தமிழ்க்
கல்வெட்டுகளில் வர்ம சிகிச்சை முறை, ‘அங்க வைத்தியம்' அல்லது ‘அங்க
வைஜ்யம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்றைய நடைமுறைப்படி அங்க வைத்யக்
கல்வியும் பயிற்சியும் அரச குலத்தார்க்கும் அதிகார வர்க்கத்துக்கும்
மட்டுமே உரியவையாகப் பராமரிக்கப்பட்டு இரகசியம் காக்கப்பட்டு வந்திருக்க
வேண்டு மென்று நாம் புரிந்துகொள்ள முடிகிறது. அகம்படியர் மரபினரும்,
சத்திரிய - பிராம்மண வர்ணக் கலப்பில் தோன்றிய உயர்குடி மருத்துவர்களுமே அங்க வைத்யர்களாக இருந்திருக்க வேண்டும்.
தமிழகத்தில் ’வெட்டுமாவலி அகம்படியர்’ சமூகத்தவர் கள்ளர் - மறவர் சமூகத்தவருடனான தமது பூர்வபந்தங்களைத் தொடர்ந்து வந்ததால் ‘குடி படை'களாக (போர்க்காலங்களில் மட்டும் போரில் ஈடுபடும் குடியானவர்கள்) நீடித்தனர். ஆனால், கேரள மாநிலத்தில் சாமந்தச் சிற்றரசர்களின் மரபைப் பின்பற்றி நம்பிதிருப்பாதம் (நம்பூதிரிபாத்) பிராம்மணர்களுடன் சம்பந்த உறவு கொண்டு முதன்மையான அதிகார வர்க்கமாக உருவெடுத்த அகம்படிய நாயர் சமூகத்தவர், தன்வந்திரியை மூலவராகக் கருதும் ஆயுர்வேத மருத்துவத் துறையின் ஒரு பிரிவாக வர்ம சிகிச்சை முறையை மாற்றினர்.
(தமிழினி, மே 2008 இதழில் வெளிவந்த கட்டுரையின் மேம்படுத்தப்பட்ட வடிவம்)

No comments:
Post a Comment