வெற்றிகண்டவர் மருது!

எல்லைப்புற ஊர்களில் எல்லாம் காடுகளை உருவாக்கி காட்டரண்கள் அமைத்து, அங்கெல்லாம் கோட்டைகளை வலுவாக உருவாக்கிய மருது பாண்டியர்களின் இந்த போர்முறை இந்த உலகுக்கே புதிதானது. திடீர் தாக்குதல் - தாக்கிவிட்டு மறைதல் - மறைவிடங்கள் அமைத்து மறைந்து தாக்குதல் - ஆயுதங்களை மறைத்துவைத்து பிறகு பயன்படுத்துதல் - தங்கள் இடத்தை எதிரி கைப்பற்றும் சூழ்நிலையில் அந்த இடத்தை அழித்தல் போன்ற கொரில்லா போர் யுக்தியை பயன்படுத்தி பெரும்படைகளை வென்று மண்ணை காத்த மாவீரர்களான மாமன்னர் மருதுபாண்டியர்களின் வீரம் இன்றைக்கல்ல என்றைக்குமே போற்றத்தக்கது.

கி.பி. 1780 முதல் 1801 வரை சுமார் 20 ஆண்டுகள் ஆட்சி புரிந்த காலகட்டத்தில் சாதி, சமயச் சார்பற்ற, மத நல்லிணக்கத்தைக் கடைப்பிடித்த சிவகங்கை சீமை மருது பாண்டியர்களின் ஆட்சி தமிழ் வரலாற்றின் மைல்கல்!

தங்களது ஆட்சிக் காலத்தில் இஸ்லாமியர்களுக்காக நரிக்குடியில் மசூதியும், திருப்பத்தூரில் கான்பா பள்ளிவாசலையும், கிறிஸ்தவர்களுக்கு சருகணியில் தேவாலயமும், இந்துகளுக்காக குன்றக்குடி, காளையார்கோவில், திருமோகூர், மானாமதுரை, மதுரை ஆகிய இடங்களில் பெரிய சிவாலயங்களையும், முருகன் கோயிலையும் எழுப்பி திருப்பணி செய்து வழிபாடு நடத்தி இருபது வருடங்கள் ஆட்சி புரிந்த மாமன்னர் மருது பாண்டியர்களின் புகழை யாராலும் அவ்வளவு எளிதாக மறைத்துவிட முடியாது.

மாமன்னர் மருது பாண்டியர்களின் உயர்ந்த நாட்டுப்பற்றையும், வீரத்தையும், விவேகத்தையும், சுயமரியாதையையும் கி.பி. 85ம் ஆண்டில் வாழ்ந்த பிரிட்டானியத் தளபதியின் உரையோடு ஒப்பிட்டுப் பாராட்டுகிறார் ஆங்கில நாட்டைச் சார்ந்த நூலாசிரியர் கோர்லே.

தாங்கள் கட்டிய காளையார்கோவில் தகர்ந்து விட கூடாதென்பதாலும், ஆட்சியை பிடிப்பதறக்காக ஒருசில துரோகிகளின் சூழ்ச்சியாலும் தூக்கிலிடப்பட்டனர் மருதுபாண்டியர். ஆனால், திருப்பத்தூரில் மாமன்னர்கள் இருவர் மட்டும் தூக்கிலிடப்படவில்லை; தங்களது மன்னர்களுக்காக அவர்களோடு துணை நின்ற சாதி / மத வேறுபாடின்றி ஆயிரகணக்கான மக்களும் தூக்கிலிடப்பட்டது உலக வரலாற்றிலேயே இதுதான் முதலும் கடைசியும்! தன் மன்னனுக்காக தங்களது உயிரை தர நினைத்த மக்களும், அப்படிப்பட்ட மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் தங்களை இழந்த மருது பாண்டியர்களுக்கு நிகர் வேறு யாராக இருக்க முடியும்?

ஆங்கில ஏகாதிபத்தியத்தாலும் - ஆன்மீக பக்தியாலும் அக்டோபர் 24 - திருப்பத்தூர் மண்ணில் மாமன்னர் மருது பாண்டியர்களை தூக்கிலிட்ட 212 வது நினைவேந்தல் தினம் இன்று!

அடங்காத பற்றோடு அடியேனின் வீரவணக்கம்!

- இரா.ச.இமலாதித்தன்

23.10.13

விடுதலை போராட்ட வரலாற்றில் முத்திரை பதித்த வீரசங்கம்:


ஆங்கிலேயரின் ஆட்சிக்கு எதிராக வடக்கே சமஸ்தானங்கள் போர்க்கோலம் பூணும் முன்பே தமிழ் மண்ணில் ஒரு வீரியமான மக்கள் விடுதலை இயக்கம் நடைபெற்றது. மருது சகோதரர்களால் வடிவமைக்கப்பட்ட மக்கள் இயக்கத்தினர் தங்களை வீர சங்கத்தினர் என அழைத்துக் கொண்டனர். 1772ல் சிவகங்கை ராஜா முத்துவடுகநாதர் கொல்லப்பட்டதற்கு பிறகு ஊராளிகள் (ஊர் தலைவர்கள்) மூலம் சங்கத்துக்கு ஆள் சேர்த்தனர். சங்கத்தை ஒருங்கிணைக்க திண்டுக்கல் முதல் நாகர்கோவில் வரை பெரிய மருது பயணம் மேற்கொண்டார்.

கேரளாவில் உள்ள மடப்புரிக்கு சென்ற மருது, அங்கிருந்து திண்டுக்கல்லுக்கு நூற்றுக்கணக்கான மலபார் வீரர்களுடன் எழுச்சிமிக்க நடைபயணம் மேற்கொண்டார். தோளுயர்த்தி, நெஞ்சை நிமிர்த்திவந்த அந்த படைக்கு உணவு வழங்குவதை தடுக்க ஆங்கிலேயர் சாலைகளை மூடினர். ஆனால், கடல் வழியாக தொண்டி துறைமுகத்துக்கு உணவு வரவழைக்கப்பட்டது. சங்கத்தின் ஆயுத தேவைக்காக மேலூரிலும் தாரமங்கலத்திலும் இரு துப்பாக்கி தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டன. இவ்வாறு தீவிரமாகவும் ரகசியமாகவும் வீரசங்கம் செயல்பட்டது.

திப்பு மீது போர் தொடுக்க 5.3.1799ல் ஆங்கிலேய படைகள் மைசூருக்கு சென்ற நிலையில் தமிழக ராணுவ கிடங்குகளில் இருந்து துப்பாக்கி, வெடிமருந்து, உணவுப்பொருட்களை வீர சங்கத்தினர் கைப்பற்றினர். முத்துக்கருப்பன், சிங்கம் செட்டி போன்றோர் அபிராமம், கமுதி, முதுகுளத்தூர், கொக்குளம், சிக்கல் ராணுவ கிடங்குகளை தாக்கினர். மேஜர் பானர்மேன் தலைமையிலான படை பாலமநேரியில் சிங்கம்செட்டியை பிடித்து தூக்கிலிட்டது. அவரது தலையை ஈட்டியில் குத்தி முச்சந்தியில் நட்டனர்.

