அகமுடைய தேவர், அகமுடைய சேர்வை, அகமுடைய பிள்ளை, அகமுடைய முதலியார், அகமுடைய உடையாரென பல்வேறு வட்டார பட்டபெயர்களால் பல கூறுகளாக சிதறிக்கிடக்கும் உறவுக்குழுக்களை ஒரே கூரையில் ஒன்றிணைக்கும் ஒரு சிறு முயற்சிக்கான தளம் இது!
Showing posts with label மருது பாண்டியர்கள். Show all posts
Showing posts with label மருது பாண்டியர்கள். Show all posts

20.8.14

மருதுபாண்டியர்களின் உடல்!

மருதுபாண்டியர்களின் உடல் இங்கு (திருப்பத்தூர் ஸ்வாடிஷ் மருத்துவமனை அருகில்) தான் அடக்கம் செய்யப்பட்டது என்பதற்கு இது தான் காலத்தால் அழியாத வரலாற்று சுவடு.

காளையார்கோவிலில் தான் அடக்கம் செய்தார்கள் என்பதற்கு அதிகாரப்பூர்வ அடையாளங்கள் எதுவுமே அங்கே இல்லையே.

அரசியல் சூழ்ச்சிகளை உடைத்து திருப்பத்தூரில் அக்டோபர் 24ல் நடைபெறும் அரசு விழா மற்றும் குருபூஜை விழாக்களில் கலந்து கொள்வோம்.

நாட்டுக்காக உயிரையே தியாகம் செய்த நம் முப்பாட்டன்கள் மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு மரியாதை செய்வோம்.

14.2.14

தமிழ்புலி மருதரசர்

ஒருமுறை புலிக்குட்டிப்புலவர் எனும் ஒரு புலவர் மருதுபாண்டியர் அரண்மனை நோக்கி வந்தார்.புதிதாக பணியிலிருந்த வாயிற்காப்போன் "அரசரிடம், யார் வந்திருப்பதாகச் சொல்ல? என்று கேட்டான்.
புலவர் அதட்டலாகவும் ஏளனமாவும் "அரசனிடம் புலி வந்திருக்கிறதென்று சொல் "என்று சொல்லி அனுப்பினாராம். வாயிற்காப்போனும் அவ்வாறே அரசனிடம் தெரிவித்தான்.பெரிய மருதுபாண்டியர் இதற்கெல்லாம் அசறுபவரா? அவரும் 'இங்கு வேல் இருக்கிறதென்று சொல்லி, வரச்சொல் என்றாராம்.முத்து வேலுக்கவிராயர் தம் அவையில் இருப்பதைக் குறிப்பால் உணர்த்தினார் பெரிய மருதுபாண்டியர். மன்னர் புலியை அடக்குவதில் மட்டும் வல்லவரல்லர் தமிழிலும் புலி எனப் புரிந்து கொண்ட புலவர் தம் செருக்கடங்கினார்.

நன்றி: மு.இரா.கலைச் செல்வன்

2.2.14

யார்?



1772 ல் முத்துவடுகநாதர் இறந்த பின்பு வேலு நாச்சியாரின் உயிரையும் , மானத்தையும் கடைசி வரை காத்தது யார் ?

சிவகங்கை சீமையில் இருந்து டோலி மூலம் திண்டுக்கல் வரை வேலு நாச்சியாரை பாதுகாப்பாக கொண்டு சேர்த்து , மைசூர் மன்னர் ஹைதர் அலியிடம் அறிமுகப்படுத்தி அடைக்கலம் தந்தது யார்..?

சிவகங்கை சீமையை மீட்டெடுக்க ரகசியமாக புரட்சி படை திரட்டியது யார்..?


வேலு நாச்சியார்க்கு 1772 முதல் 1780 வரை திண்டுக்கல்லிலும் , விருபாட்சியிலும் போர் பயிற்சி தந்தது யார்..?

சிவகங்கை சீமையை மீட்க போதிய பணம் இல்லாத காரணத்தால் , திருவிதாங்கூர் மன்னர் நடத்திய போட்டியில் வேங்கை புலியை வென்று , அதன் மூலம் கிடைத்த பணத்தை ஆற்காடு நவாபிடம் கொடுத்து சிவகங்கை சீமையை மீட்டது யார்..?

வெள்ளையரால் தோற்கடிக்கப்படாத ஒரே ராணி வேலு நாச்சியார் என்ற பெருமைக்கு காரணம் யார்..?

அவரை அறிவாலும் , வீரத்தாலும் வழி நடத்தியது யார்..?

