அகமுடைய தேவர், அகமுடைய சேர்வை, அகமுடைய பிள்ளை, அகமுடைய முதலியார், அகமுடைய உடையாரென பல்வேறு வட்டார பட்டபெயர்களால் பல கூறுகளாக சிதறிக்கிடக்கும் உறவுக்குழுக்களை ஒரே கூரையில் ஒன்றிணைக்கும் ஒரு சிறு முயற்சிக்கான தளம் இது!

25.3.14

வேளாளர்.காம் கட்டுரைக்கு மறுப்பு கட்டுரை!

( http://velaler.com/index.php/health/154-velala-catagories/diet-a-fitness/570-velala-isthiscorrect இந்த வேளாளர்.காம் இணையத்தில் வெளிவந்துள்ள முக்குலத்தோர், வெள்ளாளர்களா? என்ற கட்டுரைக்கு வந்துள்ள சிவா பிள்ளை (S.J சிவா, வேளாளர் வரலாற்று மீட்பு களம், மதுரை.)என்பவரின் பின்னோட்டத்திற்கு மறுப்பு பதில் கொடுத்துள்ளதன் மீள்பதிவு இது.)


வணக்கம் சிவா பிள்ளை,
உங்களது பின்னூட்டத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக கூட என் பதில் பின்னூட்டம் இருக்கலாம். விசயத்திற்கு வருகிறேன்.

/முதலில் கள்ளர், மறவர், கணத்தோர் அகமுடையர், மெல்ல மெல்ல பிள்ளை என்றனர் தற்போது இதனை நவீனப்படுத்தி வெள்ளாளர் வேளாளர் என்கின்றனர்./

இந்த சொலவடையை முதலில் உருவாக்கியது யார்? அதை எப்படி நீங்கள் பொத்தாம் பொதுவாக உங்களது கற்பனையின் யூகத்தில் ஏதெதோ சொல்கின்றீர்? கள்ளர் மறவர் கனத்ததோர் அகமுடையார் மெல்ல மெல்ல வெள்ளாளர் என்றும், கள்ளர் மறவர் கணக்காயர் அகமுடையார் மெல்ல வெள்ளாளர் என்றும், தமிழில் எழுத தெரிந்த அனைவரும் அவர்கள்தான் வரலாற்று ஆசிரியர் போல உளறி வைத்து கொண்டிருக்கின்றனர். முதலில் இந்த சொலவடைக்கான ஆதாரம் எங்கிருக்கின்றது? எந்த இலக்கிய / வரலாற்று நூலில் குறிப்பிட்டுள்ளது? அதை முதலில் தெளிவாக்கிவிட்ட பின்னர், மெல்ல மெல்ல பிள்ளை என்பதை பற்றி பேசினால் நன்றாக இருக்கும்.

/முதலில் பிள்ளை என்பதனை சாதி என நினைத்திருக்கலாம். மேலும் இது இலக்கியங்களில் கூறப்பட்டு்ள்ளனவா, வள்ளுவர் கூறியதா, கம்பர் கூறியதா,
தொல்காப்பியர் கூறியதா, அம்மக்களில் சிலர் மாத்திரம் இவ்வாறு
கூறிவருகின்றனர்/

பிள்ளை என்பதை யாரும் சாதியாக நினைக்கவேயில்லை. அதை நீங்களாகவே ஓர் அனுமானத்தின் அடிப்படையில் சொல்லிவிட்டு தோராயமாக யாராவது சொல்லிருக்க கூடும் என சொல்லி உங்களது கருத்து மேட்டிமைத்தனத்தை இங்கே காட்டிருக்கின்றீர்களே தவிர வேற ஒன்றும் புதிதாக சொல்லவில்லை. யாரோ சிலர் சொல்வதை எப்படி பெரும்பான்மையான ஒட்டுமொத்தமானவர்களையும் குற்றவாளிபோல ஏளனம் பேசுவது சரியல்ல.