நெல்லை வீர சங்கத்துக்கு தலைமை வகித்த வீரபாண்டிய கட்டப்பொம்மன் 1799 ஜூனில் சாப்டூர், ஏழாயிரம்பண்ணை, காடல்குடி, குளத்தூர் பகுதி தலைவர்களை சங்கத்தில் சேர வேண்டுகோள் விடுத்தார். செவத்தையா, வீரபாண்டிய நாயக்கர், வீரபத்திரபிள்ளையை இளவரசநல்லூருக்கு அனுப்பி அங்குள்ள கள்ளர்கள் ஆதரவை பெற்றார். 1.6.1799ல் பாலமநேரியில் நடந்த சண்டையில் மருது சகோதரர்களுடன் வீர சங்கத்தினரும் சமராடினர்.

இதற்கிடையே புரட்சிப்படையை சேர்ந்த 42 பேருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. இதில் 8 பேர் தாராபுரத்திலும், 7 பேர் சதியமங்கலத்திலும், 6 பேர் கோயமுத்தூரிலும் மக்கள் நடுவே தூக்கில் இடப்பட்டனர். 16.10.1799ல் கட்டபொம்மன் தூக்கில் இடப்பட்ட பின் சின்ன மருது நெல்லை பகுதி வீரசங்கத்துக்கு தலைமை பொறுப்பேற்றார். கட்டப்பொம்மன் தம்பி குமாரசாமி செவத்தையா உட்பட 17 வீரசங்கத்தினர் நெல்லையில் சிறைப்படுத்தப்பட்ட போது 200 வீரர்கள் முருக பக்தர் வேடம் புனைந்தும், வாழை இலை, விறகு விற்பவர்போல் நடித்தும் அவர்களை சிறைமீட்டனர்.

சின்ன மருது 1801ல் தூக்கிலிடப்பட்ட பின்னரும் வீர சங்கத்தின் தொண்டு தொடர்ந்தது. ஊர்தோறும் கத்தி சண்டை, கம்பு சண்டை, மல் யுத்தம் என பயிற்சிகள் ‘களம்‘ கட்டின. மதுரை, திண்டுக்கல், குமரி பகுதிகளை விட நெல்லை பகுதியில் ஏராளமானோர் சங்கத்தில் இணைந்தனர். குறிப்பாக நாங்குநேரி மறுகால் குறிச்சியில் ஊரே ஒட்டுமொத்தமாக சங்கத்தில் இணைந்தது. எங்கும் எழுச்சியும் கிளர்ச்சியும் நிகழ்ந்தவண்ணமிருந்தன.

இதையடுத்து அப்போதைய கவர்னர் எட்வர்ட் கிளைவ் ‘மல் யுத்தம், கொரில்லா பயிற்சிகளை நடத்தினால் கடும் தண்டனை விதிக்கப்படும்‘ என அரசாணை கொண்டுவந்தார். கிழக்கிந்தி கம்பெனி படையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி நூற்றுக்கணக்கானோரை கைது செய்தனர். பலரும் தூக்கிலிடப்பட்டனர். ஆனாலும் விடுதலை உணர்வு அடங்கவில்லை.

இறுதியாக வீர சங்கத்தின் உறுப்பினர்கள், குடும்பத்தினர் 74 பேருக்கு தீவாந்தர தண்டனை விதித்தனர். இவர்களில் பெரிய மருதுவின் மகனான 15 வயது துரைச்சாமியும் அடக்கம். தென் தமிழகத்தில் வீறு கொண்டெழுந்த வீரசங்கம், இந்த தீவாந்தர தண்டனைக்கு பின்பு கொஞ்சம், கொஞ்சமாக வலுவிழந்து இறுதியில் வீழ்ந்தது.

13.9.13

தமிழகம் – சாதிய கணக்கெடுப்பு – முக்குலத்தோர் – தேவர்கள்



சாதிய கணக்கெடுப்பு பற்றி அனைத்து சாதியினரும் முன்னேற்பாடுகளுடன் அவர்களுடைய சாதிய சங்கங்களுடன் ஆலோசித்து  எப்படி பதிவு செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து இருப்பார்கள். வழக்கம் போல முக்குலத்தோர் அதைப் பற்றிய அக்கறை ஏதுமின்றி அசால்டாக இருப்பார்கள்.
அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

முக்குலத்தோர் கள்ளர், மறவர், அகம்படியர் மூவரும் தேவர் என்ற பெயரிலேயே பதிவு செய்ய வேண்டும்.( இதனை படிப்பவர்கள் அனைவரும் உடனுக்குடன் எஸ்‌எம்‌எஸ் மூலமாகவோ,பேஸ்புக் மூலமாகவோ, ட்விட்டர் மூலமாகவோ செய்தியினை பரவ விடுங்கள். குறிப்பாக இளையவர்கள் தங்களது உறவினர்களுக்கும், கிராமத்து நண்பர்களிடமும் கூறி பதிவை தெளிவாகச் செய்யுங்கள்.)

கள்ளர், மறவர், அகம்படியர் – இவர்கள் முக்குலம் என்று அழைக்கப்படுகிறவர்கள். இவர்கள் warrior tribes – என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் காவல் தொழிலும், படைத்தொழிலும் அரசு தொழிலும் புரிந்தவர்கள். தமிழ் தொல் குடியினைச் சேர்ந்தவர்கள். அரசர்களாகவும், சிற்றசர்களாகவும், பாளயக்காரர்களாகவும்  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை பல்வேறு காலகட்டங்களில் ஆண்டவர்கள். நாயக்கர்கள் காலத்திலிருந்து இந்த தமிழகத்தை காக்க போராடி வருபவர்கள் அதனால் அரசியல், பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டு வருபவர்கள். நாயக்கர், பிரிட்டிஷ்காரன், திராவிடன் என்று இன்று வரை தமிழகத்தை ஆளுமை செய்யும் தமிழர் அல்லாதவர்கள்,  தமிழகத்தின் பிற சாதிகள் பெரிதும் பயப்படும் அளவிற்கு அரசியல் பலம் உள்ளவர்கள்.

முக்குலத்தோர் எந்த  காலத்திலும் அரசியல் பலம் பெறக் கூடாது என்று சிறுபான்மைகள் எப்போதும் கவலைப் படும் அளவிற்கு இருப்பவர்கள். தமிழகம் முழுவதும், கோவையிலிருந்து கன்யாகுமாரி வரை மட்டுமல்ல கடல் கடந்தும் இலங்கை ,மலேசியா, சிங்கப்பூர் தென்னாப்ரிக்கா, பர்மா, என்று ஆங்கிலேய அரசால் ,போர்க்குற்றவாளிகளாகவும் , கூலித்தொழிலார்களாகவும் நாடு கடத்தப்பட்டவர்கள். இன்று அங்கெல்லாம் வேறூன்றி வாழ்பவர்கள் தமிழகத்தில் நேதாஜியின் இந்தியா இராணுவத்திற்கு பெருமளவில் பங்கேற்ற மிகப்பெரிய சுதந்திர போராளிகள் ( இதற்காகவே இந்தியா அரசாங்கம் இவர்களுக்கு தனிச்சலுகை தரவேண்டும்.)