தன் நாட்டையும், அரச பதவியையும் வேலு நாச்சியார் ஒப்படைக்கும் அளவிற்கு அறிவு,வீரம்,நிர்வாகம்,போர் திறன்,ஆளுமை அனைத்திலும் சிறந்து விளங்கி உயர்ந்திருந்தது யார்..?

இன்று வரை சிவகங்கை என்னும் சமஸ்தானம் இருப்பதற்கு காரணம் யார்..?

இவர்கள் இல்லையென்றால் 1772ம் ஆண்டோடு சிவகங்கையும்,அதன் அரச வம்சமும் முடிவுக்கு வந்திருக்கும்.

நன்றி மறப்பது நன்றன்று.

1.2.14

நன்றி மறப்பது நன்றன்று

1772 ல் ஆங்கிலேயர் மற்றும் ஆற்காடு நவாபின் கூட்டுப்படைகளால் மன்னர் முத்துவடுகநாதர் கொல்லப்பட்ட பிறகு, சிவகங்கையை ஆற்காடு நவாப் தன் வசமாக்கினார். சிவகங்கை சீமையின் பெயர் "ஹுசைன் நகராக" மாற்றப்பட்டது.  1772 முதல் 1780 வரையிலான 8 ஆண்டுகள் ஆற்காட்டு நவாபின் மகனான அமரா அல் உமர், ஹுசைன் நகரான சிவகங்கையை ஆட்சி செய்தார். பின்பு 1780 ம் ஆண்டு மாமன்னர்களின் கூட்டுப்புரட்சி படை சிவகங்கையை மீண்டும் கைப்பற்றியது. பின்பு ராணி வேலு நாச்சியார் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் முழு மனதோடு ஆட்சிப்பொறுப்பை மருது பாண்டியர்களிடம் ஒப்படைத்தார்.  1780 முதல் 1801 வரை மாமன்னர்கள் சீரும் சிறப்புமாக சிவகங்கையை ஆண்டனர். அந்த 21 ஆண்டுகள் சிவகங்கையின் பொற்காலமாகவே கருதப்பட்டு வருகிறது.

வரலாறு மறைக்கப்படுவதும் , திரிக்கப்படுவதும் ஏனோ???

நன்றி மறப்பது நன்றன்று..!!!


24.10.13

மறக்கமுடியுமா மருதுபாண்டியரை?



உலகிலேயே பூமரங் எனப்படும் வளரி என்ற ஆயுதத்தை மிக நேர்த்தியாக பயன்படுத்த தெரிந்த ஓர் தமிழர் மாமன்னர் மருது பாண்டியர். மதுரை தெப்ப குளத்தின் ஒரு கரையில் இருந்து வீசினால், மறுகரை வரையில் சென்று மீண்டும் கண்ணிமைக்கும் நேரத்தில் மருதுவின் கைகளுக்கே வந்து சேரும். இதை நம்ம ஆளுங்க சொல்லல; வெள்ளைக்காரன் ஒருவரின் நூல் குறிப்பில் இது உள்ளது. "வீரம் என்ற குணம் தான் எதிரியும் மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும்" என்று முத்துராமலிங்க தேவர் மருதுபாண்டியர்களை மனதில் வைத்தே சொல்லி இருக்க கூடும்!

வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து திருச்சிராப்பள்ளியில் ஜம்புதீவு பிரகடணத்தை அமல் படுத்தி அனைத்து தரப்பட்ட தமிழ் மக்களையும் ஒன்றிணைத்த மாமன்னர் மருது பாண்டியர்களின் வாய்மையும் - வீரமும் போற்றுதலுக்குரியது.
எங்கெல்லாம் அந்த (ஐரோப்பிய) இழிபிறவிகளை பார்க்க நேரிடுகிறதோ அங்கேயே அவர்களை அழித்தொழியுங்கள். ஐரோப்பியரால் இன்னும் ரத்தம் கலப்படமாகாமல் இருக்கும் அனைவரும் ஒன்றுபட முனைவீர். - இது மருதுபாண்டியரின் பிரகடணத்தின் ஒரு பகுதி.

முத்துவடுகநாத தேவரோடு காட்டில் வேட்டையாடி கொண்டிருந்த போது, அவர் மீது பாய்ந்த புலியை தனியாளாக நின்று கூரிய நகங்களும், பற்களும் கொண்ட புலியோடு யுத்தமிட்டு அதை அடக்கி வெற்றிகண்டவர் மருது!