/இதாவது உயர்குடியான மரபாளர் (மிகவும் தொன்மையானவர்கள் ) ஆன வேளாளர் பேரினத்தை இழிவுப்படுத்தி தங்களை உயர்த்திக் கொள்ள தாங்களே தமிழகத்தின் முதல் மக்கள் என யாவரும் நினைக்க வேண்டும் என இவ்வாறு முறையற்ற அபாண்ட புழுகை புழுகிவருகின்றனர்,/

உயர்குடி மரபு என்பதை பற்றி பலரும் பலவாறாக சொல்லிவிட்டார்கள். வேண்டுமென்றால் கூகிள் புக்ஸ் இணையத்தின் ஊடாக அகமுடையார் என்ற சொற்பதத்தை ஆங்கிலத்தில் தேடிப்பாருங்கள் உயர்குடி மரபு அகமுடையார் என்பதை புரிந்துகொள்ள முடியும். தென்னிந்திய சாதிபடிநிலை பற்றிய ஆங்கில அறிஞர்களின் இருவேறு நூல்கள் இணையத்தில் கிடக்கின்றன. தேடிப்பார்ர்த்து விட்டு உயர்குடி மரபு போன்றவற்றை பேசினால் நலம். வேளாளர் என்பதில் உழுதுண்டு வேளாளர், உழுவித்த வேளாளர் என இரு பெரும்பிரிவுகள் இருக்கின்றன. இந்த இருபிரிவுகளில் ஒன்று உயர்குடியாகவும். மற்றொன்று தாழ்குடியாகவும் கணக்கிடபட்டு வந்தது. ஆனால் இன்றைய வேளாளர்கள் என சொல்லிக்கொள்ளும் சாதியமைப்பினர் உயர்குடி/ தாழ்குடி என்ற இரண்டையும் ஒரே படிநிலையின் அடிப்படையில் வேளாளர்கள் என சொல்லிக்கொண்டு குழப்புகின்றனர்.

மேலும், சாதீய படிநிலைகளில் வலக்கை, இடங்கை முறைகளே மேல் கீழ் என்ற சாதி அடிப்படை கட்டுமானமாக அன்றைக்கு இருந்தது. ஆனால் இன்று அந்த அடிப்படை கொஞ்சம் மாறுதல் அடைந்திருக்கின்றது. நீங்கள் கூறியுள்ளது போல தொன்மையானவர்கள் என்ற பட்டியலை எடுத்து பார்த்தால் வரலாற்று ஆய்வின்படி கண்டிப்பாக அது வெள்ளாளர்கள் மட்டுமே கிடையாது என்பதுதான் பதிலாக இருக்கின்றது. இந்த எதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் வெள்ளாளர்களை தவிர ஏனைய அனைவரும் வந்தேறிகள் அல்லது இழிகுடி என்பது போன்ற பேச்சுக்கள் பொது கருத்தியலுக்கு ஒத்துவராது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் நடத்தப்பட்ட வரலாற்று ஆய்வில் தேனியை சார்ந்த விருமாண்டி என்ற நபர்தான் உலகின் தொன்மையான மனிதரென ஐநா ஆய்வு நடுவம் இணைந்து நடத்திய வரலாற்று தேடலில் கண்டறியப்பட்டது. அப்படி பார்த்தால் அந்த விருமாண்டி என்ற நபர் சார்ந்திருக்கும் சாதியான பிரான்மலை கள்ளரே தொன்மையானவர்கள். அதையும் பொருட்படுத்தவில்லையெனில் மலைவாழ் மக்கள் உள்ளிட்ட பட்டியல் சாதியினர்களும் தொன்மையானவர்கள் என்பதை நாம் ஏற்றுகொள்ள வேண்டும்.

/அகமுடையார் என்றால் என்ன?
அகமுடையார் என்பது அரண்மனை பணிக்காரன் என்பதே இதன் பொருள் . இதனை பலர் பெற்றிருக்கிறார்கள்./

அகமுடையார் என்றால் என்ன என்பதை பற்றி ஒருவரியில் யாராலுமே விளக்கம் கொடுக்க முடியாது. ஏனெனில் அதற்கான உள்ளார்ந்த அர்த்ததை குத்துமதிப்பாக உளறிவைக்க முடியுமே தவிர உண்மையான பொருளோடு அதை அனுக முடியாது என்பதே உண்மை.