இவை எல்லாவற்றையும் விட அரசியல் ரீதியாக எத்தனை தடைகள் போட்டாலும் தமிழகத்தின் அரசியல் தலையெழுத்தை நிர்ணயிப்பது தேவர்களே. கவுன்சிலர்கள் முதல் மந்திரி வரை ,நீதிக்கட்சி முதல் திராவிடக் கட்சிகள்  வரை ஆட்சியை  தீர்மானிப்பது தேவர்கள்தான். 40 வருடத்திற்கு மேலாக reserve தொகுதியாக இருந்தாலும் சரி, தொகுதி மேம்பாடு என்று தேவர்கள் தொகுதிகளை அரசியல் சூழ்சியாக பிரித்தாலும் சரி, அனைத்து இடங்களிலும் குறைந்த பட்சம் 100 முதல் 1000 ஒட்டுகள் வரை வெற்றி வாய்ப்பை தீர்மானிப்பது தேவர்கள்தான். அம்மா முதல் அழகிரி வரை, இவர்களைப் பாதுகாப்பதும் தேவர்கள்தான்.

கள்ளர் மறவர் ,அகம்படியர் முக்குலமும் தேவர்கள் என்று ஒரு தலைப்பின் கீழ் வர வேண்டுமென்று முதன் முதலாக 10 வருடங்களுக்கு முன்பு முயன்ற போது, தஞ்சை கள்ளர்களும், சிவகங்கை அகம்படியர்களும் பலத்த எதிர்ப்பை தெரிவித்தனர். இன்றும் சில விஷ கிருமிகள் அவ்வாறே பிரசாரமும், அறிக்கையும் செய்வதாக அறிந்தேன். பிற சாதிகளிடம் காசு வாங்கிக் கொண்டு, நாங்களும் சாதிப்பற்றாளர்கள் என்று கூறிக் கொண்டு சம்மன் இல்லாமல் ஆஜராகும் இவர்களைப் பற்றி கவலைப் படாமல் முக்குலத்தோர் அனைவரும் தேவர்கள் என்றே போட வேண்டும். ( பிற சாதிகள் இப்படிப்பட்ட unwanted elements – களை பெரிதாக பாராட்டுவதும் இல்லை, கண்டுக்கொள்வதும் இல்லை , நாம் தான் இவர்களையெல்லாம் மேடைப் போட்டு சால்வை போர்துகிறோம்.)

கள்ளர், மறவர், அகம்படியர் இவர்கள் மூவரும் சத்திரியர்கள், இடங்கை வலங்கை என்ற சூத்ர வகுப்பில் இவர்கள் வருவதில்லை.. வணிகர்களும் இல்லை.அரசு தொழிலே இவர்களது தொழில். ராணுவம், வரிவசூல், காவல், (காவல் பலதரப்பட்டது குடிகாவல், ஊர்காவல் ,திசைகாவல் ,etc ).சேர்வை  என்பது வரி, சேர்வை என்பது தொழில் சம்பத்தப்பட்ட பட்டம். தாசில்தார், கமிஷ்னர் போன்று., அவ்வாறே கள்ளர்கள் பல பட்டங்கள் உண்டு. அம்பலம் அவற்றில் ஒன்று. அவை அந்தந்த பகுதியில் அவரவர்களது அரசு தொழில் சார்ந்தும், போரில் பெரும் பட்டங்களைச் சார்ந்தும், அவர்களது designation பொருத்தும்  பட்டங்கள் இருக்கும். அவ்வாறே மறவர்கள் தலைவர்கள் என்றும் தேவர்கள் என்றும் பட்டம் போட்டுக்கொள்வார்கள்.

 முக்குலத்தோருக்கும் அவரவர் பிரிவுகளில் உட்பிரிவுகளும் உண்டு.அது ஒரு கிராமத்தின் தலைவன் அல்லது தலைமை அவரை சுற்றி இருக்கும் சுற்றத்தைச் சேர்த்து  இணைத்து ஒரு organized institution ஆக தங்களது தொழிலை விரிவாக்கி  esatablish செய்து வருவது. அதுவே, கிளை என்றும், கோயில் என்றும், குலதெய்வம், என்றும் உள்ளது. இன்று உள்ளது போல mba , police , defence  அகாடெமி எல்லாம் கிடையாது. வழி வழியாக பயிற்சி தருவதுதான். சடங்கு முறைகளும் அந்தந்த  பகுதிக்கு ஏற்ப இருக்கும். ஆனால் இவர்கள் அனைவரும் இந்திரகுலம் என்னும் போர்க்கடவுள் வழி வந்தவர்கள் என்பதால் இவர்களை தேவர்கள் என்று அழைப்பார்கள். (தேவர்களை சமுதாய ரீதியாக மட்டம்தட்டவே, பார்பனும், நாயக்கனும், வெள்ளாளனும் செய்த ரீல்கள்தான் இந்திரன் அகலிகை கதை. சங்க இலக்கியங்களில் இந்திரன் போர்கடவுளாகவும் ,முருகன் தேவர்களது சேனாபதியாகவும் போற்றி, இந்திர விழாவாகவும் கொண்டாடப் பட்டு வந்துள்ளது, இன்றைய சித்திரை திருவிழாவும் அதன் வெளிப்பாடுதான். நாம் எந்த அளவிற்கு வரலாறு தெரியர்தவர்களாக இருக்கிறோம் எந்த அளவிற்கு தமிழகத்தின் வரலாறும் மறைத்தும் திரித்தும் இருக்கிறது!!)

கோவை, திருவண்ணாமலை, திருக்கோவிலூர் மைசூர் இவ்விடங்களில் சங்க காலம் தொட்டு அகம்படியர்கள் அதிகம் இருந்து வருகிறார்கள். ராஜா ராஜா சோழன், ராஜேந்திர சோழன் வெற்றி பெற்ற நாடுகளில் கொடும்பாளூர் வேளிர்கள்,அகம்படியர் படைகளை நிறுத்தி வந்ததாக ஈழம், கடாரம் சரித்திரம் கூறுகிது .சோழ சாம்ராஜியம் விரிவடைந்த காவேரி நாடுகளில்  அகம்படியர்கள் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். கொடும்பாளூர் வேளிர்கள், முத்தரையர்கள், போன்ற தொண்டை மண்டல தொல் குடிகள் என்ன்வானார்கள் என்று தெரியவில்லை. சேந்த மங்களம் போரைப்பற்றிய ஒரு விரிவான ஆராய்சி பல சரித்திர உண்மைகளை துரோகங்களைக் கூறலாம்.