எல்லைப்புற ஊர்களில் எல்லாம் காடுகளை உருவாக்கி காட்டரண்கள் அமைத்து, அங்கெல்லாம் கோட்டைகளை வலுவாக உருவாக்கிய மருது பாண்டியர்களின் இந்த போர்முறை இந்த உலகுக்கே புதிதானது. திடீர் தாக்குதல் - தாக்கிவிட்டு மறைதல் - மறைவிடங்கள் அமைத்து மறைந்து தாக்குதல் - ஆயுதங்களை மறைத்துவைத்து பிறகு பயன்படுத்துதல் - தங்கள் இடத்தை எதிரி கைப்பற்றும் சூழ்நிலையில் அந்த இடத்தை அழித்தல் போன்ற கொரில்லா போர் யுக்தியை பயன்படுத்தி பெரும்படைகளை வென்று மண்ணை காத்த மாவீரர்களான மாமன்னர் மருதுபாண்டியர்களின் வீரம் இன்றைக்கல்ல என்றைக்குமே போற்றத்தக்கது.

கி.பி. 1780 முதல் 1801 வரை சுமார் 20 ஆண்டுகள் ஆட்சி புரிந்த காலகட்டத்தில் சாதி, சமயச் சார்பற்ற, மத நல்லிணக்கத்தைக் கடைப்பிடித்த சிவகங்கை சீமை மருது பாண்டியர்களின் ஆட்சி தமிழ் வரலாற்றின் மைல்கல்!

தங்களது ஆட்சிக் காலத்தில் இஸ்லாமியர்களுக்காக நரிக்குடியில் மசூதியும், திருப்பத்தூரில் கான்பா பள்ளிவாசலையும், கிறிஸ்தவர்களுக்கு சருகணியில் தேவாலயமும், இந்துகளுக்காக குன்றக்குடி, காளையார்கோவில், திருமோகூர், மானாமதுரை, மதுரை ஆகிய இடங்களில் பெரிய சிவாலயங்களையும், முருகன் கோயிலையும் எழுப்பி திருப்பணி செய்து வழிபாடு நடத்தி இருபது வருடங்கள் ஆட்சி புரிந்த மாமன்னர் மருது பாண்டியர்களின் புகழை யாராலும் அவ்வளவு எளிதாக மறைத்துவிட முடியாது.

மாமன்னர் மருது பாண்டியர்களின் உயர்ந்த நாட்டுப்பற்றையும், வீரத்தையும், விவேகத்தையும், சுயமரியாதையையும் கி.பி. 85ம் ஆண்டில் வாழ்ந்த பிரிட்டானியத் தளபதியின் உரையோடு ஒப்பிட்டுப் பாராட்டுகிறார் ஆங்கில நாட்டைச் சார்ந்த நூலாசிரியர் கோர்லே.

தாங்கள் கட்டிய காளையார்கோவில் தகர்ந்து விட கூடாதென்பதாலும், ஆட்சியை பிடிப்பதறக்காக ஒருசில துரோகிகளின் சூழ்ச்சியாலும் தூக்கிலிடப்பட்டனர் மருதுபாண்டியர். ஆனால், திருப்பத்தூரில் மாமன்னர்கள் இருவர் மட்டும் தூக்கிலிடப்படவில்லை; தங்களது மன்னர்களுக்காக அவர்களோடு துணை நின்ற சாதி / மத வேறுபாடின்றி ஆயிரகணக்கான மக்களும் தூக்கிலிடப்பட்டது உலக வரலாற்றிலேயே இதுதான் முதலும் கடைசியும்! தன் மன்னனுக்காக தங்களது உயிரை தர நினைத்த மக்களும், அப்படிப்பட்ட மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் தங்களை இழந்த மருது பாண்டியர்களுக்கு நிகர் வேறு யாராக இருக்க முடியும்?

ஆங்கில ஏகாதிபத்தியத்தாலும் - ஆன்மீக பக்தியாலும் அக்டோபர் 24 - திருப்பத்தூர் மண்ணில் மாமன்னர் மருது பாண்டியர்களை தூக்கிலிட்ட 212 வது நினைவேந்தல் தினம் இன்று!

அடங்காத பற்றோடு அடியேனின் வீரவணக்கம்!

- இரா.ச.இமலாதித்தன்

7.1.10

மருதுபாண்டியரை சிறுமைபடுத்தும் இனத்துரோகிகள்

 மருது பாண்டியர்களை மா மன்னர் என்று அழைப்பது கூட மோசடியா...? இப்படி அழைப்பதால் சட்டம் ஒழுங்கு சீர்கெடுமா...? செளரிராஜன் மாதிரியான இனத்துரோகிகளால் தான் மருது பாண்டியர் அன்று, தூக்கிலிடப்பட்டனர். இப்போதும் இது போன்ற குலத்தை கெடுக்க வந்த கோடாரி காம்புகள் துளிர் விட்டுக்கொண்டுதான் இருக்கின்றன என்பது வேதனையான விடயம்.