அகமுடையார் என்று இன்றைய சூழலில் உருமாற்றம் அடைந்திருந்தாலும், அகமுடையாரின் ஆதிப்பெயர் அகம்படியர் என்பதேயாகும். அகம்படியர் என்பதை அகம்+படியர் என பிரித்து பொருள் கொள்ளமுடியும். அதாவது அகம் என்றால் உள்ளே என்று பொருள். படியர் என்பதின் வேர்சொல் படி; இந்த படிக்கு பலவாறாக அர்த்தம் கொள்ள முடியும். படி - படித்தல், வாசற்படி, பணியவைத்தல் என பல அர்த்தங்களை உடையது.

இந்த அர்த்தங்களை மட்டும் வைத்துக்கொண்டு அரண்மனை பணிக்காரன் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் எல்லா பெயர்காரணத்தையும் வைத்துகொண்டு மட்டும் அள்வீடு செய்வது என்று சொன்னால், பிள்ளை என்றால் யாருக்கு பிள்ளை? யாருடைய பிள்ளை? என்பதை போன்ற பிதற்றல்தனமான கேள்விகளே எழக்கூடும். எனவே அகமுடையார் என்பதை சரியான முறையில் அனுகுவதே சிறந்தது.

மன்னராட்சியில் அரண்மனை மட்டுமில்லாத கோவில்களே முதன்மையான இடத்தை பிடித்தன. ஏனெனில் மன்னனே இறைவனுக்கு ஒப்பானவன். அவ்விறைவனின் பாதுகாவலனாக தகுதியான நபரை நியமிப்பதுதான் முறையாக கொள்ளப்பட்டது. மேலும், கோவிலிலுள்ள பெரும் செல்வத்தையும் கலைநயமான சிலைகளையும் இன்னபிற மதிப்பில்லாவற்றையும் காப்பாற்ற வீரம் மட்டுமே போதுமென்ற போதிலும், கோவிலை பாதுகாக்க ஆன்மீக நாட்டமும், சுயஒழுக்கமும், நெஞ்சுரம் கொண்ட வீரத்துடன் கூடிய இறையன்பும், நேர்மையும் நிரம்பிய நபர்கள் தேவைப்படும்போது அதற்கு சரியான நபர்களாக இருந்தது அகம்படியர்கள் மட்டுமே. அதனால் தான் கோவிலின் உள்புறக்காவலும், அரண்மனை கோட்டைக்காவலும் அகம்படியர் வசம் இருந்தது. கடவுளுக்கு அடுத்தபடியாக மக்களால் போற்றக்கூடிய அரசனும் அவனது குடும்பமும் இருக்கையில் அவர்களை காப்பாற்றக்கூடிய தகுதி அகம்படியருக்கே இருந்தது. அதனாலேயே அகம்படியர்கள் கோட்டைகாவலையும் கையில் எடுத்து கொண்டனர்.

போர்காலங்களில் அந்நாட்டின் கோவிலையும் பொன்னையும் பொருளையும், மன்னனின் இருப்பிடத்தையும் வாரிசையும் காக்க வேண்டிய பொறுப்பு முழுக்க முழுக்க அகம்படியர் வசமே இருந்தது. அப்படிப்பட்ட அகம்படியர்கள் மன்னனுக்கும், மன்னனின் குடும்பத்திற்கும் மிகவும் நெருங்கிய உறவுகளாவும், இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உருவாகின. நேர்மையான செயல்பாடு மற்றும் நம்பிக்கைக்கு உரியவர்களால் இருந்ததாலேயே, அரண்மனையையும், கோவிலையும் காப்பாற்றக்கூடிய வீரம் செறிந்தவர்களாக அகம்படியர் இருந்தனர்.

வெள்ளாளர் ஆதீனம் மட்டுமில்லாது இன்றைக்கும் கோவை உள்பட பல இடங்களில் கோவில் அறத்தொண்டு புரியும் பலர் அகமுடையாரும் உண்டு என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட வரலாறு உடையவர்களை குறைத்து மதிப்பிட்டு எழுதுவது அழகல்ல.