இன்றைக்கு தமிழகத்தில் எஞ்சி நிற்கும் சத்திரிய தொல் குடி முக்குலத்தோராகிய கள்ளர், மறவர் அகம்படியரே. யார் வேண்டுமானாலும் தங்களி ஆண்ட பரம்பரை என்று கூறிக் கொள்ளட்டும், இந்த உளறல் களையெல்லாம் பெரிதாக நினைக்காமல் அரசியல் ரீதியாகவும், சமுதாய ரீதியாகவும் நமது இளைய தலைமுறைகளுக்கு நல்வாழ்வு அமைய தேவர்கள் என்றே இனி எக்காலமும் முக்குலத்தோர் பதிவு செய்யுங்கள்.
. இப்பொழுது தேவர்கள் என்று பதிவு செய்ய உங்களில் எவருக்கேனும் தடை உள்ளதோ?

வாழ்க தமிழர், வளர்க தமிழினம்

நன்றி: மஞ்சு கணேஷ்

18.7.13

ராஜராஜ சோழனின் தாயார் அகமுடையார்


கல்வெட்டுகளில் அகமுடையாரை பற்றிய கல்வெட்டு சின்னமனூர் கல்வெட்டில், “பிள்ளை குலசேகர மாவலி வானாதிராய அகம்படிய முதலி சிங்க தேவன் ” என்று குலசேகர மாவலி வானதிராயரை பற்றி
குறிப்பிடுகிறது.

வானர் என்ற மன்னர் குலத்தோர் புகழ் பெற்ற சேர மரபினர் ஆவார். மூவேந்தருடனும் மணஉறவு பூண்டவர். கரிகால சோழனின் மனைவியும் வானர் குல பெண்மணியான, ராஜ ராஜ சோழனின் அக்காவின் கணவருமான வந்தியதேவன் இந்த வானதிராயர் குலத்தாவர். அதுபோலவே, ராஜராஜ சோழனின் தாயாரான, வானவன்மாதேவியும் இக்குலத்தையே சார்ந்தவர். மேலும், பொன்னியின் செல்வனில் குறிப்பிடப்படும் பழுவேட்டரையர்களும் அகமுடையார் என்பது குறிப்பிடதக்கது.

வானவன், சேரன், மலையன் என்றும் குடிப்பெயருடைய மலையமான்களின் நேரடி வம்சத்தாராகவும் பாரி மற்றும் மூவேந்தரின் பெண்ணடி வாரிசாகவும் உள்ள குடும்பத்தினர்கள். காளியை குலதெய்வமாக கொண்ட போர் மறவர் குலமான இவர்கள் சோழர்களுக்கு அநேக வெற்றிகளைப் பெற்றுத்தந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன.

சிவகங்கை சீமையில் உள்ள மானாமதுரை (வானாதிராய மதுரை), இராசகம்பீரம் (வானராய கம்பீர கோட்டை) முதலிய இடத்தில் வானாதிராய இனமாக அகமுடையரே வாழ்கிறனர். சின்னமனூர் அகமுடைய பனந்தாரன் (வானாதிராயன்), பந்தளம் (அகமுடைய பனந்தார ராம வர்மன்) சுவாமி ஐயப்பன் வழி வந்த மன்னர் போன்றவர்கள் பனந்தார வம்சத்து அகமுடையரே. இருவருக்கும் இன்னும் திருமண உறவு உண்டு.

மாமன்னர் கட்டிய ராஜகோபுரம்

மாமன்னர் ஸ்ரீ.மருது பாண்டியர் தெய்வங்களால் கட்டப்பட்ட சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் ஆலயத்தின் ராஜகோபுரம் 1959 ஆம் ஆண்டு புணரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்ட விவரம்.

16.5.13

இரும்புத்தலை

இரும்பிடர்த் தலையார் என்ற கரிகாலனை வழி நடத்திய மன்னனைப் பற்றி நான் புறநானூற்றில் படித்திருக்கிறேன்.அப்படிப்பட்ட தோற்றத்தோடு, சுருண்ட கேசங்கள் பின்னால் இருக்க, கண்களில் கம்பீரத்தோடு அவர் என் வீட்டில் வந்தமர்ந்த காட்சி இன்றும் என் நினைவில் உள்ளது."
காங்கிரஸ் என்ற கட்சி சுயநலத்தின் கூடாரமாகிவிட்டது.நாட்டிற்கு கேடு செய்கிறது.அதை இந்தப் பகுதியில் எதிர்க்க வேண்டும் என்பதற்காக உங்களை சந்தித்து ஒரு வார்த்தை சொல்லிவிட்டு போகலாம் என்று வந்தேன்" என்று என் தந்தையிடம் கூறினார் தேவர் ஐயா.
அவர் அன்று சொன்னதை இன்றுவரை நான் கடைப்பிடித்து வருகிறேன்.
பசும்பொன் தேவர் குறித்து தனது சிறுவயது நினைவுகளை பகிர்ந்து கொண்டார் வைகோ.

இரும்பிடர்த் தலையார்: அகமுடையார்களில் இரும்புத்தலை அகமுடையார் என்ற பிரிவும் உள்ளது

22.1.13

அகமுடையார்



அகம் + உடையார் = அகமுடையார்

அகமுடையார் என்றால் அகத்திற்கு தேவையான அறிவும் - வீரமும் இயல்பாக உடையவர் என்று பொருள். மேலும் அகம்படியர் என்பதற்கு எதிரிகளை படிய வைக்கும் திறனை அகத்தில் கொண்டவர் என்றும் பொருளும் உண்டு. பொதுவாக அகமுடையார் என்பதன் பொருள் நில உடைமையாளர், நம்பிக்கைக்குரியவர், பரந்த சிந்தனையாளர் என்று பலவாறாக பொருளில் இலக்கியங்கள் ஊடாக அறிந்துகொள்ள முடிகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் முக்குலத்தோர் சமுதாயத்தில் ஒன்றாகவே அகமுடையார் குலம் இனம்காணப்படுகிறது. அகமுடையார் குலத்தில் சேர்வை , தேவர், பிள்ளை, முதலியார் உள்ளிட்ட இந்த நான்கு பட்டங்களே பெரும்பான்மையான காணமுடிகிறது.

அகமுடையார்களில் "சேர்வை" என்றால் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட குழுவினர் எனப்படும். பொதுவாக மன்னராட்சி காலங்களில் ஒவ்வொரு படைப்பிரிவின் தளபதிகளும் சேர்வை என்றே அழைக்கப்பட்டனர். அதுவே, காலப்போக்கில் சேர்வை என்று பட்டமாக மருவி இன்று அடையாளப்படுகிறது. மேலும், சேர்வை என்றால் அக்குழுவின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் என்று பொருள் படும். அரசுக்கு அமைச்சரவை சார்ந்த அனைத்துவிதமான சேவை செய்தவர்களை சேர்வைக்காரர் என்றும் அழைத்தனர். மாமன்னர் மருது பாண்டியர்களின் வழிவந்த அகமுடையார் குலத்தினர், ”ராஜகுல அகமுடையார்” என்று இன்று அடையாளப்படுகின்றனர்.

