அகமுடைய தேவர், அகமுடைய சேர்வை, அகமுடைய பிள்ளை, அகமுடைய முதலியார், அகமுடைய உடையாரென பல்வேறு வட்டார பட்டபெயர்களால் பல கூறுகளாக சிதறிக்கிடக்கும் உறவுக்குழுக்களை ஒரே கூரையில் ஒன்றிணைக்கும் ஒரு சிறு முயற்சிக்கான தளம் இது!

13.3.14

தீரன் சின்னமலை கும்மி பாடல்




கட்டுத் தடிக்காரர் முன்னடக்க-உடன்
#கருப்பசேர்வையும் பின்னடக்க
வட்டப் பொட்டுக்காரச் சின்னமலை
யதோ வார சவுரியம் பாடுங்கடி

பட்டத்துக் கத்தி பளபளெனச் செல்லும்
பாளையத்துக் காரர்கள் முன்னடக்க
வெட்டுந்துரை மகன் சின்ன மலை
வரும் வேடிக்கை தன்னையும் பாருங்கடி

பூனைக் குலமென வெள்ளைப்படையோடப்
பூரித்து வீரப் புலி போலச்
சேனைக் கதிபதி சின்னமலை
வரும் தீரத்தை வந்துமே பாருங்கடி

கச்சைகட்டுந் தடிக்காரர்களே- வெள்ளைக்
காரர்களையெங்கு கண்டாலும்
காலையொடித்துத் துரத்துங்கள் என்றுமே
கட்டளையிட்டானம் சின்னமலை

கும்மியடிப்பெண்ணே, பெண்ணே கும்மியடி
கொங்கைகள் குலுங்கிட கும்மியடி
எங்கும் புகழ்மிக்க சின்ன மலையதோ
வார ஒய்யாரம் பாருங்கடி…..


*இப்பாடலில் இரண்டாம் வரியிலேயே கருப்ப சேர்வையின் பெயர் வரும்.

No comments:

Post a Comment