/சேர்வை, சேர்வைகாரன் என்றால் கடைநிலை ஊழியர் என்று பொருள் இப்பட்டம் வன்னியர், வலையர், கேனார், உட்பட முக்குலத்தோரில் சிலரும் பெற்றிருக்கிறார்கள் இப்பட்டம் பெற்றவர்களும் அகமுடையார் ஆவர்,/

சேர்வைக்காரன் என்பதையும் சேவைக்காரன் என்பதையும் ஒன்றுபோல சொல்லி குழப்பிக்கொள்வது நகைப்புக்குரியது. சேர்வை என்பதன் பொருளே தளபதி என்பது மட்டும்தான். போர்மறவர்களை ஒன்றுசேர்த்து செயல்படுவதாலேயே சேர்வைக்காரன் அல்லது சேர்வை என்ற பட்டம் வழங்கப்பட்டது. சேர்வை என்ற பட்டம் தாங்கிய பலர் தென் தமிழ்நாட்டில் அனைத்து பாளையங்களிலும் போர்ப்படை தளபதிகளாக இருந்துள்ளனர். வீரம்செறிந்த தளபதிகளுக்கு தந்துள்ள பட்டத்தை கடைநிலை ஊழியர் என்று அவர்களின் வீரத்தை இழிவுபடுத்தும் விதமாக சொல்லிருக்கும் விதம் கண்டனத்துக்குரியது.

/எனவே முக்குலத்தினரில் ஒரு பிரிவினரான அகமுடைய சேர்வைகளுக்கும் நமக்கும் (முதலியார்,பிள்ளைமார்) எந்த வித சம்பந்தமும் கிடையாது எனவே நம்சமூகத்தினர் அல்லாத மருதிருவர் படத்தை நம்மவர்கள் (முதலியார்,பிள்ளைமார்) யாரும் பயன்படுத்தி முற்பட்ட உயர்குடியான தாங்கள் தங்களை தாங்களே தாழ்த்தி கொள்ளாதீர்கள்/

அகமுடைய தேவரோ அகமுடைய பிள்ளையோ நேரடியாக மண உறவு உண்டு என்பதை போல இன்றைக்கு அகமுடைய சேர்வை பட்டம் கொண்டுள்ளோருக்கும் இடையேயும் மண உறவு உண்டு. வட்டார பட்ட பெயர்களால் வேறுபட்டருந்தாலும் இம்மூவரும் ஒன்றே. ஆனால், செங்குந்த முதலியாரோடு உறவு கொண்டாடும் வடக்கத்திய முதலியார்களோடு பிள்ளை பட்டம் தாங்கிய துளுவ வெள்ளாளர்கள் இணைவதே முரண் என கணக்கில் கொள்ளப்படும். ஏனெனில் அரசாங்க பதிவேட்டில், (துளு அல்லது துளுவ வெள்ளாள்ர் உள்பட அகமுடையார்) என்றே குறிப்பிடப்படுகின்றது.

மேலும் முற்பட்ட உயர்குடி போன்ற வார்த்தை பிரயோகங்கள் வெறும் அரசியல் லாபத்திற்கு உதவுமே அன்றி வேறதற்கும் உதவாது, அகம்படியர் குடியனர் பட்ட பெயர்களால் சிதறி இருந்தாலும் அனைவரும் உயர்குடியினரே என்பதில் மாற்று கருத்தில்லை. அதை புரிந்து கொள்ளாமல் தலித் வகுப்பை சார்ந்த பள்ளர்களை (தேவேந்திர குல வேளாளர் என பெயர் மாற்றம் செய்து) தங்களது கூட்டணியில் இணைத்து கேவலமான அரசியல் செய்து கொண்டு உயர்குடி என்ற வெற்று பீற்றல்கள் ஒன்றுக்கும் உதவாது என்பதை காலம் உணார்த்தும்.

நன்றி!

- இரா.ச.இமலாதித்தன், நாகப்பட்டினம்

No comments:

Post a Comment