அகமுடையார்களில் "தேவர்" பட்டம் என்பது தமிழகத்தின் பெரும்பான்மை மாவட்டங்களில் வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் நாகப்பட்டினம் - திருவாரூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வாழும் அகமுடையார்களுக்கு தேவர் பட்டமே. தஞ்சை டெல்டா பகுதிகளில் தேவர் பட்டம் கொண்டுள்ள அகமுடையார் இனத்தினர், ”பதினெட்டு கோட்டை பற்று அகமுடையார்” என்ற குலபிரிவை சார்ந்த்துள்ளனர். தமிழக வரலாற்று ஆவணங்களின் வாயிலாக முற்கால சோழர்கள் அனைவருமே அகமுடையார் குலத்தை சார்ந்தவர்களாகவே இருந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. கல்லணையை கட்டிய கரிகால சோழனும் ”இரும்புத்தலை அகமுடையார்” குல பிரிவை சார்ந்தவரே. இதை தவிர்த்து, ”சித்தர் மரபு அகமுடையார்” மற்றும் ”தஞ்சை ராஜ வம்சத்து அகமுடையார்” என்ற பிரிவும் இன்றளவும் வேதாரண்யம் - முத்துப்பேட்டை போன்ற தஞ்சை கடலோர பகுதிகளில் வாழும் அகமுடையார் இன மக்களுக்கு உண்டு.

அகமுடையார்களில் பொதுவாக "பிள்ளை" பட்டம் என்பது நிலக்கிழார்களையே குறிக்கிறது. ”கள்ளர் மறவர் கணத்ததோர் அகமுடையார் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆகினாரே” என்ற பாடல் வாயிலாக, போர்த்தொழிற்கு அடுத்த கட்ட நகர்வான வேளாண்மை தொழிலில் ஈடுபட ஆரம்பித்து, அதிலேயே நில நீட்சிகளோடு வாழ்ந்தவர்களின் வழித்தோன்றல்கள் ”பிள்ளை” என்ற பட்டத்தோடு அறியப்பட்டனர்.

அகமுடையார்களில் "முதலியார்" என்ற பட்டம் உடையவர்கள் வட தமிழகத்தில் பெரும்பான்மையாக செருமி வாழ்கின்றனர். முதலியார் என்பதும் போர்ப்படை தளபதிகளையே குறிக்கின்றது. முதலி என்பது ஒரு படையை தலைமைத்தாங்குகின்ற முதன்மையான தளபதி என்று  பொருள் தருகிறது. செங்குந்தர் சாதியினருக்கும் முதலியார் பட்டமிருப்பதால் ஒருசிலருக்கு குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.  வடதமிழகத்தில் வாழும் அகமுடையார்கள் அனைவருக்கும் பட்டம் என்பது முதலியார் என்று இருந்த போதிலும், அவர்கள் தங்களை அகமுடையார் களாகவே அடையாளப்படுத்தி கொள்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.


அகமுடையார் குல பிரிவுகள்

ராஜகுலம்
கோட்டைப்பற்று (பதினெட்டு கோட்டைப்பற்று)
இரும்புத்தலை
ஐவளிநாடு
நாட்டுமங்களம்
ராஜபோஜ
ராஜவாசல்
கலியன்
சனி
மலைநாடு
துளுவன் ( துளுவேளாளர் )

அகமுடையார் குல பட்டங்கள்

அகமுடைய தேவர்
அகமுடைய சேர்வை
அகமுடைய பிள்ளை
அகமுடைய தேசிகர்
அகமுடைய முதலியார்
அகமுடைய வேளாளர் (துளுவ வேளாளர்)
அகமுடைய உடையார்
அகமுடைய அதிகாரி
அகமுடைய மணியக்காரர்
அகமுடைய பல்லவராயர்



தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கோயம்புத்தூர்,திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், திருநெல்வேலி, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் தேவர் என்ற பட்ட பெயருடனும், இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் சேர்வை என்ற பட்டத்தோடும், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம்,கடலூர், சென்னை, பெரம்பலூர், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் முதலியார், துளுவ வேளாளர், உடையார் என்ற பட்டங்களோடும் அகமுடையார் இனத்தினர் அறியபடுகின்றனர்.

மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திர,கேரளா உள்ளிட்ட தென்னிந்தியா முழுவதும் பலவேறு பட்டப்பெயர்களுடன் வசித்து வருகின்றனர். இதைதவிர்த்து, இலங்கை, மலேசியா, பர்மா, சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பெரும்பாலான அகமுடையார் குலத்தினர் பல தலைமுறைகளாக பூர்வீகமாக வசித்து வருகின்றனர். தமிழகத்தின் அனைத்து பகுதியிகளிலும் அகமுடையார் இனத்தினர் பரந்து விரிந்து வாழ்ந்து வருகின்றனர்.தென் தமிழகத்தில் அகமுடையார்களை முக்குலத்தோர் பிரிவுகளில் ஒன்றாகவும் கருதி வருகின்றனர்.

வட தமிழகத்தை பொருத்தவரையிலும் அகமுடையார் இனத்தினர் தனித்தே அடையாளப்பட்டு வருகின்றனர்.பெரும்பாலும் அகமுடையார் இனத்தினரின் பட்டங்களையும், பட்ட பெயர்களையும் வைத்து பலவாறு தமிழகம் முழுவதும் சிதறிக் கிடக்கின்றனர்.தென் தமிழகத்தில் அகமுடையார்களை சேர்வை என்றும் மேலும் முதலியார்,பிள்ளை என்ற பட்டங்களுடன் வட தமிழகத்திலும், தேவர்,பிள்ளை,அதிகாரி,நாயக்கர், தேசிகர் போன்ற பல பட்ட பெயர்களுடன் மத்திய தமிழகத்திலும் அறியபடுகின்றனர்.

17.1.13

மாமன்னர் மருதுபாண்டியர்களை வரலாற்று ஆசிரியர்கள் புகழ்ந்த பெயர்கள்:


அத்தன் மருது
அம்புவியால் மன்னன் மருது துரை
சுத்தவீரன் பெரியமருது
சூரன் மருதேந்திரன்
தாக்குடையமால் துறை
தாட்டீகமான மருது
திருமருது தீரன்
தீரன் வௌ்ளைமருதேந்திரன்
துரைமால் மருது
மருது மன்னன்
மருதேந்திர காவலன்
மருதேந்திர துரை
வௌ்ளைமருதேந்திர வீரகேகசரி
ஆண்டவன் மருதுபாண்டியன்
தீரன் சின்னமருது
வல்லமை சேர் சின்னமருது
வாடா மதிமுகத்தான் மன்னன்
சின்னமருது
அதி வீரர் இருவர்
உத்தமன் மருதிருவர்
காளை மருதிருவர்
தாட்டீகனான மருதிருவர்
தீரன் மருதிருவர்
மன்னரிவர்
மன்னர் மருதிருவர்
மன்னன் வௌ்ளை மருதிருவர்
வாதுபுரி மருதிருவர்

10.1.13

டெல்டா மாவீரர் மலேயா கணபதி!

