அகமுடைய தேவர், அகமுடைய சேர்வை, அகமுடைய பிள்ளை, அகமுடைய முதலியார், அகமுடைய உடையாரென பல்வேறு வட்டார பட்டபெயர்களால் பல கூறுகளாக சிதறிக்கிடக்கும் உறவுக்குழுக்களை ஒரே கூரையில் ஒன்றிணைக்கும் ஒரு சிறு முயற்சிக்கான தளம் இது!

19.2.14

தியாகத்தேர்


மருதுபாண்டியர் புகழ் பாடும் போது தியாகத்தேர் குறித்து பதிவு செய்வது மிகவும் அவசியமானது. காளையார்கோயில் உள்ள பழைய கோபுரத்திற்குத் தென்புறம் புதிதாகத் பெரிய கோபுரம் கட்டிமுடித்து குடமுழுக்கு விழா செய்ய புதிய தேர் ஒன்றை செய்ய மாளக்கண்டானைச் சேர்ந்த குப்பமுத்து ஆசாரி என்னும் மரச்சிற்பக்கலைஞராவார்.தேர் செய்யும் பணியை அவரிடம் ஒப்படைத்தனர்.காளையார்கோயிலிலேயே தங்கி வேலையைத் தொடர்ந்தார்.தேர் செய்ய தொடங்கும் முன் முதலில் பிள்ளையார் உருவைச் செய்வதுதான் சிற்பிளின் வழக்கம். அப்படி செதுக்கும்போது ஒச்சம் (குறைபாடு) ஏற்பட்டுவிட்டது.அப்படி நேர்ந்தால் தேருக்குரிய மன்னருக்கு ஆபத்து என்பது சிற்பிகளிடையே ஒரு நம்பிக்கை. ஆனால் எதையும் வெளிக்காட்டாமல் தேரிலக்கண முறைப்படி, கண்டவர் வியக்கும் வண்ணம் நடமாடும் அழகுதேவதையாக சிற்பி தேரை உருவாக்கிவிட்டார் குப்பமுத்து ஆசாரி.

வெள்ளோட்டத்திற்குக் தயாரானது தேர்.தேரை வடம்பிடிக்க மக்கள் திரண்டனர்.மருதுபாண்டியர்களும் வந்துவிட்டனர். பெரிய மருதுபாண்டியர் வெள்ளை வீசி , தேர் ஓடத் தயாரானது.அருகில் தயங்கியபடி நின்ற குப்பமுத்து ஆசாரியிடம் என்ன என்று வினவினார்? பெரிய மருதுபாண்டியர்.
தேர் செய்யும்போது ஒச்சம் ஏற்பட்டுவிட்டது அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்றார்.என்ன பரிகாரம் என்றார் பெரிய மருதுபாண்டியர்.தேர் நிலைக்கு வரும்படி மட்டும் முத்திரை மோதிரமணிந்து செங்கோல் தாங்கி நான் அரசனாக இருக்க வேண்டும். இதை அரண்மனை அனுமதித்தால் தேரோட்டம் விக்கனமின்றி நடந்தேறும் என்றார்.

சிற்பி சிம்மாசனத்திற்கு ஆசைப்பட்டு சிற்பி அவ்வாறு கூறவில்லை என்றெண்ணிய பெரிய மருதுபாண்டியர் உடனே முத்திரை மோதிரத்தை அவர் விரிசல் அணிவித்து செங்கோலைக் கையில் கொடுத்துவிட்டு "இன்றுமுதல் நீர்தான் சிவகங்கைச் சீமைக்கு அரசர்" என்று அறிவித்தார்.
மக்கள் அனைவரும் ஆத்திரப்பட்டனர்.பெரிய மருதுபாண்டியர் கையைக் காட்டியதும் மக்கள் ஆத்திரம் அடங்கியது.

மன்னராக அறிவிக்கப்பட்ட குப்பமுத்து ஆசாரி தேரில் எறி வடந்தொடலாம் என்றதும் பெரிய மருதுபாண்டியர் வடந்தொடுக்க, சின்ன மருதுபாண்டியர் வெள்ளை வீச தேர் புறப்பட்டது.பாட்டாளியைப் பாராளும் வேந்தராக்கிவிட்டார் பெரிய மருதுபாண்டியர். எதிர்பார்த்ததை விட வேகமாக நகர்ந்தது தேர்.முழுத்தேராகையால் சுற்றி வரும்போது 'ஆனைமடு' எனும் திருக்குளத்தின் நீர் குமிழியிட்டதாம்.

அந்த ஆனைமடு தேரோட்டத்தை கண்டு கும்மாளமிட்டது போலிருந்ததாம் .கண் இமைக்கும் நேரத்தில் செங்கோலுடன் மன்னராகத் தேரில் வந்து கொண்டிருந்த சிற்பி திடீரென தேரின் முன்விழ சக்கரத்தில் சிக்கினார் .அவரால் செய்யப்பட்ட தேர் அவர் உயிருக்கு உலை வைத்தது.ஆனால் அது அவர் விரும்பி ஏற்றுக்கொண்டது.

உயிர் பிரியும் தருவாயில் பதிவிரதை வந்த மன்னரிடம் "அரசே ! தேர் செய்யும்போது ஒச்சம் ஏற்பட்டுவிட்டது.அது நாட்டின் அரசனுக்கு ஆபத்து என்ற எங்களுக்கிடையே உள்ள நம்பிக்கையின்படி அச்சமடைந்தேன்.அதற்கு பரிகாரமாகத்தான் தேரோட்டம் துவங்கும்முன் மன்னர் பொறுப்பை என்னிடம் ஒப்படைக்கக் கேட்டேன்.மற்றவர்கள் என்ன நினைத்தாலும் சரி எல்லோரும் இந்நாட்டின் உயிர் என மதிக்கும் தங்களுக்கு இனி ஆபத்து வராது அரசே! "என்று திணறித் திணறிப் பேசி உயிரைவிட்டார் குப்பமுத்து ஆசாரி. அதனால் அந்த தேரை தியாகத்தேர் என்று இன்று வரை போற்றுகின்றனர்.

இவ்வாறு மன்னர் உயிர் காக்கத் தன்னையே பலிகொடுத்த சிற்பியின் குடும்பத்தினருக்கு மருதுபாண்டியர்கள் மாளக்கண்டான், வெற்றியூர், சிறுவயல் முதலிய ஊர்களில் நிலங்களை மானியமாகவிட்டனர். வாழ்க மருதுபாண்டியர் புகழ்.வளர்க முக்குலத்தோர் புகழ்.

No comments:

Post a Comment