250px-SA_Ganapathyஎஸ். ஏ. கணபதி அல்லது மலாயா கணபதி (பிறப்பு:1912 – இறப்பு:மே 4, 1949) என்பவர் மலாயாவைச் சேர்ந்த தொழிற்சங்க போராட்டவாதி. சமூக நீதி செயல்பாட்டாளர். தொழிலாளர் உரிமைகளுக்காகப் போராடியவர். இந்திய தேசிய இராணுவத்தில் சேவை செய்தவர். அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவராக இருந்தவர்.
அன்றைய மலாயாவின் பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராட்டம் செய்து தூக்கிலிடப்பட்டவர். மலாயா கண்டெடுத்த மாபெரும் புரட்சித் தலைவர்களில் ஒருவர்.
எஸ். ஏ. கணபதி இளம் வயதிலேயே மலாயா தொழிற் சங்க இயக்கத்தின் தேசிய தலைவரானார். அவரின் சாதனை இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் கவனத்தையே ஈர்த்தது. எஸ். ஏ. கணபதியின் உரிமைப் போராட்டங்கள் பிரித்தானியர்களின் நலன்களுக்கு பெரும் இடையூறுகளாக அமைந்தன. அவரை அனைத்துலகப் பார்வையில் இருந்து அகற்றுவதற்கு பிரித்தானியர்கள் முடிவு செய்தனர்.
சிலாங்கூர் மாநிலத்தில் ரவாங், பத்து ஆராங் என இரு நகரங்கள் உள்ளன. இந்த நகரங்களுக்கு மத்தியில் வாட்டர்பால் தோட்டம் (Waterfall Estate) இருக்கிறது. அங்கே கணபதி கைது செய்யப்பட்டார். கைத்துப்பாக்கியும் துப்பாக்கி குண்டுகளும் வைத்திருந்தார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.உடனடியாக, அவர் அங்கிருந்து கோலாலம்பூருக்கு கொண்டு வரப்பட்டார். அவரைக் காப்பாற்ற ஜவஹர்லால் நேரு புதுடில்லியில் இருந்து பல முயற்சிகளை மேற்கொண்டார்.
நேருவின் நண்பர் வி. கே. கே. கிருஷ்ண மேனன் லண்டனில் முயற்சிகளை மேற்கொண்டார். இருப்பினும் இந்தியாவின் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. விசாரணை செய்யப்பட்டு இரண்டே மாதங்களில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு எஸ். ஏ. கணபதி கோலாலம்பூர், புடு சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார். எஸ். ஏ. கணபதி தூக்கில் இடப்பட்டதை எதிர்த்து இந்திய அரசாங்கம் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது.
எஸ். ஏ. கணபதி தூக்கிலடப்பட்ட செய்தியை பிரித்தானிய அரசாங்கத்தின் காலனி ஆட்சிகளுக்கான அமைச்சர் வில்லியம்ஸ் டேவிட் ரீஸ், நாடாளுமன்ற மக்களவையில் அறிவித்தார். எஸ். ஏ. கணபதியின் வழக்கில் நீதி மதிப்பீட்டாளர்களாக இருந்த ஓர் ஐரோப்பியரும் ஓர் இந்தியரும் ஒரு சேர தூக்குத் தண்டனைக்கு முடிவு எடுத்தனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
எஸ். ஏ. கணபதி தமிழ்நாடு, தஞ்சாவூர், தம்பிக்கோட்டை கிராமத்தில் 1912ஆம் ஆண்டு பிறந்தார். தந்தையாரின் பெயர் ஆறுமுக தேவர். தாயாரின் பெயர் வைரம்மாள். எஸ். ஏ. கணபதிக்கு பத்து வயதாக இருக்கும் போது சிங்கப்பூருக்கு வந்தார். தம் தொடக்கக் கல்வியை சிங்கப்பூரில் பெற்றார். இளம் வயதிலேயே அரசியலிலும் தீவிர ஈடுபாடு காட்டினார்.
ஜப்பானியர் காலத்தின் போதுதான் இந்திய தேசிய விடுதலைக்காக நேத்தாஜி சுபாஷ் சந்திரபோஸ் மலாயாவுக்கு வந்து இந்திய தேசிய ராணுவத்தை அமைத்தார்.[6] அப்போது சிங்கப்பூரில் இயங்கி வந்த ஆசாத் ஹிந்த் சர்க்கார் தற்காலிக சுதந்திர அரசாங்கத்தை இந்திய தேசிய ராணுவத்தினர் (Indian National Army) நடத்தி வந்தனர்.] அதில் எஸ். ஏ. கணபதி ஓர் அதிகாரியாகவும் பயிற்றுநராகவும் சேவை செய்தார். மேலும் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் Malaya Communist Party (MCP)கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த “முன்னணி” இதழின் ஆசிரியராகவும் பணி புரிந்தார். இந்தக் கட்டத்தில் அகில மலாயா பொதுத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அகில மலாயா தொழிலாளர் சம்மேளனம்
இந்தச் சங்கம் பின்னர் அகில மலாயா தொழிலாளர் சம்மேளனம் என பெயர் மாற்றம் கண்டது. ஜவர்ஹலால் நேருவின் தலைமையில் புதுடில்லியில் நடைபெற்ற ஆசிய நாடுகளுக்கு இடையிலான நட்புறவு மாநாட்டில் மலாயாப் பேராளர்களில் ஒருவராக எஸ். ஏ. கணபதி கலந்து கொண்டார். 1948 ஆம் ஆண்டு மலாயாவின் அனைத்து இனங்களின் விடுதலைப் படையில் இணைந்தார்.
எஸ்.ஏ. கணபதியினால் வழிநடத்தப்பட்ட அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம் மலாயாவின் உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமைகளுக்காகவும், மலாயாவின் அரசியல் விடுதலைக்காகவும் பெரும் போராட்டங்களை நடத்தியது. எஸ். ஏ. கணபதி ஊக்கமுடையவராகவும், செயல்பாட்டுத் திறன் மிக்கவராகவும் இருந்தார். இந்தப் பண்புகளே அவரை மலாயாவின் வலிமை மிக்க அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைமைத்துவத்திற்கு கொண்டு சென்றது.
மலாயா தொழிற்சங்கங்களின் உருவாக்கப் பின்புலம்
220px-India_Protest
1900களில் மலாயா ரப்பர் தோட்டங்களில் வேலை செய்த தொழிலாளர்களில் 92 விழுக்காட்டினர் தென்னிந்தியாவில் இருந்து வந்தவர்கள். 1928 ஆம் ஆண்டு முதல் 1937 வரை ரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 50 காசு தரப்பட்டது. அந்தக் காலக்கட்டத்தில் அந்தச் சம்பளமும் குறைக்கப்பட்டு 40 காசாகக் கொடுக்கப் பட்டது. அதனால் பிரச்னைகள் ஏற்பட்டன. அதற்கு தீர்வு காண 1939 ஜனவரி முதல் தேதியில் இருந்து பழைய 50 காசு சம்பளத்தைக் கொடுக்க தோட்ட நிர்வாகங்கள் ஒப்புக் கொண்டன.
சீனத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 60 காசில் இருந்து 70 காசு வரை கொடுக்க தோட்ட நிர்வாகங்கள் முன் வந்தன. சீனத் தொழிலாளர்களுக்கும் இந்தியத் தொழிலாளர்களுக்கும் இடையிலேயே பாரபட்சம் காட்டப்பட்டது. ஒரே அளவுள்ள வேலை. ஆனால், ஏற்றத் தாழ்வான சம்பள முறை. இதைக் கண்டித்து சிலாங்கூர், கிள்ளானில் வாழ்ந்த இந்தியர்கள் கிள்ளான் வட்டார இந்தியத் தொழிற்சங்கத்தை உருவாக்கினார்கள். இது 1940இல் நடந்தது.
10 காசு சம்பள உயர்வு போராட்டம்
அந்த முதல் இந்தியத் தொழிற்சங்கத்திற்கு, அப்போது கோலாலம்பூரில் மிக முக்கியப் பிரமுகராக விளங்கிய ஆர். எச். நாதன் எனும் ஆர். ஹாலாசிய நாதன் தலையாய பங்கு வகித்தார். இவர் 1938இல் தமிழ் நேசன் நாளிதழின் ஆசிரியர் பகுதியில் பணிபுரிந்து வந்தார். கிள்ளான் வட்டார இந்தியத் தொழிலாளர்கள் 10 காசு சம்பள உயர்வு கோரிப் போராடினர். அப்போதைய தோட்ட நிர்வாகங்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.
நிர்வாகத்தினரின் அனுமதி இல்லாமல் தொழிலாளர்களின் நண்பர்கள், உறவினர்கள் தோட்டத்திற்குள் வருகை தரக்கூடாது. நிர்வாக அதிகாரிகளுக்கு எதிரில் மிதிவண்டியில் போகக்கூடாது எனும் அடிமைத்தனமான கட்டுப்பாடுகள். இந்தக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும்; சம்பளத்தில் 10 காசு உயர்த்தி 60 காசாகத் தர வேண்டும் என்று கிள்ளான் வட்டார இந்தியத் தொழிற்சங்கம் போராட்டத்தில் இறங்கியது.
வேலை நிறுத்தம்[தொகு]1941 பிப்ரவரி மாதம் கிள்ளான் வட்டார இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்கள் மீது திணிக்கப்படும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தவும்; 5 காசு சம்பள உயர்வு தரவும் தோட்ட நிர்வாகங்கள் முன்வந்தன. ஏறக்குறைய இரண்டு மாதங்கள் நடைபெற்ற அந்த வேலை நிறுத்தம் 1941 ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி முடிவுக்கு வந்தது. நாடு முழுமையும் இருந்த இந்தியத் தோட்டத் தொழிலாளர்களுக்கு அந்த வேலை நிறுத்தம் ஒரு புது விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
மலாயாவில் முதன்முறையாக பெரிய அளவில் நடைபெற்ற அந்த வேலை நிறுத்தத்திற்கு மூல காரணமாக இருந்த ஆர். எச். நாதனும், அவருக்கு உதவியாக இருந்த டி. சுப்பையா என்பவரும், 1941 மே மாதம் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
ஜப்பானியர் ஆட்சி[தொகு]1941 டிசம்பர் மாதம் தொடங்கி 1945 வரையில் மலாயாவை ஜப்பானியர்கள் ஆட்சி செய்தனர். அந்தக் காலக்கட்டத்தில் தொழிற்சங்கங்கள் துடிப்புடன் செயல்படவில்லை. ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக இருந்தன. 1945 ஆம் ஆண்டு இறுதிவாக்கில் ஜப்பானியர்களின் ஆட்சி ஒரு முடிவிற்கு வந்தது. அதன் பின்னர் பல தொழிற்சங்கங்கள் மலாயாவின் பல பகுதிகளில் உருவாக்கம் பெற்றன. இந்தியர்கள் பலர் அந்தத் தொழிற்சங்கங்களில் முக்கிய பதவிகளை வகித்தனர்.
கெடா இந்தியர் தொழிலாளர் சங்கம் – ஏ.எம்.சாமி (தலைவர்)
பேராக் இந்தியத் தொழிலாளர் இயக்கம் – எம்.சி.பி.மேனன் (தலைவர்)
கிரி இந்தியர் தொழிலாளர் சங்கம் – கே.சௌத்ரி; பி.பி.நாராயணன் (தலைவர்)
சிலாங்கூர் தோட்டத் தொழிலாளர் சங்கம் – சி.வி.எச்.ஏ.மூர்த்தி (தலைவர்)
அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம்
இவ்வாறு தோன்றிய தொழிற்சங்கங்களில் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினர்களும் இடம் பெற்று இருந்தனர். அவர்களும் இந்தத் தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டினர். மலாயா, சிங்கப்பூர் பெருநிலங்களில் இருந்த அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்றாக இணைத்து அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம் (Paஇவ்வாறு n Malaysian Federation of Trade Union) எனும் பெயரில் ஒரு தேசிய அமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்த அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தின் முதல் மாநாடு 1946 மே மாதம் 15 ஆம் தேதி சிங்கப்பூர் சிலிகி சாலையில் இருந்த ஜனநாயக இளைஞர் கழக மண்டபத்தில் நடைபெற்றது. அதற்கு லூ சின் இங் என்பவர் தலைமை தாங்கினார். அந்த மாநாட்டிற்குப் பிறகு லூ சின் இங், பிரித்தானிய அதிகாரிகளால் கைது செய்யப்ப்பட்டு சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

மலாயா கம்யூனிஸ்டு கட்சி

அதன் பின்னர் 1947 பிப்ரவரி மாதம் அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவராக எஸ். ஏ. கணபதி பொறுப்பேற்றார். அந்தச் சம்மேளனத்தின் மத்திய செயல்குழுவில் 4 சீனர்கள், 4 இந்தியர்கள், 2 மலாய்க்காரர்கள் இடம் பெற்றிருந்தனர். சிங்கப்பூர் துறைமுக தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் பி. வீரசேனன் அந்தத் தொழிற்சங்கத்தின் மத்திய செயலவை உறுப்பினர்களில் ஒருவர்.

அப்போது மலாயா கம்யூனிஸ்டு கட்சி தலைமறைவு இயக்கமாக இயங்கிக் கொண்டிருந்தது. நாட்டில் நிகழ்ந்த பற்பல குழப்பங்களுக்கு மலாயா கம்யூனிஸ்டு கட்சியே காரணமாகவும் இருந்தது. மலாயா கம்யூனிஸ்டு கட்சியுடன் தொடர்பு கொண்டு இயங்கிய தொழிற்சங்கங்களைக் காவல் துறையினர் மிக அணுக்கமாகக் கண்காணித்து வந்தனர். தொழிற்சங்க அலுவலகங்களில் சோதனைகளையும் மேற்கொண்டனர். சில தொழிற்சங்கவாதிகள் கைது செய்யப்பட்டு காவலில் தடுத்தும் வைக்கப்பட்டனர்.

அவசரகால பிரகடனம்

மலாயாவில் பல வேலை மறியல் போராட்டங்களை அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம் முன் நின்று நடத்தி வந்தது. அதனால், 1946இல் மலாயா, சிங்கப்பூர் பெருநிலங்களில் இயங்கிய தொழிற்சங்கங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என அரசாங்கம் அறிவித்தது. தொழிற்சங்கங்க பதிவிற்காக தொழிற்சங்க சம்மேளனம் (Federation of Trade Union) இரண்டு ஆண்டுகள் காத்திருந்தது. இருப்பினும், தொழிற்சங்க சம்மேளனம் பதிவு செய்ய அனுமதிக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது.

கடைசியில், 1948 ஜூன் 13இல் தொழிற்சங்க சம்மேளனம் மலாயாவில் ஒட்டு மொத்தமாகத் தடை செய்யப்படுவதாக அரசாங்கம் அறிவித்தது. ஆனால், சிங்கப்பூரில் தடை செய்யப்படவில்லை. ஆனால், சிங்கப்பூரிலும் அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம் தடை செய்யப்பட வேண்டும் என ’சிங்கப்பூர் ஸ்ட்ரேயிட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ் (Singapore Straits Times) 19 ஜூன் 1948 இல் பிரித்தானிய அரசாங்கத்தை வலியுறுத்தி தலையங்கம் எழுதியது பி. வீரசேனன்

அப்போது சிங்கப்பூர் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவராக பி. வீரசேனன் என்பவர் இருந்தார். 1947ஆம் ஆண்டில் மட்டும் ஒரு வாரத்திற்கு இரண்டு எனும் எண்ணிக்கையில், 89 ரப்பர் தோட்ட வேலைநிறுத்தங்கள் நடைபெற்றன. அந்த வேலைநிறுத்தங்களுக்கு அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம் முன்னோடியாக விளங்கியது. ’சிங்கப்பூர் ஸ்ட்ரேயிட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ் மலாயாவுக்கான பிரித்தானிய உயர் ஆணையர் சர் எட்வர்ட் ஜெண்ட்டிற்கு (Sir Edward Gent) நெருக்குதல்கள் கொடுத்தது. சர் எட்வர்ட் ஜெண்ட் ஓர் உயர் ஆணையராக இருந்தும் மலாயாவில் ஒரு நியாயமான மனிதராக நடந்து கொண்டார்.

எஸ். ஏ. கணபதியை சிங்கப்பூரில் கைது செய்ய வேண்டும் எனும் கோரிக்கையை நிராகரித்தவர். அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம் மலாயாவில் மட்டுமே தடை செய்யப்பட வேண்டும்; சிங்கப்பூரில் அல்ல என்பதில் சர் எட்வர்ட் ஜெண்ட் பிடிவாதமாகவும் இருந்தார். இந்த அறிவிப்பிற்கு பின்னர் 1948 ஜூலை 4இல், அவர் லண்டன் திரும்பிய போது அவர் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளானது. அதில் அவர் இறந்து போனார். அந்த விமான விபத்தைப் பற்றிய மர்மங்கள் இன்னும் நீடிக்கின்றன.
மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தில் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் ஊடுருவல் இருப்பதை அரசாங்கம் உணர்ந்து கொண்டது. அதனால், தொழிற்சங்க அலுவலகங்கள் அடிக்கடி சோதனையிடப்பட்டன. மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், தொழிற்சங்க அதிகாரிகள் நூற்றுக்கணக்கில் கைது செய்யப்பட்டனர். 1948 ஜூன் மாதம் 18 ஆம் தேதி நாடு முழுமையும் அவசரகாலம் பிரகடனம் செய்யப்பட்டது.

கணபதியின் கடைசிகாலம்

பிரித்தானிய அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் இறங்கிய மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினர்கள் காட்டிற்குள் ஓடி மறைந்தனர். எஸ். ஏ. கணபதி பத்து ஆராங் நகரத்திற்கு அருகில் இருந்த வாட்டர்பால் தோட்டத்தில் கைது செய்யப்பட்டார். சட்டத்திற்குப் புறம்பாக ஒரு கைத்துப்பாக்கி, ஆறு சுற்றுத் துப்பாக்கிக் குண்டுகளையும் வைத்திருந்தார் என்று கணபதியின் மீது குற்றம் சாட்டப்பட்டது.
கோலாலம்பூர் நீதிமன்றம் கணபதிக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் தொழிற்சங்க இயக்கங்கள் மற்றும் உலகத் தொழிலாளர் சம்மேளனம் (World Federation of Trade Unions) எஸ். ஏ. கணபதிக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனைக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. மரணதண்டனை நிறைவேற்றப்படக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டன.

ஜவஹர்லால் நேரு வற்புறுத்தல்

இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்திய விடுதலை வீரர் நேதாஜி போன்றோரிடம் எஸ். ஏ. கணபதிக்கு நெருங்கிய தொடர்புகள் இருந்தன. 1945 ஆகஸ்டு 10ஆம் தேதி ஜப்பான் சரணடைந்த செய்தியை முதன்முதலில் நேதாஜிக்கு அறிவித்ததே எஸ். ஏ. கணபதிதான். சிங்கப்பூரில் இருந்து சிரம்பான் வந்து அந்தச் செய்தியை எஸ். ஏ. கணபதியும் லட்சுமிய்யாவும் நேதாஜியிடம் தெரிவித்தனர். அந்த அளவுக்கு கணபதியும் நேதாஜியும் நெருக்கமானவர்கள். ஜவஹர்லால் நேரு சிங்கப்பூர் வந்திருந்த போது எஸ். ஏ. கணபதியைச் சந்தித்துப் பேசி இருக்கிறார்.

கணபதியின் மரணதண்டனை நிறுத்தப்பட வேண்டும் என்று ஜவஹர்லால் நேரு நேரடியாகவும் பிரிட்டனுக்கான இந்திய்த் தூதர் வே. கி. கிருஷ்ண மேனன் மூலமாகவும் பிரித்தானிய பிரதமரை வற்புறுத்தினார். அதற்கு பிரித்தானிய பிரதமர் சம்மதம் தெரிவித்தார். முறையான உத்தரவு தொலைத்தந்தி வழி அனுப்பபட்டது. ஆனால், பலன் ஏதும் இல்லை.

நன்றி: தமிழ்ஸ்பீக் இணையம்
(http://tamilspeak.com/?p=14972)

1.1.13

மருதுவின் வளரி

மருதுபாண்டியர்கள் பயன் படுத்திய வளரி ஆயுதம் இது எதிரியை தாக்கி விட்டு மீண்டும் எய்தவரிடமே வந்து விடும். வளரி ஆயுதத்தை அனைவரும் பயன் படுத்த முடியாது. இக்கலையை பயின்றவர்கள் மிக அரிது. இந்த வளரி ஆயுதத்தை பயன்படுத்துவதில் மருது பாண்டியர்கள் மிகவும் திறமைசாலிகள். - மருதுபாண்டியர்களின் வீர வரலாறு புத்தகத்திலிருந்து...